Search This Blog

Showing posts with label சூரிய ஒளி: சக்தி. Show all posts
Showing posts with label சூரிய ஒளி: சக்தி. Show all posts

Jun 22, 2012

சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy)- பகுதி-10



சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy)- பகுதி-10

இதுவரை பதிவிட்ட 9 பகுதிகளை படித்ததின் மூலம், சோலார் மின்சாரம் என்றால் என்ன? அது எப்படி நமக்கு தேவைப்படும் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றப்படுகிறது, அதற்கு என்னென்ன உபகரணங்கள் தேவை, அவற்றின் வேலை என்ன என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இறுதியாக சில விஷயங்கள்.

சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy)– பகுதி-9




சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy) பகுதி-9

மத்திய அரசின் MNRE -ன் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் முகவரியை தெரிந்து கொள்ள கீழே  லிங்க்கை சொடுக்குக. இது பி.டி.எஃப் பைல்.இதிலிருந்து உங்கள் ஊரில் அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அணுக உங்களுக்கு வசதியாக இருக்கும். இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்.

சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy) – பகுதி-8





சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy) பகுதி-

மத்திய அரசு "Ministry of Renewable Energy - (MNRE)" அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது. நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களி லும் National Bank for Agricultural and Rural Development - NABARD" மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy) – பகுதி-7


கிரிட்-டை சோலார் சிஸ்டம் (Grid-Tie Solar Power System)

கிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும், குறைவாக இருந்தால் குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடம் இருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதே கிரிட்-டை சிஸ்டம் ஆகும்.

Jun 21, 2012

சூரியஒளி மின்சாரம்(Solar Power Energy) - பகுதி 6.


சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 6

முந்தைய பதிவில் இறுதியாக பேட்டரி பேங்க் பற்றி விளக்கியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சில விபரங்களை பார்ப்போம்.

பாட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும் டி.சி கரண்ட் (ஆம்பியர்) -ஐ ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியாது. பேட்டரி கரண்டில் 50% தான் பயன் படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் பேட்டரி டிஸ்சார்ஜ் லெவலுக்கு கீழே போய்விடும். இதனால் பாட்டரியின் வாழ்நாள் குறைந்து விடும். எனவே இன்வெர்ட்டர் தானாகவே அந்த லெவலுக்கு கீழே போனால் மின் இணைப்பை துண்டித்து விடும். எனவே நாம் கவலைப்பட தேவையில்லை. நம்முடைய பேட்டரி பேங்க் 24V-450Amp ஆக இருந்தால்  அதில் சேமிக்கப்பட்டுள்ள 450 ஆம்பியரில் 225 ஆம்பியர் கரண்டை மட்டுமே உபயோகிக்கமுடியும்.

சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy)-பகுதி 5.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 5.

முந்தைய பதிவில் சோலார் பேனல்களை கொண்டு 12V/24V மின் அழுத்தம் கொண்ட 1KWh (1000 வாட்ஸ்) Solar Array-ஐ அமைக்கும் விதத்தை கூறியுள்ளேன். இனி அடுத்த நிலையாகிய சோலார் ஆரே மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ஒழுங்கு படுத்துவது (Regulate)  பற்றி இனி பார்க்கலாம். 

Jun 19, 2012

சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy) - பகுதி 4.


முந்தைய பதிவில் நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்பு (array) நாள் ஒன்றுக்கு சுமார் 5000 வாட்ஸ் அல்லது 5 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என பார்த்தோம்.

பூமியின் சுழற்சி, சூரியனின் சுழற்சி இவற்றின் அடிப்படையில் பூமியில் ஒவ்வொரு பகுதி அல்லது ஊரிலும் சூரியனுடைய ஒளி கதிர்கள், வெவ்வேறு கோணத்தில் , வெவ்வேறு கால (duration) அளவில் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாதமும் விழும் சூரிய ஒளியின் மூலம் தினசரி உற்பத்தி செய்யக் கூடிய மின்சாரத்தை கணக்கிட முடியும். இது நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறு படும். தமிழ் நாட்டில் முக்கியமான ஊர்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக கிடைக்ககூடிய மின்சாரத்தின் அளவை காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்சாரம்(Solar Power Energy) - பகுதி.3



டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) - ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT)

டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல், கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல. ஏ.சி மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு எடுத்து செல்ல முடியும். எனவே தான் இது இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலை ஆகியவற்றிற்கு பயன் படுத்தப்படுகிறது.

சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy) பகுதி-2


மின்சார தேவையை கணக்கிடல்

இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப் படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

சாதாரண பல்பு  மிகவும் அதிகமாக கரண்ட் எடுக்கும். உதாரணத்திற்கு 60 வாட் பல்பு என்றால் ஒரு மணி நேரம் எரிய 60 வாட் சக்தி வேண்டும். அதாவது  0.272 ஆம்பியர் கரண்ட் வேண்டும். அதே வெளிச்சத்தை 13 - 15 வாட் காம்பேக்ட் புளோரசென்ட்  லாம்ப் ( CFL - COMPACT FLUORESENT LAMP )  தரும். அதாவது  நான்கில் ஒரு பங்கு மின்சாரமே தேவைப்படும். கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்.

Jun 18, 2012

சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy) பகுதி-1



பூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது.

Feb 26, 2012

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

 தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.


இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்த்தபடி பெற்று அதில் இந்த சோலார் பனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.


தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.