Search This Blog

Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

May 20, 2012

ஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி ! படித்ததில் பிடித்தது

ஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி ! படித்ததில் பிடித்தது:
Sunday, 20 May 2012 06:48




யோகப்பயிற்சிகள் மிகவும் எளிமையாகவும், அதிசயக்கத் தக்க வகையிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன. குறிப்பாக தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்வர்களுக்கு பாலியல் தொடர்பான விடயங்களில் இருக்கும் ஆர்வம் குறைந்து போய்விடுகிறது. இவர்கள் அதிலிருந்து மீண்டுவர உதவுகிறது உட்டியாணா ஆசனம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். சுறுசுறுப்பு வந்தடையும்.

செய்யும் முறை:


அரை அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கால்களை விரித்து நிற்கவும். இரண்டு கைகளையும் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை மட்டும் முன் பக்கமாக சிறிது குனியும் படி வளைக்கவும். இப்படி இருக்கையில் வயிற்று பகுதியில் இறுக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். மேலும் சுவாசப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியில் விடவும்.



இப்போது வயிற்றை உள்ளுக்குள் இழுத்து எக்கவும். இதே நிலையில் ஐந்து அல்லது பத்து விநாடிகளுக்கு அப்படியே நிறுத்தி, பிறகு மூச்சை மெதுவாக இழுத்தவாறு வயிறை தளர்த்தவும். பிறகு நிமிர்ந்து, சாதாரண மூச்சை இரண்டு மூன்று தரம் இழுத்து விட்டு மறுபடி மேற்சொன்னது போல் திரும்பவும் செய்யவும்.



ஆரம்ப நிலையிலேயே படத்தில் உள்ளவாறு செய்ய வருவது கடினம். ஆனால் முடிந்த அளவு முயற்சிக்கவும். சிறிது முயற்சியுடன் தினம் தினம் செய்து வந்தால் ஒரு கட்டத்தில் சரியாக செய்ய வந்து விடும். முழுதாக செய்ய முடியவில்லை என்றாலும், செய்த வரையும் பலன் உண்டு.



தொந்தி வயிறு இருப்பவர்கள் தங்களால் இதை செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்பட வேண்டாம். தினம் தினம் வயிற்றை சிறிது உள்ளிழுத்து எக்க பழகிக் கொண்டு வந்தால் சிறிது காலத்தில் வயிறின் இரண்டு பக்கமும் ஒரு நேர்கோடு போல் குறிப்பிட்ட பகுதி சதைகள் மட்டும் ஒடுங்க தொடங்கும். இதை வைத்தே ஆசனம் கைக்கு வரத் தொடங்கி விட்டதை கண்டு கொள்ளலாம்.

இந்த நிலையில், நாம் ஏற்கனவே சொன்ன சில ஆசனங்களை செய்து பழகி வந்தால் ஒரு கட்டத்தில் வயிறும் கரைய தொடங்கி விடும். தொந்தி இருக்கிறதே என்று எக்காரணம் கொண்டும் இந்த ஆசனத்தை விட்டு விடக் கூடாது. பொதுவாக யோகாசனங்களை செய்ய தொடங்குபவர்கள் உணவில் கொழுப்பு சத்து கலந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவது நல்லது.



பலன்கள் :

உட்டியாணா ஆசனத்தை தொடர்ந்து செய்து வரும் போது, மலச்சிக்கல், அசீரணம், வாய் துர்நாற்றம், பலவீனம் ஆகியவை விலகும். இடுப்பு சதைகள் வலுவடையும். இனவிருத்திக் கோளங்கள், அது தொடர்பான தாதுப்பை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமடையும். ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
 

ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது நல்ல பலனை தரும். பதினான்கு உள்பட்ட சிறுவர்கள் யாரும் இதனை பயிலக்கூடாது. மேலும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், வயிற்றில் புண் இருப்பவர்கள் (அல்சர்) இருதய பலவீனம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். 


படிப்போம்: பயிற்சி செய்வோம்: பலனடைவோம் இனிய நண்பர்களே!!! மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு. அன்புடன் கே எம் தர்மா.. 

May 5, 2012

இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா?

நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா?

படித்ததில் பிடித்தது : May 4, 2012

உலகமே ஒரு TV பெட்டிக்குள் , அல்லது கம்ப்யூட்டருக்குள் அடங்கிவிட்டது இப்போதெல்லாம். எவ்வளவோ நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. Discovery ,  NGC சானல்களில் எல்லாம் வரும் நிகழ்ச்சிகள் சில சமயம் கொஞ்சம் கூட போரடிப்பதில்லை. ஆனால், இதில் ஒரு ஆபத்தும் ஒளிந்து இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு, நான் NGC யில் நைல் நதி பற்றிய ஒரு டாக்குமெண்டரி பார்த்தபோது, எத்தியோப்பியாவில் ஒரு ரெஸ்டாரன்ட். காண்பித்தார்கள். ஆட்டம் , பாட்டம் - குடி , கூத்து... இப்படியே உற்சாகமாக இருந்தது. நான்-வெஜ் - ஸ்லைஸ் ஸ்லைஸ் ஆக ஒரு இடத்தில் அடுக்கி இருந்தது. அத்தனையும் வேக வைக்காத மாட்டு இறைச்சி. ஆடிக்கொண்டே , மது அருந்திக்கொண்டே - ஆலிவ் ஆயில் தடவிய அந்த இறைச்சியை , அப்படியே பச்சையாக மென்று கொண்டு இருந்தனர். பார்த்து , அப்படியே மிரண்டுவிட்டேன்.

