Search This Blog

Showing posts with label சித்தர்கள் சிந்தனைகள்.. Show all posts
Showing posts with label சித்தர்கள் சிந்தனைகள்.. Show all posts

Nov 7, 2011

மர்மக்கலை எனப்படும் வர்மக்கலை: அறிந்து கொள்வோமே!!!

மர்மக்கலை எனப்படும் வர்மக்கலை:
மருத்துவக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும் விளங்குகின்றது  வர்மக்கலை என்று கேள்விப் பட்டிருக்கின்றோம். நவீன மருத்துவ உலகில் இதனைப் பற்றியும் ஆரய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் காணக்கிடைக்கின்றன. இதற்கான பயிற்சியும், சில வர்மக்கலை நிபுணர்களால் தற்சமயம் வகுப்புக்கள் நடத்தப் பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதனைப் பற்றி பலகுறிப்புக்கள் சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது. இக்கலையை அகத்திய மாமுனி என்னும் சித்தர் உருவாக்கியதாக செய்திகளும், குறிப்புக்களும் கூறுகின்றன. இந்த வர்மக்கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய "ஓடிவுமுறிவுசாரி" என்ற நூலே மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

நமது உடல் நரம்பு மண்டலங்களால் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது என்பதனை நாமறிவோம். இந்த மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் 108 உயிர்நிலைகள் உள்ளதென அகத்தியரின் குறிப்புக்களில் அறியப்பட்டுள்ளது.
அவைகளின் தொகுப்பு:-
தலைப்பகுதி................................37 வர்ம நிலைகள்.
நெஞ்சுப்பகுதி.............................13 வர்ம நிலைகள்.
உடலின் முன்பகுதியில்........15 வர்ம நிலைகள். 
முதுகுப் பகுதியில்...................10 வர்ம நிலைகள்.
கைகளின் முன்பகுதியில்....09 வர்ம நிலைகள்.
கைகளின் பின்பகுதியில்.....08 வர்ம நிலைகள்.
கால்களின் முன்பகுதியில்.19 வர்ம நிலைகள்.
கால்களின் பின்பகுதியில்...13 வர்ம நிலைகள்.
கீழ்முதுகுப் பகுதியில்............08 வர்ம நிலைகள்.  

இந்த உயிர் நிலைகளை முறையாகக் கையாளுவதன் மூலம் உடலை வலிமையாக்கவும், வலுவிழக்கச் செய்யவும் முடியும். இவ்வாறு மிக நுட்பமாக கையாளும் இந்த கலையே வர்மக்கலை எனப்படுகிறது. இக்கலையை நான்கு பிரிவுகளாக படுவர்மம், தொடுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம் என பகுத்துள்ளனர்.

படுவர்மம்:- படுவர்மம் என்ற பிரிவு மிகவும் அபாயகரமானது என்றும், இந்த படுவர்மத்தில் ஏற்படும் தாக்குதலுக்கு  ள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம். உடனடியாக மயக்கமும், வாய் பிளந்துநாக்கு வெளியே தள்ளி நுரைத் தள்ளும். அடிபட்ட இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும். மிகுந்த பயிற்சியுள்ள ஒருவரால் மட்டுமே இதனை செய்திட முடியும்.

தொடுவர்மம்:- படு வர்மம் போல பலமாகத் தாக்கப் படுவதன் மூலமே ஏற்படுகின்றது. இருப்பினும் படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது. எளிதில் குணப்படுத்த இயலும்.

தட்டுவர்மம்:- ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கப்படுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாகத் தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்:- வர்மக்கலை நிபுணர் தனது பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன்மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்குவர்மமாகும். இந்த வர்மமுரையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்திய மாமுனிவர், நோக்குவர்மா முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவுகள், அடிகள் போன்றவை பற்றியும், அவற்றால் அடையும் பாதிப்புக்களையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் அகத்தியர் குறிப்பிட்டிருக்கின்றார். சில உயிர் நிலைகளில் ஏற்படும் பாதிப்புக்களுக்கு சிகிச்சைகள் இல்லையென்றே குறிப்பிடுகிறார். மேலும் இந்த சிகிட்சைகளுக்குத் தேவையான மருந்த்கலான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவைகளைத் தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளையும் இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கின்றது. 

