Search This Blog

Nov 8, 2011

சிவவாக்கியம் (126-130) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (126-130)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 
சித்தர் சிவவாக்கியம்- 126
மின் எழுந்து மின் பறந்து மின் ஒடுங்கும் வாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னை யானும் யான் அறிந்தது இல்லையே!

மின்னல் வானில் தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது. அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள ஈசன் நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான். கண்ணிலே நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால் கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.
**********************************
சித்தர் சிவவாக்கியம்-127
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரனுமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே!!

இந்த அவனியில் தியான தவத்தை மேற்கொண்டு அதனால் சித்தி பெற்று சித்தர்களைப் போல் எப்போதும் இருக்கலாம். அரண், அரி, பிரமன் என்ற மூவர்களையும் கண்டு வணங்கி அண்டங்கள் எழும் சுற்றி வரலாம். ஐந்தாவது யோனியில் பிறந்து அது கருக்கொளாத குழி, நாற்றமில்லா யோனி என்பதை உணர்ந்து புருவமத்தி எனும் மூன்றாவது கண்ணில் சுழுமுனை தாளைத் திறந்து நெருப்பாற்றைக் கடந்து சோதியில் கலந்து பின்பு நீயும் எச்சனே என்று அறிந்து கொள்ளலாம்.
*****************************************
சித்தர் சிவவாக்கியம்- 128
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் போருந்துமாறது எங்
கனே
ஆகிலும் அழகிலும் அதன் கண் நேயம் ஆனபின்
சாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே!!

ஏகமனதுடன் ஆணும் பெண்ணும் கூடி இருவரும் ஒருவராகி புணர்ந்து போகம் செய்கின்ற சிற்றின்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக பொருத்தி ஒத்து இருக்கின்றதே அது எங்
கனம்?
அதுபோல் ஏகமாக உனக்குள் செய்யும் யோகத்தால் சக்தியும் சிவனும் ஒன்றாகி கலந்து பேரின்ப அனுபவத்தை ஞானிகளும் சித்தர்களும் பொதுவாக இருப்பதை உணர்ந்தனர். அனைத்தும் ஆவதற்கும், அழிவதற்கும், அழகிற்கும் காரணம் சிவமே என்பதை அறிந்து அன்பு வைத்து தியானியுங்கள். தன்னம்பிக்கையுடன் பாடுபட்டு மெய்நிலை அடைந்தவர்களுக்கு இப்பூவுலகில் சாவதும் பிறப்பதும் இல்லாது போகும்.
************************************************
சித்தர் சிவவாக்கியம்-129
வேதம் நாளும் போதமாய் விரவும் அங்கி நீரதாய்
பாதமே லிங்கமாய் பரிந்து பூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்து ஞானிகள்
ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே!!!

நாண்டு வேதங்களில் உள்ள மெய்ப்பொருள் பஞ்சபூதங்களாய் விரிந்து நம் உடம்பில் நீராய் நிற்கின்றது. அதுவே ஈசன் திருவடியாகவும் இழிந்கமாகவும் இருப்பதை அறிந்து ஆன்மா எனும் பூவை அசையாமல் நிறுத்தி தியானிக்க வேண்டும். அப்போது வாசியானது லயமாகி நாத சப்தத்துடன் நம் காதுகளில் கேட்கும். அந்நாத ஒலியால் மெய் வாசலைத் திறந்து மனமெனும் பேயை தவத்தால் கட்டறுத்த ஞானிகள் ஆதி அந்தமும் கடந்து அனாதியாய் உள்ள சிவத்தை அடைந்து அரிய வீடு பேறை அடைவார்கள்.
********************************************
சித்தர் சிவவாக்கியம்-130
பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே
துருத்தி நூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல்
கருத்தில் நூல் கலைபடும் கலைநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே.

நைந்துபோன பருத்தி நூலினால் நெய்த ஆடைகளை உடுத்தி பஞ்சப்பாட்டு பாடி வாழும் மனிதர்களே! உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை வாசியோகத்தால் துருத்திக் கொண்டு ஊதுவதுபோல ஊத்தி விழிப்புறச் செய்து மேலேற்றினால் துன்பங்கள் யாவும் தானே நீங்கும். இந்த யோகத்தால் தியானிப்பவர் சிந்தையில் கருத்துள்ள நல்ல நூல்களும் உதிக்கும். பல கலை ஞானத்திலும் சிறந்து விளங்குவர். காலன் எனும் எமன் அணுகான். வாழ்நாள் காலங்கள் திருத்தி ஆயுள் அமையும். கவலைகள் யாவும் அற்றுப் போகும். ஆகவே 'சிவயநம' என அஞ்செழுத்தை ஓதி தியானம் செய்யுங்கள்.
******************************************** 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

3 comments:

  1. KEYEM avargale,Elaam superthaan.Naan silavatrai padikkiren( elaavatraiyum alla ) elaam SUPER.NANDRI,Vaazhthugal.

    ReplyDelete
  2. Keyem,avargale, naan sariyaana LAZY to read all.Neramum avakaasamum kidaikkumpothu iyalumaanavatrai padiththu payan adaikiren.NANDRI,VANAKKAM.

    ReplyDelete
  3. [ma]மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே சுந்தரக்குமார் அவர்களே!!! எறும்பூரக் கல்லும் தேயுமே!!! தங்களின் வலைப்பூவில் லேபில்/பதிவர் முகவரி நேரம் குறிப்புக்களுக்கு இடையே M:B:முகநூல், மற்றும் +1 ஆகியவைகளின் ஐக்கான்களை கூகுள் ரெகமென்ட் செய்துள்ளதை நிறுவுங்கள். லைக் கொடுப்பதற்கும், மற்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதற்கும் நண்பர்களுக்கு எதுவாக இருக்கும். வாழ்த்துக்கள்!!![/ma]

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!