Search This Blog

Jul 13, 2011

27 நட்சத்திரங்கள் விளக்கமாக - ஜோதிடம் (பகுதி-7) பஞ்சாங்க நுணுக்கங்கள்:

27 நட்சத்திரங்கள் = விளக்கமாக
ஜோதிடம்  (பகுதி-7)   பஞ்சாங்க நுணுக்கங்கள்:

கடந்தசில அத்தியாயங்களில் ஜோதிட கலைக்கு அடிப்படையான, பஞ்சாங்கத் திற்கு அடிப்படையாக உள்ள வருடம், மாதம், சூரிய பயணம் உத்தராயணம், தட்சிணாயனம், ருது (பருவங்கள்), வாரம்-கிழமைகள், அதன் அதிபதி கிரகங்கள், சுக்லபட்ச (வளர்பிறை), கிருஷ்ணபட்ச(தேய்பிறை) திதிகள் மற்றும் ஜோதிடகலைக்கு மிக முக்கியமாக உள்ள நட்சத்திரங்கள் 27 ஆகியன கண்டோம். மேலும் நாம் பயணித்து இந்த ஜோதிட கலையின் மற்ற அம்சங்களையும் காண்போமாக!!!

இந்த 27 நட்சத்திரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அசிக்கினிக்கும் பிறந்த பெண் குழந்தைகளாகும். தட்சன் இந்த 27 பெண்களையும் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். மனமுடிந்த சிறிது காலத்திலேயே சந்திரன் ரோகிணியின் மீது மட்டுமே பாசமும் நேசமும் கொண்டுள்ளார் என மற்ற 26 பெண்களும் தட்சனிடம் முறையிட, தட்சனோ, சந்திரனை அழைத்து அனைவரிடமும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் பழக வேண்டும் என்றார். அதனை செவி மடுக்காத சந்திரனை, ஆத்திரமடைந்த தட்சன் 'சந்திரா எனது வேண்டுகோளை ஏற்காத காரணத்தால் உனது கலைகள் நாளா வண்ணம் குன்றிக் குறைந்து இல்லாமல் போகக் கடவதாக என சாபமிட்டார். 

அந்த சாபத்தின் விளைவாக சந்திரன் தன ஒளி குறைந்து ஒவ்வொரு நாளும் தேய்ந்து கொண்டே வந்தான். தவமுனிவர்களின் உதவியை நாடிய சந்திரனை, தவ முனிவர்கள், பிரம்மாவிடம் அழைத்துச் சென்றனர். பிரம்மாவோ, பிரபாஸ ஷேத்திரத்தில் உள்ள சிவனை ஆராதித்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூற, அதன்படி செய்த சந்திரனுக்கு காட்சியளித்த சிவபெருமான், "சந்திரா, பிராமணனாகிய தட்சன் கொடுத்த வாரத்திலிருந்து முழுமையாக உன்னை விடிவிக்க முடியாது, ஆயினும் ஒரு மாதத்தில் 15 நாட்கள் நீ வளரமும், 15 நாட்கள் நீ தேயவும் நான் அருள் புரிகிறேன்' என்று கூறினார்.

இதன் காரணமாகவே வர்பிறை, தேய்பிறை ஏற்பட்டது. இதன் பின்னரே சந்திரன் ஒரு நாளைக்கு ஒரு மனைவியிடம் செல்ல ஆரம்பித்தார். 

இன்னின்ன நட்சத்திரங்களில்தான் இன்னின்ன காரியங்கள் செய்ய வேண்டுமென நியதி விதிக்கப் பட்டுள்ளது. உக்கிர சுபாவமுடைய அதி தேவதைகளை அதிபதிகளாகக் கொண்ட நட்சத்திரங்களில் எந்த காரியமும் செய்யக் கூடாது. இந்த 27 நட்சத்திரங்களுக்கும் அதிதேவதைகள் உண்டு. இந்த தேவதைகள் நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் பிரித்து வைக்கப் பட்டுள்ளனர். அவைகளை மனதில் கொள்ளத்தக்க விதத்தில் ஒரு பாடல் கீழே..

கூடாத நட்சத்திரங்கள்:-

"ஆதிரை பரணி கார்த்திகை 
ஆயிலிய முப்புரம் கேட்டை 
தீதுறு விசாகஞ் சோதி 
சித்திரை மகம் மீராரும் 
மாதனங்கோண்டார் தாரார் 
வழி நடைப்பாட்டார் மீளார் 
பாய்தனில் படுத்தார் தேறார் 
பாம்பின் வாய் தேரை தானே"

விளக்கம்:- பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில்
யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்பிவராது. பிரயாணம் சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரமாட்டார். வியாதியுடன் படுக்கையில் படுத்தவர் குணம் அடைய மாட்டார் . 

இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களும் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு அந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் கெட்டவர்களாக இருப்பதே காரணமாகும். இந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

நட்சத்திரம்....அதி தேவதை...நட்சத்திரம்...அதிதேவதை.

பரணி..................எமன்................பூரட்டாதி.......குபேரன் 
கார்த்திகை.....அக்கினி....... ....கேட்டை ......இந்திராக்கினி 
திருவாதிரை...உத்திரன்...........விசாகம் ......குமரன்
ஆயில்யம்.......ஆதிசேஷன்.......சித்திரை ......விஸ்வகர்மா
பூரம் ...................பார்வதி.............சுவாதி .........வாயு 
பூராடம்..............வருணன் ..........மகம்..............பித்ரு தேவதைகள். 

மேற்கண்ட  அதி தேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்கள் ஆதலால் இந்த நட்சத்திரங்கள் அசுப நட்சத்திரங்களாக கருதப் படுகிறது. ஒரு சுப காரியத்திற்கு நாள் குறிக்கும் பொழுது மேற்கண்டவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

இனி  கீழே கொடுக்கப்படும் இணைப்பினை சுட்டி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான விளக்கங்களும், அந்த நட்சத்திர தம்பி சமேதகராக வீற்றிருக்கும் கோயில்களும், அதன் இருப்பிடம் பற்றிய குறிப்பும், ஒருவரின் ஜாதக பலன்களுக்கு இந்த நட்சத்திரங்களின் பலாபலங்களுக்குரிய காரண, காரிய ஆதி அந்தங்களை காண்போம்.
*********************************************************************

அனைத்து நட்சத்திரங்களின் புகைப்படம், கோயில் இருப்பிடம் காண இணைப்பை சுட்டுக:


******************************************************************************* 
நட்சத்திரங்கள் 27 -க்கும் ஒருவரின் ஜனனகாலத்தில் கணிக்கப்பட்டு ஜாதககுறிப்புக் களில் காணவேண்டிய மிக முக்கியமான விபரங்களை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட சுட்டிகளுக்கு எதிர் கண்டுள்ள நட்சத்திர பெயர்களின் படி சொடுக்கி விபரங்களை அறிந்துகொள்ளவும்.
  1. அஸ்வினி...........http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/127.ht​ml
  2. பரணி.......http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/blog-p​ost_14.html
  3. கார்த்திகை.............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1227.h​tml
  4. ரோகினி...................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/0427.h​tml
  5. மிருகசீரிஷம்.......http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/0527.h​tml
  6. திருவாதிரை.........http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/0627.h​tml
  7.  புனர்பூசம்...............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/0727.h​tml
  8. பூசம்...........................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/0827.h​tml
  9. ஆயில்யம்..............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/0927.h​tml
  10. மகம்..........................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1027.h​tml
  11. பூரம்...........................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1127.h​tml
  12. உத்திரம்..................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1227.h​tml
  13. ஹஸ்தம்...............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1327.h​tml
  14. சித்திரை.........http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/0527_1​5.html
  15. சுவாதி.....................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1527.h​tml
  16. விசாகம்...............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1627.h​tml
  17. அனுஷம்..............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1727.h​tml
  18. கேட்டை...............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1827.h​tml
  19. மூலம்......................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1927.h​tml
  20. பூராடம்......................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/2027.h​tml
  21. உத்திராடம்.............http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/2127.h​tml
  22. திருவோணம்..http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/1327_1​5.html
  23. அவிட்டம்.................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/2327.h​tml
  24. சதயம்........................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/2427.h​tml
  25. பூரட்டாதி..................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/2527.h​tml
  26. உத்திரட்டாதி.........http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/2627.h​tml
  27. ரேவதி.........................http://keyemdharmalingam.b​logspot.com/2011/07/2727.h​tml
*********************************************
மேலும் பயணிப்போம் அன்புடன் கே எம் தர்மா...

2 comments:

  1. மிகவும் முக்கியமான பல குறிப்புக்களடங்கிய இந்த பதிவு ஜோதிடவியலுக்கு, ஜாதகங்கள் கணிப்பதற்கும், பலன் கூறுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை !!!!!

    ReplyDelete
  2. http://www.dinamalar.com/Supplementary/E-malar.asp?ncat=Natchathiramalar&showfrom=04/24/10#top

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!