Search This Blog

Showing posts with label SELF ORGANIZE. Show all posts
Showing posts with label SELF ORGANIZE. Show all posts

Sep 5, 2011

தினமும் ஒரு டெபாசிட் : 86400 வினாடிகள் சுயமுன்னேற்ற கட்டுரை- படித்ததில் பிடித்தது.

தினமும் ஒரு டெபாசிட் :

ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, "தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு" என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். தினமும் அதில் ஒரு ரூபாயையாவது நீங்கள் மிஞ்ச விடுவீர்களா? முழுப்பணத்தையும் எப்படிச் செலவழிப்பது என்று திட்டமிட்டுச் செலவு செய்ய மாட்டீர்களா?

உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அது தான் கால தேவதை. அது பணத்தை விட விலை மதிப்புள்ள 86400 வினாடிகளை உங்களுக்கு ஒரு நாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன் படுத்துகிறீர்கள்?

ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று செய்யத் திட்டமிட்ட வேலை இருந்தால் வீண்பேச்சு, வேடிக்கை பார்த்தல், அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம்.

இவை யாவும் இலக்கில்லாத வாழ்க்கையின் இயற்கையான குணாதிசயங்கள். திட்டமிட்டுச் செயல்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத் தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கிறோம்.

ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திய பின் அதற்கு உரிய அதே இடத்தில் முறையாக வைக்கப் பழகினால் கால விரயத்தை வெகுவாகக் குறைக்கலாம். இப்பழக்கம் இல்லாதவர்களது காலம் தேடுதலிலேயே பெருமளவு வீணாகிறது. தேடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்கக் கோபம் அதிகமாகி, சுற்றி உள்ளவர்கள் மீதெல்லாம் எரிந்து விழுபவர்கள் பலரைத் தினமும் பார்க்கலாம். எனவே உபயோகித்தவுடன் பொருள்களைக் கவனமாக அவற்றிற்குரிய இடத்தில் சிறிய பழக்கம் மூலம் காலத்தை பெருமளவு சேமிக்க முயலுங்கள்.

சமீபத்தில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைக்காகச் சென்று இருந்தேன். அங்கு நல்ல கூட்டம். அங்கு வந்த ஒரு பெரியவர், மருத்துவரைச் சந்திக்க அரைமணி நேரமாவது ஆகும் என அறிந்ததும் அமைதியாக உட்கார்ந்து பையிலிருந்து ஒரு இன்லாண்டு லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டார். எல்லோரும் அடுத்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அந்த நேரத்தில் அந்த நேரத்தில் தன் மற்றொரு காரியத்தை முடித்துக் கொண்ட அந்தப் பெரியவர் செயல் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிக் காத்திருக்கும் காலங்களில் நாமும் கூட பயனுள்ள எதையாவது செய்யத் தயாராக இருக்கலாமே!

காலத்தை முறையாக, திறம்படப் பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் டிவி முன் அமரும் நேரத்தைக் குறைப்பது நல்லது. இன்றைய காலத்தில் நம் நேரத்தை டிவி போல வேறு எதுவும் திருடிக் கொள்வதில்லை. பிடிக்கிறதோ இல்லையோ அதன் முன் அமர்ந்து நம் காலத்தை வீணடிக்கிறோம். நமக்குப் பிடித்த பயனுள்ள ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவை முடிந்தவுடன் டிவியை அணைத்து விடுவது நல்லது.

ஒவ்வொரு நாள் இரவும் உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். காலதேவதையின் 'டெபாசிட்' எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். எப்படிச் செயல்பட்டிருந்தால் காலம் இன்னும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். மறுநாள் அது போலவே இன்னும் சிறப்பாகவே காலத்தைப் பயன்படுத்திச் செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள். எல்லாவற்றைற்கும் மேலாக ஒரு செயலைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனத்தையும் அதில் வையுங்கள். இதனால் அச்செயலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.


காலதேவதை கருணை உள்து. ஒரு நாள் அந்த 'டெபாசிட்'டை நீங்கள் வீணாக்கினீர்கள் என்பதற்காக மறுநாள் உங்களுக்கு அதைத் தராமல் இருப்பதில்லை. பெருந்தன்மையுடன் உங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
நன்றி -என்.கணேசன்-பதிவு 2007

அவசரம் தேவையா? -சுய முன்னேற்றக் கட்டுரை- படித்ததில் பிடித்தது.



