Search This Blog

Dec 10, 2014

ஜோதிர்லிங்கங்கள் 01/12 ஆன்மீக வரிசையில்.

ஜோதிர்லிங்கம் கோவில்கள் - 001/012

இருப்பிடம் : குஜராத் மாநிலத்தில் துவாரகைக்குச் செல்லும் வழியில் தாருகாவனம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
மூலவர்: நாகநாதர்
அம்மன்/தாயார்: நாகேஸ்வரி
தீர்த்தம்: பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாகதீர்த்தம். பழமை:2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர்: தாருகாவனம் ; மாவட்டம்: ஜாம்நகர் ; மாநிலம்: குஜராத்
அருகிலுள்ள ரயில் நிலையம்:அவுரங்காபாத் அருகிலுள்ள விமான நிலையம்:அவுரங்காபாத் தங்கும் வசதி : அவுரங்காபாத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.
*****************************************
தலபெருமை:
நாகநாதரின் கோயில் மிகப்பழமையானது. ஜோதிர்லிங்கத் தலங்களிலேயே முதன்முதல் தோன்றிய தலம் என்றும் கூறுகின்றனர். கோயிலின் நான்கு பக்கங்களிலும் உயர்ந்த மதிற்சுவர்களும் உள்ளே பரந்த விசாலமான இடமும் உள்ளது. கிழக்குப் பக்கத்திலும், வடக்குப்பக்கத்திலும், வாயில்கள் உள்ளன. அதில் வடக்கு பக்கம் வாயில் மட்டும் பெரிதாகவும், புழக்கத்திலும் உள்ளது. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் மிக உயரமாகவும், அநேக சிற்பவேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் காணப்படுகிறது. கோயில் கோபுரத்தின் கீழ் கர்ப்பகிரகத்தினுள் ஒரு மேடை மட்டுமே உள்ளது. கர்ப்பகிரகத்தின் இடப்பக்கம் மூலையில் மட்டும் ஒரு நான்கடி நீளம், நான்கடி அகலமுள்ள சுரங்கப் பாதை உள்ளது. அதன்வழியே உள்ளே சென்றால் பூமிக்கடியில் ஒருசிறு அறையில் மூலவர் நாகநாதர் இருக்கின்றார். அந்தச்சதுரமான துவாரத்தின் வழியே பக்தர்கள் குதித்து தான் இறங்க வேண்டும். மேலே வரும்போது தாவித்தான் ஏறி வர வேண்டும். 

பக்தர்கள் நெருக்கத்தின் காரணமாக உள்ளே செல்வதும், மேலே ஏறி வருவதும் வயதான பக்தர்களுக்குச் சற்றுக்கடினமாகவே உள்ளது. பாதாள அறையில் நிற்கமுடியாது. மேற்கூறை தலையில் முட்டிக்கொள்ளும். பக்தர்கள் குனிந்து சென்று மூலவரைச் சுற்றி அமர்ந்து தான் சாமியைத் தரிசிக்க வேண்டும். மூலலிங்கம் சிறியதாக உள்ளது. 

வெள்ளியிலான முகபடாம் கவசம் வைத்து வழிபடுகின்றனர். அங்கு அமர்ந்திருக்கும் பண்டாவிற்கு தட்சிணை கொடுத்தால் கவசத்தை நீக்கி லிங்கதரிசனம் செய்ய வழி செய்கின்றனர். அந்தக் கர்ப்பகிரகத்தினுள் காற்றோட்டவசதி கிடையாது. தற்போது பேன் வசதி செய்துள்ளார்கள். என்றாலும் அதிகமான பக்தர்கள் உள்ளே சென்றால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் பொறுமை காத்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.

தல வரலாறு:
நாகநாதம் என்னும் இக்கோயில் உள்ள பிரதேசம் முன்பு பெரும் காடாகவும், வனமாகவும் இருந்தது. அக்காலத்தில் இது தாருகவனம் எனப் புகழ் பெற்றதாக விளங்கியது. தாருகவனத்தில் பல ரிஷிகளும், முனிவர்களும், தங்கள் மனைவிமார்களுடன் வாழ்ந்து வந்தனர். தாருகவன முனிவர்கள்
மிகுந்த தவ வலிமையாலும், தங்களது பத்தினிகளின் பதிவிரதத் தன்மையாலும் மிகவும் கர்வம் கொண்டனர். 