ஆள் ஒவ்வொருத்தரும் , கர்லாக் கட்டை மாதிரி உடம்பு வைத்துக்கொண்டு நெடு நெடு என்று இருந்தனர். ஒருவேளை அவர்கள் உடம்புக்கு செரிக்குமோ என்று எண்ணம் தோன்றியது. மனதுக்குள் உடனேயே - எதியோப்பியாவில் இருப்பவர்கள் எல்லாம் பச்சையாவே கறி சாப்பிடுறாங்கப்பா.. ன்னு ஒரு எண்ணம் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.


ரொம்ப நாளைக்கு அப்புறம், ஆப்பிரிக்காவில் இருந்த நண்பர் ஒருவரை கேட்டபோது, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஏதாவது ஒன்னு, ரெண்டு பேர் அப்படி இருக்கலாம். நான் பார்க்க யாரும் அப்படி இல்லைன்னு சொன்னார். அப்பாடான்னு இருந்தது. அந்த நிம்மதி கூட கொஞ்ச நாளைக்குத்தான் இருந்தது - இன்னொரு விஷயம் கேள்விப்படும்வரை . எங்க ஊர்ல ஒரு பொண்ணு. பார்க்கிறதுக்கு நல்லா , அழகா அம்சமா இருக்கும். காலேஜ் படிச்ச பொண்ணு. அவங்க வீட்டுல மட்டன் சமைச்சா கிளீன் பண்றப்போ, ஒன்னு ரெண்டு கறித்துண்டு அப்படியே பச்சையா சாப்பிடுமாம். 'ஹா , என்ன கருமம்டா இது ' ன்னு ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணை பார்த்தாக்கூட - அந்த அழகைத் தாண்டி , கொஞ்சம் அருவருப்பு - மிரட்சி தான் இருந்தது. ஒரு நாள் , நேரடியாவே கேட்டுட்டேன். பச்சையா கறி சாப்பிடுவியா..? ஒரு மாதிரியா இல்லை.. நாம என்ன மனுஷனா.. இல்லை மிருகமான்னு..!


ரொம்ப கூலா சொல்லுச்சு. "ஏன் , வேகவைச்சு சாப்பிட்டா மட்டும் நாம மனுஷங்க ஆயிடுவோமா? "  - அதே வேதம் புதிது படத்துல வர்ற கை, படார் , படார்னு அடிச்சது. (தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? )

  
என்ன வார்த்தைடா சாமி..?  அதானே பச்சையா கறி சாப்பிடுற மிருகத்துக்கும், வேகவைச்சு , மசாலா போட்டு சமைச்சு சாப்பிடுற நமக்கும், ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லையே...? ஐயர் ஊட்டு ஆளுங்க எல்லாம் , கறி சாப்பிடுற ஆளுங்களை ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாங்கன்னு அப்போதான் தோண ஆரம்பித்தது.

அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அந்த பொண்ணு பக்கா வெஜிடேரியனாம். பாப்பா பார்க்கிறதுக்கு அழகா இருக்குதுன்னு, அது கூட இருந்த பொண்ணே - இந்த மாதிரி செய்தியை கெளப்பிவிட்டு இருக்கு.   ஆரும் பாக்கப்படாது, ஆரும் பேசப்படாது, ஆரும் தண்ணி கொடுக்கப்படாதுன்னு அதுவே நாட்டாமை மாதிரி முடிவு எடுத்திருக்கு. 


இது எதுக்கு சொல்ல வர்றேன்னா, எந்த ஒரு விஷயம் படிச்சாலும், கேட்டாலும், ஏன் டிவில பார்த்தாலும் படக் படக்குன்னு நம்பிடாதீங்க...


டிஸ்கவரி சானல்ல - பழைய இந்தியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி , ஹரித்வார் கும்பமேளா நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறப்போ - கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் , பரவச உற்சாகத்தில் - மேனியெல்லாம் விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு , காவி வேஷ்டி அணிந்த சாமியார்களை காட்டுவார்கள். பாம்பாட்டி, குரங்காட்டி என்று ஒரு ஸ்லாட்டாவது வரும்.


