Search This Blog

Showing posts with label மனதிற்கு பிடித்த கவித்துளிகள். Show all posts
Showing posts with label மனதிற்கு பிடித்த கவித்துளிகள். Show all posts

Sep 11, 2011

வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்...

நம்மை
இழுத்துச் செல்லும் ஓட்டுனர்.....
நம் வண்டியில்
நாம் மட்டுமே பயணி....
துயரமோ..இன்பமோ.....
எதுவாகினும்.....
ஓட்டுனர் நிற்பதில்லை ...
போரிட்டு எதிர்ப்பவர்கள்
கூடவே பயணிப்பர்.....
முடியாதவர் பின்னால் ஓடுவர் ,
விட்டதை எடுத்தும் ,
விடுபட்டதை பொறுக்கிக் கொண்டும்......
பெரும்பாலோனோர் அப்படித்தான்.....
இலக்கு தெரியாமலே பயணம்
தொடரும்.....
ஓட்டுனருக்கு அது வேலையில்லை....
நம்மை கூட்டிச்செல்லுவது
அவர் கடமை......
வாழ்க்கைப் பயணத்தில சாதித்தவர்
மட்டுமே பயணிப்பர்..இறந்தாலும்.!!!!!
பின்னால் வருபவர்
முந்தினால் கூட.....
பயணத்தில் அவர்கள் பெயர்
உச்சரிக்கும் வரை.....பயணம் தொடரும்.....
ஆம்...சாதித்தவர்களை
சரித்திரம் படைத்திட்டோரை
இப்பவும்
நினைவு கொள்கிறோமே.....
ஆக அவர்கள் பயணம்
தொடர்வது உண்மைதானே...
பயணத்தில் நொடிகளே
சக்கரம்....
நிமிடங்கள் மூக்கணாங்கயிறு...
ஓட்டுனர் காலம்....
வளைவோ நெளிவோ இல்லை ....
நேர்கோடுதான் பாதை .....
யாருக்காகவும்
மூக்கனாங்கயிரை மட்டும் இழுப்பதேயில்லை.....!!!!
பின்னால் வருவோரையும்,
இன்னும் வருவோரையும்
நம் பெயர்
உச்சரிக்கும் வரை
தொடரவைப்போமா......
இல்லை காலபெட்டியில்
பெயரே இல்லாமல்
நம் பயணம் தொடருமா......!!!!!

படித்ததில் பிடித்தது, நண்பர் தாமரைவண்ணன் கைவண்ணத்தில் உருவாகிய இந்த பயணம் தொடருமா? மிக்க முக்கியமான கேள்வியை எனது மனதில் எழுப்பி என்னை சிந்திக்கத் தூண்டிவிட்டது. அன்பு நண்பர் தாமரை வண்ணன் அவர்களுக்கு எனது மனம்கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!!!!!

Aug 28, 2011

துணிந்திடு, வென்றிடு, வாழ்ந்திடு



துணிந்திடு, வென்றிடு, வாழ்ந்திடு

by Ravindran Ravi on Thursday, July 28, 2011 at 6:16pm
உன்னைச் சுற்றிலும்
ஓ நாய்,குள்ளநரி
கூட்டங்கள்
உன் முன்னேற்றத்தின்
குரல் வளையை
கடித்து குதறிட
காத்துகிடக்கின்றன.
எச்சரிக்கையாய் இரு.
அதன் தந்திரங்களூம்
சூழ்ச்சிகளூம் உன்னை
வீழ்த்துவதர்க்கு
வியூகம் அமைக்கின்றன,
ஆனால் நீயோ
கர்ச்சிக்கும்
சிங்கமாயிற்றே!!
இந்த ஓநாய், குள்ளநரி
கூட்டங்களூக்கா
கலங்க போகிறாய்,
சலியாத கடும் உழைப்பும்,
தைரியமும்,
தன்னம்பிக்கயும்,
துணிச்சலும்
விவேகமும்,வீரமும்
விடா முயற்சியும் கொண்ட
தன்மான தமிழனல்லவா நீ,
உன்னை வென்றிட
யாரால் இயலும்!!
இதோ வாழ்வினை
வென்றிட கரம் பற்றிடு
நம் தமிழ் பெண்ணை,