அவசரம் தேவையா?
சுய முன்னேற்றக் கட்டுரை:
படித்ததில் பிடித்தது.

சிலர் நேரமே இல்லை, அதனால் தான் அவசரப்படுகிறோம் என்று கூறலாம். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை எப்படியெல்லாம், எதிலெல்லாம் செலவழிக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு கணிசமான பகுதி உபயோகமில்லாத, தேவையில்லாத செயல்களில் வீணாகி இருப்பதை அறியலாம். தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தினால் தேவையானதைச் செய்ய நிறைய நேரம் மிஞ்சும். அவசரப்பட வேண்டிய அவசியமே இருக்காது.

டாக்டர் காப்மேயர் ஒரு நூலில் அழகாகக் கூறினார். "சாதனை புரிந்தவர்கள் கடிகாரத்தோடு போராடவில்லை. மாறாக அந்தக் கால மணல் கடிகாரத்தில் ஒவ்வொரு மணல் துணுக்காக விழுவது போல அவசரமில்லாமல் ஒரு நேரத்தில் ஒரு செயல் என நிதானமாக வாழ்ந்தார்கள்".

அந்தக் காலத்து மணல் கடிகாரத்தில் இரண்டு பரந்த பாகங்களுக்கு நடுவே மணல் துகள்கள் ஒவ்வொன்றாக மட்டுமே போக முடிந்த அளவுக்கு மிகக் குறுகலான இடைப்பகுதி இருக்கும். மேலே எத்தனை மணல் துகள்கள் இருந்தாலும் அந்த இடைப்பகுதி ஒவ்வொரு மணல் துகளை மட்டுமே கீழே அனுப்பும். இந்த உதாரணத்தை நாமும் நம் மனதில் நிறுத்திப் பதட்டமோ, தடங்கலோ இல்லாமல் அவசரமோ சோம்பலோ படாமல் செய்ய வேண்டிய செயல்களை முறைப்படுத்தி ஒவ்வொன்றாய்ச் செய்வது நலம்.

ஆனால் நமக்கிருக்கும் அவசரத்தில் பல சந்தர்ப்பங்களில் ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்ய முற்படுகிறோம். அவ்வாறு செய்ய முனையும் போது எந்த ஒரு செயலுக்கும் நம்மால் முழுக்கவனம் செலுத்த முடிவதில்லை. ஆகவே செயல்கள் பெரும்பாலும் அரை குறையாகவே முடிகின்றன. எந்த ஒரு காரியத்தையும் முழுக்கவனத்தோடு செய்யும் போது தான் அது நேர்த்தியான சிறப்படைகிறது. விரைவாகவும் செய்ய முடிகிறது. அந்த செயலை நாம் மறுபடி சரி செய்ய வேண்டி வராது. செய்த வேலைக்காக வருந்த வேண்டி இருக்காது. எல்லா பெருஞ்சாதனையாளர்களும் ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று நிதானமாகவும், தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட்டதால் தான் அவர்களால் அதிகமான சாதனைகளைத் திறம்பட செய்ய முடிந்தது.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். மறுநாள் முக்கியமான பரீட்சையோ, நேர்முகத் தேர்வோ, பிரயாணமோ இருந்தால் தேவையானவற்றை முன் தினமே தயார் செய்யுங்கள். கடைசி நேரத்தில் பரபரக்க வேண்டிய அவசியம் இருக்காது. தினமும் அதிகாலையில் எழுவது ஒரு அருமையான பழக்கம். அது முடியாதவர்கள் தான் தினசரி வாழ்க்கையை அவசர ஓட்டத்தில் ஆரம்பிக்கிறார்கள். அந்த ஓட்டம் இரவு வரை தொடர்வதும் அந்த ஆரம்பப்பிசகால் தான்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய முக்கியமான செயல்களின் பட்டியலை முன் கூட்டியே எழுதி வையுங்கள். ஒவ்வொரு செயலையும் கவனமாக, சீராகச் செய்யுங்கள். மணல் கடிகார உதாரணத்தை மனதில் என்றும் வைத்திருங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று சீரான வேகத்தில் செயல்படுங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு முன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டீர்களா என்று கவனியுங்கள். இப்படிக் கவனமாகவும், ஒழுங்காகவும் முன் யோசனையுடனும் செயல்பட்டால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் அலட்டிக் கொள்ளாமல் நிறைய சாதிக்கலாம்.