இதையெல்லாம் பார்க்கும் வெளி நாட்டுக்காரர்கள் மனதில்  - ஓ.. இந்தியாவில் இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மனோபாவம் வந்துவிடுகிறது. சமீபத்திய IT புரட்சி நடந்து, இந்தியர்கள் உலகம் முழுவதும் இன்னும் அதிகமாக வசிக்கத் தொடங்கியபின், கொஞ்சம் மனோபாவம் மாறி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். இப்போதும், வெளி நாட்டில் இருந்து இங்கு வரும் நண்பர்கள், யாராவது காவி வேட்டியைக் கண்டால்  கொஞ்சம் மிரளத் தான் செய்கிறார்கள். மந்திரம் போட்டு விடுவார்களாம். நமக்குத் தானே தெரியும், இங்கு காவி கட்டி  பிச்சை எடுக்கும் பெரும்பாலோர் பிழைக்க வழியில்லாமல் / வேலை செய்ய பிடிக்காத சோம்பேறிகள் என்று.


ஆனால், மேலை நாட்டு தத்துவம் படிப்பவர்கள் - நமது இந்தியாவை ஒரு ஞான பூமியாகத் தான் பார்க்கின்றனர். விஞ்ஞானம் விளங்க முடியாத பல விஷயங்கள் , இங்கு இருக்கும் சில துறவிகள் அனாயசமாக செய்வது, அவர்கள் வியக்கும் ஒன்று.


பால் பிரண்டன் என்பவர் - ஒரு அறுபது , எழுபது வருடத்துக்கு முன்பு இந்தியா வந்தவர். உலகம் முழுவதும் - எகிப்திய பிரமிடு, இஸ்லாம் , இந்தியா , மந்திரவாதிகள், சித்தர்கள் என்று ஒரு விஷயம் கூட விடவில்லை. பிரித்து மேய்ந்து இருக்கிறார். அவரது புத்தகங்களை படித்த வெளிநாட்டவர்கள் - கூட்டம் கூட்டமாக இந்தியா வரத் தொடங்கினார்கள். இந்தியாவில் உள்ள ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதை அவர் தன் அனுபவக் கட்டுரைகளாக விவரித்து இருந்த விதம் அருமை. 


உலகம் முழுவதும் தேடிக்கொண்டு இருந்த விஷயத்துக்கு , அவருக்கு விடை கிடைத்த இடம் எது தெரியுமா? எத்தனையோ மத குருமார்களுடன் ,  இந்தியாவிலும் மந்திரவாதிகள், சித்தர் புருஷர்கள் என அவருக்கு அனுபவம் இருந்தபோதிலும், கடைசியில் அவர் மனம் ஒடுங்கிய இடம், ரமண மகரிஷியிடம். அண்ணாமலையின் அடிவாரத்தில், அற்புதமான அருள் அலைகளுடன் - ஒரு மகான் அமர்ந்து இருப்பதை அவர் விவரித்து இருப்பதைப் படித்துப் பாருங்கள்.


எங்கிருந்தோ வருபவர்களுக்கு உள்ள தேடல், நாம் இன்னும் தொடங்கக் கூட இல்லாத ஒரு விஷயமாக இருப்பதை உணரமுடியும். சரி,  வாருங்கள் பால் பிரண்டன் நம்மிடம் எதையோ சொல்லக் காத்திருக்கிறார்...


"ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''


 "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள்.
உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"


பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.


"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"


பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.


மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"


"அதை எப்படி அறிவது"


"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"


"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"


"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"


"
இதில் ஒரு குரு தேவையா?"

"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"


"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"


"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"


பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.


"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"


ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."


அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.


ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "
குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"


"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."


"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில்.
"மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட    எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள்.


அட, ஒருவேளை இந்த மாதிரி வர்ற திருடர்கள் கூட ஏமாந்து போகக்கூடாதுன்னு நினைச்சித்தான் , இந்த கால (ஆ) சாமிகள் நிறைய பணத்தை சேர்த்து வைக்கிறாங்களோ..  (# டவுட்டு) 

 ரமண மகரிஷி  அந்த கொள்ளையர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

காரணம்
ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர் களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."

எப்பேர்ப்பட்ட மகான் பிறந்த பூமியில் நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா? உடனே இப்போ இருக்கிற ஆளுங்களை நினைச்சு கோபப்படாதீங்க. சாதாரண வேங்கட ரமணன் என்னும் சிறுவன், ரமண மகரிஷியாக மாறும்போது, நம்மால் அந்த அளவு முடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் நாம் யார் என்பதாவது உணர முற்படுவோமே..!


நாம், நம்ம வீடு, நம்ம ஊர், நம்ம நாடு, பூமி, சூரிய மண்டலம், பால்  வெளி, அண்ட பேரண்டம் - பற்றியெல்லாம் பார்க்கிறப்போ - அட போய்யா... இதுல கடவுளாவது ஒன்னாவது ... ... இதுல கடவுள் எங்கே இருக்க முடியும்? அப்படி ஒருத்தர் இருந்தா, நம்மளை பார்க்கிறது தான் வேலையா அவருக்குன்னு ஒரு கேள்வி வரலாம்....