இக்கலையை பயில அடிப்படையான தகுதிகள் சிலவற்றை தனது நூலில் அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும், நிதானமும், பதட்டமோ கோபப்படும்தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படைத் தகுதியாகக் கூறுகின்றார். மேலும் எதிரிகளைத் தாக்கும் நோக்கத்துடன் கற்காமல், மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.

இவர்கள் தங்களின் உயிருக்கு ஆபத்து நேரும் தருனமன்றி, வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதனை பிரயோகிக்கக் கூடாது. அப்படியான சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் எதிரியைத் தாக்கி வீழ்த்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தேர்ந்த வர்மக்கலை நிபுணன் ஒருவன் எத்தகைய பலசாளியையும் ஒன்றிரண்டு தாக்குதலிலேயே எதிரியை நிலை குலைய வைத்து வீழ்த்தி விடமுடியும். குறிப்பிட்ட சில வர்மபுள்ளிகளைத் தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.

சித்த மருத்துவத்தில் இதனை உள்ளடக்கி மருத்துவங்கள் செய்யப்படுகின்றன. தற்காப்புக் கலையாக உருவான இந்த கலை, காலப்போக்கில் மருத்துவ சிகிச்சைக்கும் மேற்கொள்ளப்பட்டது.  வர்மக்கலை, இதனை மர்மக்கலை என்றும் 'நரம்படி' என்றும் கூறுகின்றனர்.

வர்மக்கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே தற்காலத்தில் நம்மிடையே இருக்கின்றார்கள். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினராக உள்ளனர். குருமுகமாக இந்த வித்தையைக் கற்றுக்கொண்ட எவரும் விளம்பர வெளிச்சத்திற்கு விருப்பம் கொள்வதில்லை என்பது அறிந்ததே. இக்கலை  உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக நுட்பமான கலையாகும்.   
http://varmam.org/workshops/workshopschedule.php   மேலதிக தகவல்களுக்கும் பயிற்றுவிக்கும் தொடர்புக்கும் காண்க:  இனிய நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டி.. அன்புடன் கே எம் தர்மா....

Aug 3, 2011

மாயஜால சக்திகளைத் துறந்து ஆத்மா விடுதலை


வாயிலிருந்து லிங்கம் எடுப்பதும், வெறும் கையில் விபூதி மற்றும் தங்க சங்கிலி எடுப்பதும் பல சாமியார்களின் சித்து வேலையாக இருக்கிறது. இந்த சித்துக்கள் நிஜமானதா? அப்படி செய்கின்ற வர்களை குருமார்கள் என கருதலாமா? என்று பலருக்கு சந்தேகம் உண்டு. இன்னும் பலரோ சித்து வேலைகளை கண்டு பிரமித்து மயங்கி விடுகிறார்கள்.  நம்மால் செய்ய முடியாததை இத்தகைய சாமியார்கள் செய்யும் போது அவர்களிடம் விஷேச சக்தி இருப்பதாக நினைத்து மலைப்படைந்தும் விடுகிறார்கள்.

பதஞ்சலி மகரிஷி என்பவர் யோக சூத்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கைவல்லிய பாகம் என்ற பகுதியில் இந்த மாதிரி பல சித்துக்களை பற்றி மிக விரிவாகவே சொல்கிறார். என்னென்ன சித்துக்கள் செய்யலாம்சித்து செய்யும் சக்தியை எந்த வகையில் பெறலாம் என்பதை பற்றியெல்லாம் விவரிக்கிறார். முக்காலத்தையும் கூறுவது, தண்ணீல் நடப்பது, ஆகாயத்தில் பறப்பது என்று சித்துக்களின் மிக நீண்ட பட்டியலையும் தருகிறார்.
அந்த நூலில் கடைசியாக மாபெரும் சித்து சக்தியாக அவர் எதை குறிப்பிடுகிறார் என்றால் தன்னையும், தன் புலனையும் அடக்கி மாயஜாலசக்திகளை துறந்து ஆத்ம விடுதலை பெறுவதே  அவர் கூறும் மாபெரும் சித்தாகும்.  