ஒரு விதை செடி ஆக, பூ காய் ஆக, காய் கனி ஆக, முட்டை குஞ்சு ஆக, கரு குழந்தை ஆக என இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் தேவைப்படுகிறது. அந்தக் காலம் முடியும் வரை அந்தப் பலனை விரும்புபவர்கள் காத்திருந்தே ஆக வேண்டும். அது போல நாம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் முறையாக, குறையில்லாமல் செய்து விட்டால் பின்பு நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையாக நம்பிக்கையோடு காத்திருப்பது தான். இதில் குறுக்கு வழி இல்லை.அப்படி உள்ளதாக எண்ணி அவசரப்பட்டு ஏதேதோ செய்யப் போனால் நாம் உருவாக்கியதை நாமே சிதைப்பது போலத் தான். விரும்புவது கிடைக்காமலே போய் விடும்.

கீரை விதைப்பவன் பலனைச் சில நாட்களில் அடையலாம். ஆனால் தென்னை விதைப்பவன் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும். லட்சியத்தின் அளவு பெரிதாகப் பெரிதாக நாம் உழைக்க வேண்டிய காலமும், காத்திருக்க வேண்டிய காலமும் அதிகம் தான். ஆகவே நோய்களைத் தவிர்க்க வேண்டுமானால், நிறைய சாதிக்க வேண்டுமானால் அவசரத்திற்கு உடனடியாக விடை தந்து விட்டு வாழ்க்கையை நிதானமாக வாழ்வோம்.
நன்றி -என். கணேசன் பதிவு 2007

நிதானம் தேவை - சுய முன்னேற்ற கட்டுரை- படித்ததில் பிடித்தது.

ஒரு நிமிடம் நிதானியுங்கள் போதும்!!!!

விவகாரமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை பிரச்சினைகளாக வெடிப்பதும், சுமுகமாக முடிவதும் இருக்கிறது என்பதை விளக்க
அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய ஒரு அறிவுரை என்னை மிகவும் கவர்ந்தது. சொற்கள் மிகச்சரியாக நினைவில்லை என்றாலும் அதன் சாராம்சம் இது தான். "நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் ஒவ்வொன்றிற்கும் react செய்கிறோம். நம் மன அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சிறிதும் தாமதியாமல் உடனடியாக அதற்குப் பதிலடி தருகிறோம் அல்லது ஏதாவது செயல் புரிந்து விடுகிறோம். (இதனை அன்னை reaction என்கிறார்). அப்படி react செய்வதற்குப் பதிலாக ஒரு நிமிடம் சிந்தித்து தகுந்த சொல்லோ செயலோ எது என்று தீர்மானித்து அதைச் செய்தால் அது சிறப்பாக இருக்கும். (இதை அன்னை response என்கிறார்). இப்படி செய்வதன் மூலம் எத்தனையோ எதிர்மறையான விளைவுகளை நாம் தவிர்க்க முடியும்"

பல சமயங்களில் நம் பதில் நடவடிக்கைகள் நம்மை அறியாமல் நடந்து விடுகின்றன. மற்றவர்கள் சொல்லோ செயலோ நம்மை சிறிதும் யோசிக்க விடுவதில்லை. நம்மையும் மீறி நம் ஆழ்மனதில் பதிந்துள்ள குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். இதில் உண்மையாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் நம் பதில் நடவடிக்கையை மற்றவர் சொல்லும், செயலும் நம் ஆழ்மனமும் தீர்மானித்து விடுகின்றன. யாரோ ஆட்டுவிக்க நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம்.

இதற்குப் பதிலாக ஒரு கணம் தாமதித்து எப்படி இதை எதிர்கொள்வது நல்லது என்று யோசித்து
தக்க விதத்தில் சிந்தனா பூர்வமாக நம் பதில் நடவடிக்கை அமைந்தால் நாம் எத்தனையோ பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பல நல்ல ஆதாயங்களையும் பெற முடியும். யோசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு நிமிடம் தாமதிப்பது போதும். எத்தனையோ தவறான வார்த்தைகளை சொல்லாமலும், தவறான செயல்களை செய்யாமலும் தவிர்க்க அந்தக் குறுகிய இடைவெளி போதும்.

ஒரு actionக்கும் reactionக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியைப் புகுத்த கற்றுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியே ஆறாவது அறிவு. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடப்பதே உண்மையான அறிவு. மற்றவர் இயக்க நாம் இயங்கினால் அது அடிமைத்தனம்.