உங்களுக்கு வருதோ , இல்லையோ - எனக்கு வருது....

இதோ , நாளைக்கு சித்ரா பௌர்ணமி. சித்திர குப்தன் பிறந்த நாள்னு ஒரு சிலர் சொல்றாங்க. அதுக்கு ஒரு கதை வேற.நம்ம செய்ற பாவ புண்ணியம் எல்லாம், அவர் கணக்கு வைப்பாராம். பயங்கர காமெடியா இருக்கு ... என்று தான் தோன்றுகிறது இல்லையா..?

ஆனா, சத்தமே இல்லாம சில மந்திர ஜெபங்கள் ஜெபித்து , நினைத்ததும் அகத்தியர் போன்ற சித்தர்களை தரிசனம் செய்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்களே..! தீராத சில பிரச்சினை களுக்கு அவர்கள் மூலம் தீர்வும் பெறுகிறார்களே.. சித்தர் இருப்பது உண்மை யெனில், அந்த இறைவன் ஒருவர் இருப்பது நிஜம் தானோ..?  வள்ளலாருக்கும், ரமணருக்கும், ராம கிருஷ்ணருக்கும் கடவுள் காட்சி கொடுத்தது உண்மையென்றால், நமக்கும் அந்த பாக்கியம் ஏன் கிடைக்காது , முழுமையாக நம்பி, அவன் இடத்தில் நம் தீர்வு தேடுவோம்... வெற்றி நிச்சயம். 


இறைவனுக்குக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல குரு ஒருவர் இருந்தால்  நம்  வேலையும் எளிது. தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை.. ஆனால் என்னதான் இருந்தாலும், ரமண மகரிஷி கூறியது போல அவரவர் தனிப்பட்ட அனுபவம் வேண்டும். அது கிடைக்க நாம் நம்முள்ளே தேடுவோம்...

.......................... தேடுவோமா?

பதிவினைத் தந்த வலைதளத்திற்கு (
http://www.livingextra.com/2012/05/blog-post.html#ixzz1u0vZmWi2) மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு: அன்புடன் கே எம் தர்மா..

Apr 14, 2012

சமூக சிந்தனையாளர்: டாக்டர் அம்பேத்கார்



நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கடிமை யாரும் இல்லை. இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று 14.04.1891.


பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.

டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

சமூகப்பணிகள்:
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படு கையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப் பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித் துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். 


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. 

இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப் பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரா கவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல் பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது ,அதன் ஒரு பகுதியான “இந்து சட்டத் தொகுப்பு மசோதா"விற்கு பாராளு மன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்கததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். ( 1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952 ல் அந்த சட்டம் நிறைவேறியது) சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 - டிசம்பர் 6-ல் காலமானார்.

அம்பேத்கர் கருத்துக்கள்:
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனை களைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப் படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?  இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலை போல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும்.


யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சி களின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’  1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள்:

 

பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தன் அமைச்சர் பதவியைத் துறந்த முதல் மனிதர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து மற்றும் மறுமணம் போன்ற முற்போக்கான அம்சங்களடங்கிய இந்துச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பெரிதும் முயன்றார். 

பார்ப்பனர்களும் இந்து வெறியர்களும் இம்மசோதா நிறைவேறா வண்ணம் தடுத்து நின்றனர். நேருவும் பார்ப்பனர்களுக்கு அஞ்சி இம்மசோதாவை நிறைவேற்ற அளித்த உறுதிமொழியிலிருந்து நழுவினார். இதனைக் கண்டு மனவேதனை அடைந்த அம்பேத்கர் தன் அமைச்சர் பதவியை உதறியெறிந்துவிட்டு காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

பெண்களின் பிரச்சனையும் தீண்டத்தகாதவர்கள் பிரச்சனையும் ஒன்று தான் என்றும் இருவர் மீதும் தீட்டு என்கிற கருத்து திணிக்கப்பட்டிருக்கிறது என்றும் இரு பிறப்பாளருக்கான தகுதி இருவருக்கும் மறுக்கப்பட்டிருக் கிறது என்றும், பெண் மீது ஆண் திணித்திருக்கிற எல்லா கோட்பாடு களையும் மீறாத வரை பெண்ணுக்கு விடுதலையே இல்லை என்றும் எழுதினார். 


இலட்சியப் பெண்கள் புராண இதிகாசங்களில் எவ்வாறு ஒடுக்கப்பட்டிருந் தார்கள் என்றும், பெண்களை மனு எவ்வாறு இழிவுப்படுத்தினார் என்றும் அம்பலப் படுத்தினார். இந்துச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதங் களில் பெண்கள் விடுதலைக்கென எவ்வாறு சளைக்காமல் வாதாடினார் என்பதை தொகுதி 31இல் விரிவாக அறியலாம்.

அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்:

முனைவர் அம்பேத்கரின் பன்முக வெளிப்பாடுகளில் மிகவும் முக்கியமானவை அவரது பொருளியல் சிந்தனைகளாகும். அவரது முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், அறிவியல் முனைவர் பட்டம் அனைத்தும் பொருளாதார ஆய்வுகளுக் காக வழங்கப்பட்ட பட்டங்களே ஆகும். அவரது பொருளாதார ஆய்வுகள் முழுக்கமுழுக்கத் தீண்டத் தகாதவரின் கண்ணோட்டத்தில் அமைந்தவையே. சாதியமைப்பின் பல்வேறு பொருளியற் பண்புகளை ஆராய்ந்த அவர் ஆதிக்க சாதியினரின் கையில் உற்பத்திக் கருவிகள் அனைத்தும் இருப்பதாகவும், சூத்திர மற்றும் தீண்டத்தகா தோரிடம் உழைப்பு மட்டும் இருப்பதாகவும் கூறினார்.

அம்பேத்கர் பெரிதும் முன்நிறுத்துவது அரசு சோசலிசமாகும். அதையும் அவர் இந்திய அரசியல் சட்டத்தின் வாயிலாக நிறுவப்பட வேண்டுமென விரும்பினார். அதன்படி,

1. முதன்மைத் தொழில்கள் அரசுக்குச் சொந்தமாய் இருக்கும்.
2. அரசால் அது நிர்வகிக்கப்பட வேண்டும்.
3. வேளாண்மை அரசுத் தொழிலாக இருக்க வேண்டும்.
4. வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு காப்புநிதியளிக்க வேண்டும்.
5. நிலங்கள் கூட்டுப்பண்ணைகளாக்கப்படவும், அப்பண்ணை கள் கிராம மக்களிடம் சாகுபடிக்கு விடப்படவும் வேண்டும்.
6. நிலங்கள் சமஅளவில் உழைப்பைக் கோருவதால் சாதி சமய வேறுபாடுகளோ, நிலவுடமையாளர்- குத்தகைதாரர் வேறுபாடுகளோ இராது.
7. பாசனநீர், உழவுக்கருவிகள், உரம் முதலியன வழங்குவது அரசின் கடமையாகும் என்று கூறினார்.

நிதி ஒதுக்கீட்டில் இ

ராணுவத்திற்கென அதிக அளவு ஒதுக்கப்படுவதைத் தவிர்த்து மக்கள் நலப்பணிகளுக்கு நிறைய நிதியை ஒதுக்க வேண்டும் என்றார். 

காஷ்மீர் பிரச்சனை இன்றைக்கு கூடுதலான கவனத்தை பெற்றிருக்கும் சூழலில் காஷ்மீரைத் தனியே பிரித்துக் கொடுத்து விடுவதே நல்லது என்றார். மதுவிலக்கு தேவையற்றது. பசியில் வாடுபவனா, குடிகாரனா? யாருடைய நலன் என்கிற கேள்வி வந்தால் நாம் பசியில் வாடுபவனின் பக்கமே நிற்க வேண்டுமென்றார்.

சமூக மாற்றம் குறித்து:

 
"இந்தியாவில் ஏன் சமூகப் புரட்சி நடக்கவில்லை என்ற கேள்வி ஓயாது என்னைத் துன்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரே பதில்தான் என்னால் தர முடியும். துயரமான நால்வர்ண முறையானது கீழ்மட்ட வர்ண இந்துக்களை நேரடி நடவடிக்கையில் இறங்காவண்ணம் முழுக்கவே தகுதியற்றவர்களாக்கி விட்டது. அவர்கள் ஆயுதம் ஏந்த முடியாது. 


ஆயுதம் ஏந்தாமல் கலகம் செய்ய முடியாது. இவர்கள் எல்லாம் உழவர்களாக இருக்கிறார்கள் அல்லது உழவர்களாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே தங்கள் விளைச்சலை ஆயுதம் தாங்கியவர்களோடு பரிமாறிக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. ஆகவே மற்றவர்கள் அவர்களை ஆண்டு வருகிறார்கள். நால்வர்ண முறையின் காரணமாக அவர்களால் கல்வி கற்க முடியாது. தங்கள் மீட்சி குறித்து அல்லது அதற்கான வழிமுறை குறித்து அவர்களால் சிந்திக்க முடியாது. அவர்கள் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இதிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை அறிந்திருக்கவில்லை. தப்புவதற்கான வழிமுறை களையும் பெற்றிருக்கவில்லை. நிரந்தரமான அடிமைத்தனத்தோடு பிணைக்கப்பட்டது தங்களுடைய தப்பிக்க முடியாத தலைவிதி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆயுதம் தாங்கிய புரட்சி குறித்து அம்பேத்கர் எழுதியது வெறும் வெற்றுச் சொல்லாடல்கள் அல்ல. அதன் உள்ளீடாகத் தெரிவது வர்க்கப் புரட்சிதான். ஆனால் வர்க்கம் உருவாக இங்கே சாதி தடையாக உள்ளது. எனவே வர்க்கப் போராட்டத்தின் முன் நிபந்தனை சாதி ஒழிப்பாகும். சாதி ஒழிப்பு தான் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டும். 