இல்லறத்திற்கு
இனியவளாம்
அன்பிலும்
அறிவிலும்
கற்பிலும்
நல்ல பண்பிலும்
பாசத்திலும்
துணிச்சலிலும்
விவேகத்திலும்
புத்திசாதுர்யத்திலும்
வல்லவளாம்
நம் தமிழ் பெண்ணை
கரம் பற்றி
வாழ்வினை
வென்றிடு
வையகம் போற்றிட
வாழ்ந்திடு!!!
அமுதமளித்தவளும்
ஆன்ந்தமடைவாள்...ஆ.ரவிந்திரன்  எனது படைப்பு.

அன்பு  நண்பர் ரவீந்தரன் படைப்புக்களில் படித்தது, பிடித்தது..அன்புடன் கே எம் தர்மா...

குழந்தை-by Ravindran Ravi


குழந்தை
இல்லத்தில் அமர்ந்திருந்த போது
மனமோ சோகத்தில் மூழ்கியிருந்தது
செய்வதறியாது திகைத்திருந்தபோது,
மன எண்ணங்கள் அலைபாய்ந்தது,
திடீரென
மழலையின் சிரிப்பிற்கே
உரித்தான சிரிப்புடன்
வேகமாக தவழ்ந்து
வந்த மழலையை
அள்ளி அணைத்திடும்
முன்னரே
என் உடல் மீது ஏறி
விளையாடதொடங்கிவிட்டது
அதன் பிஞ்சு விரல்கள்,
என் உதடுகளையும்,
கன்னங்களையும்,
வருடியதுமே
மெய்மறந்து
போனேன்,
தன்னிலை
மறந்தேன்.
அதன் வாயினில்
உமிழ்ந்த உமிழ்நீரோ
சில்லென
என் உடல் மேல்பட்டு
அபிசேகம் செய்திருந்தன
மார்பை,துடைத்திடவும்
மனமின்றி
சிலையாகிபோயிருந்தேன்
அது தந்த முத்தத்தினால்,
என் மனமோ
குழந்தையாகி
விளையாடியது

மழலையுடன்,
மனதிலிருந்த
சோகமோ
திசைதெரியாமல்
போய்விட்டிருந்தது
மனமோ மழலையுடன்
ஒன்றிவிட்டிருந்தது.

ஆ.ரவிந்திரன்....எனது  படைப்பு (by Ravindran Ravi on Sunday, July 31, 2011 at 2:25am)


மனதிற்கு பிடித்த - படித்த பனித்துளிகள், நண்பர் ரவி அவர்களின் படைப்பில்...அன்புடன் கே எம் தர்மா.....

எனது வரிகள் -(by Ravindran Ravi


மனதில் நிறைய சோகங்கள்,
ஏக்கங்கள், வருத்தங்கள்
கவலைகள்
அவையனைத்தும்
சட்டென மறந்தன
உன் அழகு கவிதை கண்டு.
இனிது,இனிது அழகு, அழகு
தமிழ் மொழி இனிது,
அதனினும் இனிது
கவிதையில் நீ சேர்க்கும் அழகு தமிழ் சொற்கள்
உனக்கு தான் எங்கு கிடைகின்றனவோ
அழகான தமிழ் வார்தைகள்
எப்படி இருப்பினினும் வா
வந்து என் கவலையை
அகற்றிவிட்டு போ,
நித்தமும் வணங்குவேன்
உன்னை என் மனதினுள் நிறுத்தி.
ஆ.ரவிந்திரன்..,எனது வரிகள்(by Ravindran Ravi on Saturday, July 23, 2011 at 1:06pm)

முகநூல் நட்புக்களின் கவிதை படைப்புக்களில் மனதுக்கு பிடித்தமானவைகளை இந்த தலைப்பில் மீள்பதிவு செய்துள்ளேன். வலைபூவிற்கு விஜயம் செய்யும் நண்பர்கள் தங்களின் பின்னூட்டக் கருத்துக்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்கின்றேன்...அன்புடன் கே எம் தர்மா..