யாராவது வம்புச் சண்டைக்கு உங்களை இழுக்க எண்ணி "முட்டாள்" என்று அழைத்தால் சீறுவதற்குப் பதிலாக புன்னகையுடன் "உண்மை தான்" என்று சொல்லிப் பாருங்கள். (உண்மையில் நாம் எல்லோரும் ஒருசில சமயங்களில் அந்தப் பட்டப் பெயர் பெற உகந்தவரே.) ஒரு புத்திசாலியால் தான் அப்படி முழுக் கட்டுபாட்டுடன் respond செய்ய முடியும். அப்படிச் சொல்வதன் மூலம் தேவையில்லாத சச்சரவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இதைச் சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கஷ்டமே. ஏனென்றால் மற்றவர் வார்த்தைகளுக்கோ செயல்களுக்கோ உடனடியாக இயங்கிப் பழக்கப்பட்ட நமக்கு ஒரு புதிய வித்தியாசமான அணுகுமுறையை நம்மிடம் கொண்டு வருவதற்கு சற்று பயிற்சி வேண்டும். சிந்திக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வதற்கே பிரம்மப்பிரயத்தனம் வேண்டும். நமது ஆழ்மனம் பழைய அணுகுமுறைக்கே பழகிப் போனது. ஆழ்மனதில் நேர்மாறான அணுகுமுறையைப் பதிய வைக்க ஒரு வழியை மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலும் எந்த மாதிரி சந்தப்பங்களில் நீங்கள் நிதானம் இழக்கிறீர்கள் என்று முதலில் பட்டியல் இடுங்கள். அதில் நாம் அதிகமாக கட்டுப்பாடில்லாமல் react செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். அப்படிச் செய்த சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தி மனத்திரையில் மற்றவர் சொன்னதோ செய்ததோ வரை தத்ரூபமாக ஓட விடுங்கள். நீங்கள் react செய்த விதத்தை மட்டும் காட்சி மாற்றம் செய்யுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக அதற்கு நடந்து கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டு காட்சியை முடியுங்கள்.

நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் தினமும் ஓரிரு முறை இப்படி கற்பனைக் காட்சி காணுங்கள். ஆழ்மனம் மெள்ள மெள்ள அந்தக் கற்பனையைப் பதிவு செய்து கொள்ளும்.
உங்களிடம் உறுதி இருந்து இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால் திடீரென்று அது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது ஆச்சரியப்படும்படி நீங்கள் கற்பனை செய்தது போல உண்மையிலேயே 'respond' செய்வதை நீங்கள் காண முடியும். இதை நான் என் வாழ்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். எனவே இந்த முறையின் வெற்றிக்கு என்னால் உத்திரவாதம் தர முடியும்.

ஒன்றில் நல்ல முறையில் வெற்றி கண்டு அதுவே இயல்பாக நமக்குப் பழகி விட்ட பின்பு அடுத்த ஒரு சவாலை நாம் சந்திக்க முயலலாம். இப்படி நாம் பக்குவத்துடன், அறிவுபூர்வமாகவும் இயங்கக் கற்றுக் கொண்டால் எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்த்து ஏராளமான நன்மைகளை அடைய முடியும். நீங்களும் முயன்று பாருங்களேன்.

நன்றி - என்.கணேசன்-பதிவு 2007

உங்களின் விதியை தீர்மானியுங்கள் -சுயமுன்னேற்ற கட்டுரை-படித்ததில் பிடித்தது.

உங்களின் விதியை நீங்களே தீர்மானியுங்கள்:
ரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.

அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.

"நண்பர்களே!இந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். "அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே! அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது"

"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே!" அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.

"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று கூறி முடித்தார்.

இது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

நன்றி -என்.கணேசன் பதிவு - 2007

Aug 16, 2011

Organize Yourself with Your Shoes in Simple Steps



Where to Store Shoes:


Utilize different shoe storage solutions to maximize space


By Elizabeth Larkin, About.com Guide



I only have 1 pair of flip flops and I keep them right by the front door so I can slide them on quickly to fetch the paper, grab something from my car, or on my way out the door to yoga class. When I lived in New York City, I always kept a thin pair of Reefs in my handbag for when I simply could not walk one more block in heels or wedges. But I know that I am not the norm; most women I know have several pairs of flip flops, from dressy "flops" to the ones they use in the shower. I've come up with 2 storage solutions:
1) A flip flop organizer 2) A flip flop bucket
If your puzzled as to where to shore shoes, you've come to the right place. I have struggled for years trying to store my shoe collection in one convenient spot until I realized it didn't exist. Now I store my shoes in different locations depending on how often I wear them and the type of activity I'm engaged in while I'm wearing them.