எனவே சாதி ஒழிப்புதான் இந்திய சமூகத்தின் முதல் புரட்சியாகும். சாதி அமைப்பை நிலவுடைமை யின் மேல் கட்டுமானம் என்கிற மார்க்சீயர்களின் அணுகுமுறையிலிருந்து அம்பேத்கர் விலகும் புள்ளி இதுதான். வர்க்கப் புரட்சி என்ற ஒன்று நடந்தாலும் அப்போதும் சாதி இந்தியச் சமூகத்திற்குச் சவாலாகவே இருக்கும். எனவே, சாதி ஒழிப்பே இந்தியச் சமூகத்தின் மிக அவசியத் தேவையாகும்.

பொன்மொழிகள்.....

ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப் படுபவரே உயர்ந்த மனிதர்.

முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

“ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினரை அடக்கி ஒடுக்குவதும், இழிவாக நடத்துவதும் ஆகிய இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் வரை – இந்தியாவில் சுதந்திரமான ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும், சோசலிசக் கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சோசலிசத்தில் பல்வேறு வகுப்புகளுக்கும் குழுக்களுக்கும் சமத்துவம் கிட்டும் என்று நம்புகிறேன். சோசலிசம் மட்டுமே இந்தப் பிரச்சனைகளையும் இதைப் போலவே மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான உண்மையான வழி எனவும் நான் நம்புகிறேன்.”

நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் – சாதிக் கொடூரன் வந்து வழி மறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக்காமல், அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது.

---------------------------------------------------------------------------
 

படித்ததில் பிடித்தது : விருட்சம் பதிவாளர்களுக்கு மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு.  இனிய நண்பர்களே நீண்ட இடை வெளிக்குப் பின் இணையத்தில் உலவ முடிகின்றது. அன்பு நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  பயணம் தொடரட்டும்.  அன்புடன் கே எம் தர்மா....

Mar 27, 2012

‘விதி’யை நம்மால் மறுக்கமுடிவதில்லை' படித்ததில் பிடித்தது.




தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின்யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாத வையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக் கெட்டாத ஏதோ ஒரு விதி அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப் பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?



முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-



1.       ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2.       இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின்அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3.       இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போதுபிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4.       இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச்செத்தார்கள்.

5.       இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள்உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6.       ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன்பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7.       இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறுவருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8.       இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத்தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

9.       பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒருகிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர்நோக்கி ஓடினான்.

10.     லிங்கனின் செயலாளரின்முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.



இன்னொரு சம்பவம் Life  பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை. இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள்வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது. 



1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல்உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பலஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதேநாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார்.  இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன்தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.



ஹென்றி சீக்லேண்ட் (HenryZiegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக்கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும்கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டு பிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சிலவருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால்அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக்கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.



Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இரு குடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்லவேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.


மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவஅதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டுஇருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப்பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.



இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்தசம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்காவிட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதியை நம்மால் மறுக்கமுடிவதில்லை அல்லவா?
****************************************************************


பதிவு-என்.கணேசன் மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு.. மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா..

Mar 9, 2012

குருவின் அவசியமும் அநாவசியமும் !! படித்ததில் பிடித்தது:

உண்மையான குரு அகத்திலுள்ள நான் எனும் ஆன்மாவே, மனிதன் தனது உடலினை பார்த்தறிவதற்கு கண்ணாடி எப்படி உபயோகமாகிறதோ அது போல் எமது உண்மையான சொருபத்தினை அறிவதற்கு தன்னை அறிந்த ஒரு புறக்குரு தேவைப்படுகிறார், அவர் ஒரு கருவி மட்டுமே! இதுதான் உனது உண்மையான சொரூபம் என காட்டிவிட்டபின் அந்த அனுபவத்திலிருந்து எமது உண்மையான ஆன்ம சொருபத்தினை அறிவது நான் ஆகிய எமது அகக்குருவின் வேலை, இந்த படிமுறையில் (குருவை மையமாக கொண்ட எந்த ஆன்மவித்தையிலும் தாந்திரீகத்தில்) தன்னை உணர வைக்கும் செயல் முறையான தீட்சை மட்டுமே குருவால் கொடுக்கப்படுகிறது, அதன் பின் மாணவன் தனது சுய முயற்சியாலும், தேவைப்படி ஆன்மாவினை அறியும் நோக்கத்தில் சலனமுறும் போதும் அவரவர் பக்குவத்திற்கமைய அகக்குருவும், புறக்குருவும் வழிகாட்டுகின்றனர்.