இறைவன் இல்லை, தவம் செய்தலே சிறந்தது என்றும் இன்னும் பலபடியாக நாத்திகம் பேசி வந்தனர். மேலும் சிவபெருமானையும் மதியாமல் அவ மரியாதையாகவும் பேசியும் செயலில் ஈடுபட்டும் வந்தனர். தங்களது தர்ம பத்தினிமார்களின் கற்புநிலையைக் கொண்டு மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். 

ஒருவன் எவ்வளவுதான் பலமிக்கவனாக இருந்தாலும் அவனுக்கு மிகுந்த பலத்தையும் புகழையும் தருவது அவனுடைய மனைவியின் மாண்பே ஆகும். தாருக வனத்து முனிவர்களின் கர்வத்தை அகற்றி அவர்களை நல்வழிக்குத் திருப்ப வேண்டுமென சிவபெருமான் திருவுளம் கொண்டார். எனவே சிவபெருமான் மிக அழகிய ஆண்மகனின் திருஉருவம் கொண்டு நிர்வாணமாகத் தாருகவனம் சென்றார்.

தாருகவனத்து முனிவர்கள் பர்ணக சாலை தோறும் சென்று வாசலில் நின்று பிச்சாந்தேகி எனக்கூறி, பிச்சாடனமூர்த்தியாக பிச்சை கேட்டார். பிச்சையிட வந்த முனிவர்களின் பத்தினிகள் பிச்சாடன மூர்த்தியின் அழகையும் பிரகாசத்தையும் கண்டு தம் கருத்தையிழந்து அவர் உருவுமேல் மோகம் கொண்டனர். பத்தினிமார்கள் அனைவரும் தம் கருத்தழிந்து சிவபெருமான் பின்னாலேயே தங்களையும் அறியாமல் சென்றனர். 

தாருகவனத்து முனிவர்கள் அனைவரும் தத்தம் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே அப்பெண்கள் பின்னாடியே பதறிக் கொண்டு ஓடினார்கள். சிவலீலை என்ன வென்று கூறுவது? முனிவர்களின் மனைவிமார்கள் சிவபெருமான் பின்னாடியே வர அவர் சிவசிவ எனக் கூறிக்கொண்டே பெரும்காட்டுப் பகுதிக்குச் சென்றார். நடுக்காட்டில் ஒரு குளத்தின் கரையிலிருந்த ஒரு பெரும் நாகப்பாம்பின் புற்றுக்குள் சென்று மறைந்து விட்டார்.

முனிவர் மனைவியர் யாவரும் அப்பாம்புப் புத்தினை அணுகி அதனையே சுற்றிச் சுற்றி வந்தனர். தாருகவனத்து முனிவர்கள் அவர்களை எவ்வளவோ வருந்தி வேண்டிக் கூப்பிட்டும் அவர்கள் வரவில்லை. சிவபெருமான் நுழைந்த பாம்புப் புற்றினுள்ளிருந்து மிகுந்த பிரகாசம் வெளியே வந்தது. யாவரும் உள்ளே எட்டிப்பார்க்கையில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாகக் காட்சி தந்தார். 

அந்த ஜோதிர்லிங்கத்தின்மீது ஐந்து தலை நாகம் படமெடுத்து குடை போல நின்றது. இக்காட்சியைக் கண்ட அனைவரும் அங்கு வந்தது சிவபெருமானே என உணர்ந்தனர். தங்கள் கர்வத்தை விட்டு சிவபெருமானைப் புகழ்ந்து அவரை வழிபட்டனர். அவ்விடத்தே பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் இத்தலம் ஆகும். 

இவ்வாறு சிவபெருமான் பிட்சாடனராக சிவலீலை புரிந்து தாருகவனத்து முனிவர்களின் கர்வத்தைப் போக்கி நாத்திகவாதத்தையும் போக்கி நாகப்பாம்பின் புற்றுக்குள் நாகத்தின் குடையுடன் காட்சி தந்தமையினால் நாகநாதர் எனவும் தலத்திற்கு நாகநாதம் எனவும் பெயர் வந்தது. ஜோதி வடிவமுடன் காட்சி தந்தமையினால் ஜோதிர்லிங்கமாயிற்று.