In this guide, I've gone over every type of shoe you could own, and recommend the best place to store them. Am I missing one? Tell use where you store your shoes and I'll add it to the list. Happy shoe storing! 


Ballet Flats
Ballet flats are so easy to store because they are super narrow, flat-soled and can be fit into smaller spaces.

Shoe Storage Solution: Store them in a hanging shoe rack on the back of your closet door.

Flip Flops: 

I keep a pair of flip flops in a tray by my front door. I use them to run out to my car to grab something I forgot, or to fetch the paper in the morning. Even in the winter, I tend to want my flip flops close by.

Shoe Storage Solution: If you have 1 pair, keep them by the front door, if you have several pairs, consider a flip flop organizer

High Heels
High heels, depending on the heel height, have a few options for storage.

Shoe Storage Solution: Keep high heels in your closet on a hanging shoe rack or in shoe boxes. Storing them in your closet makes it easier to try them on with different outfits, especially different pant length hems.
The one exception to this is a lone pair of work shoes I keep by my front door.

Flats & Loafers
A little more substantial than ballet flats because of their hard or rubber soles, flat shoes and loafers can still be accommodated in your closet.

Shoe Storage Solution: Flats should be stored in a shoe rack in your closet. This way, like heels, you can try them on with varying outfits. 
Once again, like heels, I would leave your most-worn work pair by the front door. 

Hiking Shoes

These can be really expensive so treat your hiking shoes well. This means making sure they are dry before storing them in your home, and dust/scrap the dirt off these when you get home before bringing them inside.

Shoe Storage Solution:  These are better left in an easy-to-reach storage spot like your basement or attic. Leaving them in your garage may expose them to the elements and end up warping the fabric in the shoes.

Sneakers
I strongly recommend you keep these out of your clothes closet. Chances are they smell and have collected dirt as you've strode miles walking or running in them, or have spent a lot of time outside gardening. Exceptions to this rule will be really nice sneakers you wear out of the town. (If you're a guy and you're into that sort of thing.)

Shoe Storage Solution: Tray by the door. 
I keep mine in a tray under a bench. The bench makes them easy to take on and off and the tray makes them look a little bit neater than a pile on the floor.

Super High Heels: 
If you're stomping around town in 5+ inches, great. (Your podiatrist may have another reaction.) But you may have to think about extra special storage for those shoes.

Shoe Storage Solution: Line these up on a shoe rack or a shoe shelf that will accommodate the height of the shoe. I like an expandable shoe rack or an adjustable shoe shelf.  Most shoe boxes will be too shallow for a heel more than 4 inches high.

More about Shoes:  Shoe Storage SolutionsHow to Store & Organize ShoesHow to Care For Your Shoes
Boot Storage and Organization, Choose the Right Shoe Rack for Your Closet
Top Picks in Hanging Shoe RacksTop Picks in Wooden Shoe RacksTop Picks in Over the Door Shoe RacksHow to Organize a HandbagHow to Organize Your Shoes Organized Shoes - How do You Organize Your Shoes? Considering Closet Organizers - Home OrganizingSeptember 2008 Shoes of the DayOrganize Your Shoes - 
Shoe Storage Options

நமக்கு அறிவு புகட்டும் புத்தகங்களில் ஆரம்பித்து, நம்மை சுமந்து செல்லும் காலணிகளை வரைமுறைப்
 படுத்துவது பற்றி இந்த பதிவினில் கண்டோம். மேலும் நம்மை, நமது வாழ்கையை ஒழுங்கு படுத்துதல் - வரைமுறைப்படுத்துதல் - ORGANIZING OURSELVES என்பதனை மேலும் காண்போம்..அன்புடன் கே எம் தர்மா...