இந்திய ஆன்ம மரபில் பொதுவாக சித்த குருக்களும், தாந்திரீக குருக்களும் மாணவன் பக்குவமடைந்த பின் தம்முடைய பாதையினை சுயமாக தேர்ந்தெடுத்து தமது சாதனையினை தொடர்வதற்கு அனுமதிக்கின்றனர். சமூக அலகில் அது நிறுவனமயப்படுத்தப்படும் போதும், ஞானத்தால், சாதனையால் பெறும் சக்திகளை, சித்திகளை தமது அகங்காரத்தினால் துஷ்பிரயோகம் செய்ததாலும், அவற்றை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனங்களாக மடங்களும், பீடங்களும் உருவாகும் போதுதான் நாம் விவாதிக்கும் குரு சிஷ்ய சேவை, பணம், என ஆன்ம ஞானத்திற்கு உபரியான மற்றைய விடயங்கள் வருகின்றன.

இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது உலகில் பலவிதமக்கள் தமது மன உருவகங்களுக்கு ஒவ்வொரு விடயங்களிலும் திருப்தி உறுகின்றனர். உணவைப் போல், சினிமாவைப்போல், பொழுதுபோக்கு போல் மனதின் அடிமையான மனிதனிற்கும் ஆன்மீகமும் பலவித சுவைகளில் தேவைப்படுகிறது. இவற்றை திருப்திப்படுத்த முனையும் குரு உண்மையான ஞானத்தினை கொடுப்பதில்லை. அல்லது நோக்கம் வழி மாறுகிறது, இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் சிக்கி தமது மனநிம்மதி யினையும் பணத்தினையும் இழந்து பின்பும் மனப் போராட்டத்தில் சிக்கி இந்த மார்க்கமே பொய் என்ற மனவிரக்தியில் பலர் புலம்புவதை நாம் காண்கிறோம்.

ஆகவே ஆன்மீக  பாதையில் செல்ல விரும்புபவர்கள் குருவின் அவசியத்தினையும் அநாவசியத்தினையும் புரிந்திருப்பது அவசியம்! இல்லாவிடில் வீண் மனக்குழப்பம்தான் எஞ்சும்! 
==============================================









Posted by சுமனன்: மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு: 
மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா..

Feb 11, 2012

டார்வினும் இந்திய இலக்கியங்களும் ஒற்றுமை - படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்தது: டார்வினின் பரிணாமக் கோட்பாடு இந்திய இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: விளக்கமாக தனது பதிவினில் விளக்கியுள்ளார் பால கங்காதரன் அவர்கள்: 

தச அவதாரம்:  பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின். உயிரினங்கள் நீரினில் உருவாகி பல்வேறு மாற்றங்களை அடைந்து மனிதன் என்ற நிலையை அடைந்நதது என்பது டார்வினின் கோட்பாடு. டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு முன்பே பல நுhற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய இலக்கியங்களில் பரிணாமக் கோட்பாடு பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. அந்த விவரங்கள் பக்தி இலக்கியங்களில் காணப் படுவதால் பக்தியாக மட்டுமே, மத ரீதியாக மட்டுமே, பார்க்கப் பட்டு விட்டதால் அதில் உள்ள உண்மைத்தன்மை இந்த உலகத்திற்கு தெரிய முடியாமல் போய் விட்டது.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு இந்திய இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப் பட்டிருக்கிறது  என்பதைப் பற்றிப் பாரப்போம். திருமாலின் அவதாரங்கள் பத்து எனக் குறிப்பிடப் படுகின்றன. அவை,

1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமன அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. ராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்
***********************
1. மச்ச அவதாரம் : (மச்சம் என்றால் மீன்)
மீன் நீரினில் வசிக்கும் உயிரினம். பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது  என்பதைக் குறிப்பதே மச்ச அவதாரம் ஆகும்.
 
2. கூர்ம அவதாரம்  : (கூர்மம் என்றால் ஆமை)
ஆமை நீரிலும் வாழும் நிலத்திலும் வாழக் கூடிய ஒரு உயிரினம். நீரில் வாழ்ந்த உயிரினங்கள் நீரானது வற்றிப் போன காலங்களில் நிலத்திலும் வாழ்வதற்குரிய மாற்றங்களை உடல் அமைப்பில் பெற்று காலப்போக்கில் நீரிலும், நிலத்திலும் வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது. தகவமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு ஒத்துப்போகும் வண்ணம் மாற்றிக் கொள்ளுதல். பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் கால மாற்றத்திற்கு தகுந்த படி நீரிலும் , நிலத்திலும் வாழ்வதற்கரிய உடல் அமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே கூர்ம அவதாரம்.
  
3. வராக அவதாரம்  : (வராகம் என்றால் பன்றி)
நீரிலும், நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நீரானது வற்றிப் போன காலங்களில நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது. பன்றி நிலத்தில் வாழும் ஒரு உயிரினம். ஆனால் அது நீரில் வாழ்ந்த அதன் பதிவுகள் கலையாத காரணத்தினால் அதன் பதிவுகளின் துhண்டுதலினால் அடிக்கடி போய் சாக்கடையில் போய் படுத்து கொள்கிறது. பரிணாம வளர்ச்சியில் நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே வராக அவதாரம் ஆகும்.
 
