Search This Blog

Showing posts with label தமிழும் இலக்கியங்களும். Show all posts
Showing posts with label தமிழும் இலக்கியங்களும். Show all posts

Dec 16, 2011

ஐந்திணை எழுபது: பதினெண் கீழ்கணக்கு நூல்கள்

ஐந்திணை எழுபது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு)  : தமிழும் இலக்கியங்களும்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 

நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்
,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".

இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
 
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.

புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

*********************************************************************************
ஐந்திணை எழுபது:
ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

ஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்ட மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக் கூறுகின்றது.

எடுத்துக்காட்டு:-
இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும்.
வெளியிணைப்புகள்:-
மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது  திணைமாலை நூற்றைம்பது அன்புடன் கே எம் தர்மா...
 
Dec 15, 2011

ஐந்திணை ஐம்பது : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

ஐந்திணை ஐம்பது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு)  : தமிழும் இலக்கியங்களும்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 

நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்
,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".

இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
 
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.

புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

********************************************************************************* 
ஐந்திணை ஐம்பது
 
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது.

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலை களுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.

ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.

எடுத்துக்காட்டு:

பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது.

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.

வெளியிணைப்புகள்:  ஐந்திணை ஐம்பதையும் உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுப்பு - மதுரைத் திட்டத்திலிருந்து

.மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே!! தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது திணைமொழி  ஐம்பது அன்புடன் கே எம் தர்மா...
 
கார்நாற்பது : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

கார்நாற்பது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு)  : தமிழும் இலக்கியங்களும்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 

நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்
,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".

இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
 
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.

புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

*********************************************************************************
கார்நாற்பது: அகத்திணை நூல்.

பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. 

சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந்நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:
கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின் போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந் நூற் பாடல் இது:

நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை.
**************************************

கார் நாற்பது:

முகவுரை சிறப்புப் பாயிரம் செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை மேல்  அடுத்தப்பக்கம்
இனிய  நட்புக்களே மேலே காணும் இணைப்புக்களை சொடுக்கி முகவுரை, சிறப்புப் பாயிரயம், செய்யுளின் அகரவரிசை முதற்குறிப்பு, முதல் பக்கம் மற்றும் அடுத்தப் பக்கங்களில் 40 பாடல்களை விளக்கங்களுடன் காணலாம்.
***********************************************************
கார் நாற்பது  முகவுரை சிறப்புப் பாயிரம் செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை மேல்  அடுத்தப்பக்கம்
************************************************************* 
 
.மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே!! தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது ஐந்திணை ஐம்பது  அன்புடன் கே எம் தர்மா...
 
இனியவை நாற்பது : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

இனியவை நாற்பது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு)  : தமிழும் இலக்கியங்களும்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 

நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்
,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".

இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
 
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.

புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

*********************************************************************************
இனியவை நாற்பது:-
பூதன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக் காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. 

எடுத்துக்காட்டு: சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கர்ப்பித்தல் மிகவும் நல்லது: கற்றறிந்த பெரியோர்களைத் துணைக் கொண்டு வாழ்தலும் மிக நன்ற; சிறிய அளவிலாயினும் தேவைப் படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராய் ருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. 

இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

இனியவை நாற்பது - மூலம் கடவுள் வாழ்த்து:
 
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

(அருஞ்சொற்பொருள்: கண்மூன்றுடையான்- சிவபெருமான்; துழாய்மாலையான்- திருமால்/பெருமாள்; முகநான்குடையான்- பிரமன்; ஏத்தல்-போற்றித்துதித்தல்.)

நூல்: பாட்டு: 01

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
நற்சவையில் கைக்கொடுததல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

(அருஞ்சொற் பொருள்: நற்சவை- நற்சபை/நல்அவை; கைக்கொடுத்தல்- உதவுதல்; சாலவும்- மிகவும்; தெற்றவும்- தெளிவாக; மேலாயார்- பெரியோர்கள் / மேலானவர்; சேர்வு - சேர்ந்திருத்தல் / துணைக் கொள்ளுதல்)
 
இனியவை நாற்பது பாடல்கள் விளக்கங்களுடன் எட்டு பதிவுகளில் கீழேகண்ட வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காண விருப்பம் கொண்ட அன்பர்கள் http://keyemdharmalingam.blogspot.com/ இணைப்பினைச் சொடுக்கி - இனியவை நாற்பது பாடல்களும் விளக்கங்களும் என்ற தலைப்பில் - கண்டு, படித்து, ரசித்து களிக்க வேண்டுகின்றேன். மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே!!  இனியவை நாற்பதின் பாடல்களின் ஊடாக.. நாமும்தான்.. கண்டு களித்து, படித்து ரசித்து, வாழ்க்கையில் கைக் கொள்ளுவோமே!! இனிய வாழ்கை அமைய வேண்டி... தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது கார் நாற்பது  ..... அன்புடன் கே எம் தர்மா...