Organize Yourself with Your Books - in 5 Simple Steps


How to Organize Your Books in 5 Simple Steps
By Elizabeth Larkin, About.com Guide

A pile of hardcovers.
Photo from Flickr user dcolson5201.
Organizing your books is a big organizational task. Your book collection is very personal, filled with favorites you cherish, childhood classics, cookbooks and how-to's you use for reference repeatedly. Then there's the rest: the books you purchased at the airport while staring down a four-hour flight with nothing to read, the one your book club briefly mentioned at last month's meeting in between eating, drinking and gossiping, and the one your friend lent you on the beach last summer.
Here's a plan to clear the clutter of the latter category--the ones hanging around taking up space. Since clutter is the enemy of organization, these have got to go.
Step 1: Edit Your Collection: 
There are two main types of books to purge from your collection:
1)       The beach-and-airline reads mentioned above.
2)       Books you've purchased to look good to house guests but never actually read or use. I call this phenomenon "aspirational collecting." We've all bought a book about a hobby we'd like to be passionate about, something that we think will make us look better to others, but we were really just interested in buying the book. Limit yourself to 2-3 "aspirational" books for the coffee table and donate the rest to a neighbor so it can collect dust on their bookshelf.
Now, take action: 
1) Separate your books into two piles: keep and toss. 2)Decide whether to sell or donate your toss pile.
As always, be realistic. Are you going to take the time to post these books for sale online, wrap them up and mail them? If not, then don't hesitate to donate.
Step 2: Donate: 
There are several outlets that will accept used books: 1)Libraries, 2)Charitable organizations, 3)Senior centers,4)Local book drives. Clean and dust your books and box them up by category (children's, how-to, general fiction, etc.).
Step 3: Sell: If you decide to sell your books, surf over to Amazon.com and set up a seller account.
1)       You can list your books by searching by title or keyword, but I recommend using the ISBN, UPC, or ASIN. This way you know you've got the correct edition for sale.
2)       Make sure you have packing tape and brown paper on hand to wrap books in for shipping.
3)        Once a sale is made, ship the book immediately and amazon.com will deposit money from the buyer into your seller account.
              Other options are Ebay and Half.com.
Step 4: Swap: 
Swapping is a hassle-free way to reuse and recycle books. Here are some options: 1)       PaperBackSwap.com, similar to Amazon.com, lists your books online but instead of receiving money for them when sold, you build up credits to request other people's books. Users request a book from you, you then print postage directly on the site, wrap the book and drop it in the mailbox.
2)       Swap books with a friend or family member. My childhood friend Suzi and college friend Michelle live in different states than I do, but I share books with both. This provides me with a constant stream of new reading material, and allows me to recycle my own collection. I know my books are getting a nice new home when I give them to a friend.
Step 5: Store: Once you've decided to keep a book, you need to store and display them properly.
Cookbooks:  Store these in the kitchen. Keep the ones you use regularly very close at hand. A shelf especially for cookbooks and food storage reference guides is ideal, and it's worth it to splurge on the hardcover, sturdier versions of the books you use often. You're going to want these to be as heavy as possible so they stay open to the recipe you're working on while your hands are covered in flour, butter and olive oil.
Classics and Favorites: Serious readers tend to leave their books everywhere -- on coffee tables, bedside tables and in handbags, but having a "home base" is essential. Once again, splurge on hardcover for classics and the personal favorites that you re-read over and over. They look better, are easier to store, and are chic enough to use in a décor scheme.
Some ideas on how to store your books: 1) Traditional bookcase. 2) Arranged creatively stacked on your mantel, 2)Next to your favorite reading chair or on a coffee table, 3) If you have the budget, consider having custom bookshelves built into your walls.
Reference: Bring these into your office so they will be at-the-ready when you really need them. I recommend the following basic reference books for your office:
1)       Webster's dictionary.
2)       A "For Dummies" book on whichever computer program you use regularly at work.
3)       A pocket guide on grammar. It's not always a good idea to rely on your word processing program to fix your grammatical errors, so if you have a tendency to get stuck on whether to use your, you're or you are, it's handy to have a pocket guide at your desk.
4)       Zagat Guides are useful when entertaining clients or out-of-town colleagues.
5)       If your job requires a good deal of writing, a hard copy style guide is a must.

Book Swapping and Selling Sources:  PaperBackSwap.com, Amazon.com, Ebay


Suggested Reading:
Related Articles:

நம்மை நாமே வரைமுறைப் படுத்துமுன்னே நமது உடைமைகளை வரைமுறை படுத்த ஆரம்பித்தோமானால், நமது வாழ்கை முழுமையும், அனைத்தும் ஒழுங்காக வரைமுறைபடும். ஆரம்பிப்போமே புத்தகங்களில் இருந்து!!!.... அன்புடன் கே எம் தர்மா...