Dec 9, 2014

http://sarabeswara.blogspot.in/2014/01/sri-sai-nagar-kanchipuram-tirumalpur.html

Nov 18, 2014

அறிவியல்புரம்: கிரகங்கள் உண்டாவது எப்படி?

அறிவியல்புரம்: கிரகங்கள் உண்டாவது எப்படி?

Dec 12, 2012

சந்திரன் முக்கியத்துவம்


கிரகங்களின் வரிசையில் இரண்டாம் இடம் சந்திரன் 

முன்னுரை: சந்திரனின் முக்கியத்துவம்:
ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்களைத் தொடங்கலாம், எந்த கால கட்டங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்து கொள்வதற்கு பல வழி முறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்கினமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கின்றோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடைத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில். இதில் இருந்து சந்திரனின் முக்கியத்து வத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடு கின்றோம். சந்திரன் இருக்கும்  நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்கின்றோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கின்றோம். சந்திரன் இருக்கும் ராசிப்படித்ஹான் கோச்சார பலன்களைப் பார்க்கின்றோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோவில்களில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கின்றோம்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் "சந்திராஷ்டமம்" ஒன்று.

சந்திராஷ்டமம்:
நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கின்றோம். சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம காலம்' ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த சத்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.

ஆகையால், இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேஷம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடமாட்டார்கள். குடும்ப  விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால், சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர் மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் சந்திரன் மனோகாரகன். மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துக்களிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சந்திரன் ஜெனனஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் (6,8,12) இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம்,ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தினால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சந்திரன் இருக்கும் இடம்:

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளைக் கடந்து விடும். இப்படிக் கடக்கும் பொழுது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகின்றது. அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?

சந்திரன் நாம் பிறந்த ராசியில்
(1)-இல் இருக்கும்பொழுது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும், ஞாபக மறதி உண்டாகலாம்.
2- இல் இருக்கும் பொழுது: பணவரவுக்கு வாய்ப்புண்டு, பேச்சில் நளினம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.  
3- இல் இருக்கும் பொழுது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள்.
4- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய் வழி ஆதரவு.
5- இல் இருக்கும் பொழுது: ஆன்மீக பயன்கள், தெய்வபக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம், தாய் மாமன் ஆதரவு.
6- இல் இருக்கும் பொழுது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன், வீண் விரயங்கள், மறதி, நஷ்டங்கள்.
7- இல் இருக்கும் பொழுது: காதல் நலிந்கங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம், பெண்களால் லாபம், மகிழ்ச்சி.
8- இல் இருக்கும் பொழுது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்லுகின்றோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளுதல், கோவிலுக்கு சென்று வருதல் நல்லது.
9- இல் இருக்கும் பொழுது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.
10- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.
11- இல் இருக்கும் பொழுது: தொட்டது துலங்கும், பொருள்சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.
12- இல் இருக்கும் பொழுது: வீண் வியங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்து கொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் நட்சச்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே உங்களுக்கு சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி
அணுஷம்
பரணி
கேட்டை
கிருத்திகை
மூலம்
ரோகினி
பூராடம்
மிருகசீரிஷம்
உத்திராடம்
திருவாதிரை
திருவோணம்
புனர்பூசம்
அவிட்டம்
பூசம்
சதயம்
ஆயில்யம்
பூரட்டாதி
மகம்
உத்திரட்டாதி
பூரம்
ரேவதி
உத்திரம்
அஸ்வினி
அஸ்தம்
பரணி
சித்திரை
கிருத்திகை
சுவாதி
ரோகினி
விசாகம்
மிருகசீரிஷம்
அணுஷம்
திருவாதிரை
கேட்டை
புனர்பூசம்
மூலம்
பூசம்
பூராடம்
ஆயில்யம்
உத்திராடம்
மகம்
திருவோணம்
பூரம்
அவிட்டம்
உத்திரம்
சதயம்
அஸ்தம்
பூரட்டாதி
சித்திரை
உத்திரட்டாதி
சுவாதி
ரேவதி
விசாகம்