4. நரசிம்ம அவதாரம்: 
நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மம் என்றால் மனிதனும், சிங்கமும் சேர்ந்தது என்று பொருள். சிங்க தலையும், மனித உடலும் சேர்ந்தது தான் நரசிம்மம். பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதன் வரும்போது விலங்கின் உடலும், மனிதன் உடலும் சேர்ந்து தான் இருந்தது. அதைக் குறிப்பிடுவதே சிங்க தலையும்,  மனித உடலும் ஆகும். நாளடைவில் தான் முழு மனிதன் உடல் உருவானது. பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக மாற்றம் அடையும் போது விலங்கும், மனிதனும் சேர்ந்த நிலை தான் இருந்தது என்பதைக் குறிப்பதே நரசிம்ம அவதாரம்.
 
5. வாமன அவதாரம் :
வாமன அவதாரம் மூன்று அடி அளவு தான் உடையது. பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக அதாவது முழுமையான மனிதனாக மாற்றம் அடையும் போது முதன் முதலில் குள்ளமாக மூன்றடிக்குள் தான் இருந்தான் என்பதைக் குறிப்பதே வாமன அவதாரம்.

6. பரசுராம அவதாரம் :
மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக காட்டு மரங்களை வெட்டியும், தன் பசியை தீர்த்துக் கொள்வதற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடியும் காட்டில் உயிர் வாழ்ந்தான். பரிணாம வளர்ச்சியில் காட்டில் வாழ்ந்த மனிதன் காட்டில் உயிர் வாழ்வதற்கும், தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும், ஏற்ற விதத்தில் கையில் கோடாரி வைத்திருந்த மனிதனாக பரசுராம அவதாரத்தை உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .
 
7. ராம அவதாரம் :
காட்டில் வாழ்ந்த மனிதன் நாட்டில் தனக்கென்று ஒரு இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு, அரசாட்சி செய்தான். நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பதிவின் காரணமாக பதிவின் பாதிப்பு காரணமாக  காட்டில் சுற்றி திரிந்தான். நாட்டில் இருந்த ராமர் சீதையை தேடி காட்டில் அலைந்தது இதன் அடிப்படையில் தான். பரிணாம வளர்ச்சியில் காட்டுக்குள் வாழ்ந்த மனிதன் நாட்டில் வந்து வாழ்ந்ததைக் குறிப்பதே ராம அவதாரம் ஆகும்.

8. பலராம அவதாரம் :
நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் பலராமர் விவசாயம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் கலப்பையை கையில் வைத்திருக்கிறார். பரிணாம வளர்ச்சியில் நாட்டில் வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பதைக் குறிப்பதே பலராமர் தன் தோளில் சுமக்கும் கலப்பை ஆகும். இதுவே பலராமர் அவதாரம் ஆகும்.
 
9. கிருஷ்ண அவதாரம் :
கிருஷ்ண அவதாரம் என்பது அறிவு முதிர்ச்சியடைந்த நிலை ஆகும்.
தீமைகள் பெருகி விட்ட நிலையில் தான் வாழ பிறரையும் அழிக்கலாம் என்ற நிலை உருவாகி இருந்த நிலையில், அந்த நிலையை மாற்ற எத்தகைய நிலையை பின்பற்றலாம் என்பதைக் குறிக்கிறது. பரிணாம வளர்ச்சியில் மனிதனின் சிந்திக்கும் திறன் எத்தகைய வழிகளில் செயல்படுகிறது என்பதைக் குறிப்பதே கிருஷ்ண அவதாரம் ஆகும்.


10. கல்கி அவதாரம் :
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் சூரிய குடும்பத்தில் வேறு ஏதேனும் கிரகத்தில் வாழ முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறான். குதிரையில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் குதிரையின் பின்னங்கால்கள் இரண்டும் தரையிலும் முன்னங் கால்கள் இரண்டும் பூமியில் படாமல் மேல் நோக்கி துhக்கி இருப்பதைப் பார்க்கலாம் இது மனிதன் வேறு கிரகத்தில் சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது. பரிணாம வளர்ச்சியில் மனிதன் பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது
******************************************************************
டார்வின் சொல்லும் பரிணாமக் கோட்பாட்டை நம் இலக்கியங்கள் முன்பே சொல்லி இருக்கின்றமதம் பக்தி நீக்கி பார்த்தால் ஆழ்ந்த அறிவியல் அறிவு நம் முன்னோர்களுக்கு எப்படி இருந்ததை என்பதையும், அதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு இல்லை என்பதையும் குறிக்கிறது. இக்கருத்து ஏற்புடையதா இல்லையா என்பதனை இனிய நண்பர்களே!! உங்களின் கருத்துக் கணிப்புக்கு விடப்பட்டுள்ளது. அன்புடன் கே எம் தர்மா...