யோக வாழ்க்கையில் நடுப்பகுதியில் யோகம் பயில்பவர்களுக்கு சில அதீத சக்திகள் உண்டாகும்.  தரையிலிருந்து ஒரு அடி உயரமாவது எழுவது, நினைத்தது எல்லாம் நடப்பது, கேட்பதெல்லாம் கிடைப்பது, சொல்வதெல்லாம் பலிப்பது என்று இன்னும் சில சக்திகளை பெறலாம்.  பெருவாரியான யோகிகள் இந்த சக்தி கிடைத்தவுடன் தாங்கள் முழுமை பெற்று விட்டதாக நினைத்து பொது ஜனங்களிடத்தில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.  இதனால் அவர்கள் ஆத்ம விடுதலையை நோக்கி பயணபடாமல் சாதாரண உலக சுகங்களில் மயங்கி கிடக்கிறார்கள்.

ஆண்டவனை அடைய நினைக்கும் யோகிக்கு ஆண்டவனை காண துடிக்கும் ஞானிக்கு சித்துக்கள் என்பது மலத்துக்கு சமமானது. ஞானிகளுக்காக இறைவனே சில சித்துக்களை நடத்தி காட்டுவானே தவிர ஞானிகள் அதை செய்யமாட்டார்கள். யோக வாழ்க்கையில் முறைப்படியான பயிற்சி பெறுவதன் மூலம் சித்துக்கள் பெறுவது ஒருவகை.   போலியாக பல சித்துக்களை செய்து காட்டுவது இன்னொருவகை. வாய்க்குள் இருந்து லிங்கம் எடுப்பதெல்லாம் சரியான மோசடியாகும். 

வெறுங்கையில் விபூதி வரவழைப்து, மலர்களை வரவழைப்பது, தங்க சங்கிலிகளை வரவழைப்பது என்பதில் பல மோசடிகள் இருந்தாலும் தாந்ரீக கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்ற சில சாமியார்கள் யட்சினி என்ற முக்கால் பங்கு பைசாசத்தை வசியப்படுத்தி இம்மாதிரியான காரியங்களை செய்கிறார்கள். வேறு சில சாமியார்கள் தங்களது ஆடைகளுக்குள்ளோ உடம்பிற்குள்ளோ பொருட்களை மறைத்து வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியிலெடுத்துக் காட்டி நம்மை அதிசயத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள். ஒரு உண்மையான சாது தன்னிடம் ஆயிரம் சித்து சக்தி இருந்தாலும் அதை தேவை இல்லாமல் தன்னை பெருமை படுத்திக் கொள்ளும் விதத்தில் வெளிப்படுத்த மாட்டார். ஆனால் தன்னை முழுமையாக நம்பிய மனிதர்களுக்காக கடவுளின் திருவுள்ளத்தை உணர்ந்து பயன் படுத்துவார்

சில சாதுக்கள் அப்படி செய்தற்காக பயனாளிகளிடம் காணிக்கை கூட பெருவார்கள் . ஆனால் அந்தக் காணிக்கை அவர்களின் சொந்த உபயோகத்திற்கு எடுக்க மாட்டார்கள். ஆலயத் திருப்பணிகள் சமூக சேவைகள் என்று செலவு செய்து விடுவார்கள் . இப்படிப்பட்ட நிறையபேர்களை நானறிவேன். எனவே சித்து வேலைகள் செய்பவர்கள் அனைவரும் போலிகள் என்றும் கூற இயலாது. இந்தத் தரவரிசையில் அசலையும் போலிகளையும் அடையாளம் காணுவது சாதாரண மனிதர்களுக்கு சற்று கடினம்தான்

Aug 2, 2011

ஆண், பெண், அலியாவது, 100 ஆண்டு வாழ்வது எப்படி?



சித்தர் சிந்தனைகள்: 

ஆண், பெண், அலியாவது ஏன்?

"
பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(
திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.
 



குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(
திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப் பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால் குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(
திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.
 


100 ஆண்டு வாழ்வது எப்படி?

நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆயிரம் பிறைகள் காண முடியும். ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று பின்வரும் பாடலில் கூறுகிறார்.

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே

(-
திருமந்திரம் 479)

பிறப்பு இறப்பு பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கும் திருமூலர் பதில் கூறுகிறார்.
நன்றி: by Nàthàn கண்ணன் Suryà on Friday, June 18, 2010 at 5:50am