சிவவாக்கியம் (111-115)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -111
அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனிப்பிரப்பது இல்லையே!
அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றது
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனிப்பிரப்பது இல்லையே!
ஒன்பது வாசல் கொண்ட இவ்வுடம்பு இவ்வுலக வாழ்வில் அல்லல் படுத்துகின்றது. அருத்தடைத்த வாசலாகவும், சொர்க்கக் வாசலாகவும் உள்ள பத்தாம் வாசலை அறிந்து கொள்ளுங்கள். அங்குதான் ஒரேழுத்து பஞ்சாட்சரமாக மின்னிக்கொண்டு நிற்கிறது. அந்த நல்ல வாசலில் ஐந்தெழுத்தை ஓதி நந்தி விலகி ஈசன் உறையும் ஞான வாசலில் சேந்து இன்புறலாம். இதுவே இறைவன் இருக்கும் எல்லைவாசல் என கண்டறிந்து தியானமும் தவமும் புரிபவர்கள் இனி இப்பூமியில் பிறப்பது இல்லையே!!!
*****************************************.
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 112
ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்
சாதி பேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது
ஆதியோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்
சோதியான ஞாநியாகிச் சுத்தம்மை இருப்பவனே!!!!
ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்
சாதி பேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது
ஆதியோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்
சோதியான ஞாநியாகிச் சுத்தம்மை இருப்பவனே!!!!
ஆதியிலிருந்தே பிரமமான ஒன்றிலிருந்தே அநேக அநேக ரூபங்களாகி மனித சாதி, மிருக சாதி, பறவை சாதி என பல பேதங்கலாகத் தோன்றி சகல உயிர்களாக ஆனது. முன்பிறவியில் ஆதியை அறிந்து தியானித்தவர்கள் நிலையடையாது மீண்டும் ஜென்மம் எடுத்தவர்கள் விட்ட குறை பற்றி வந்து மைப் பொருளை அறிந்து கொள்வார்கள். யோக ஞான சாதகத்தை தொடர்ந்து செய்து சுத்த ஜோதியான ஈசனை உணர்ந்து சுத்த ஞானியாகி இறைவனை அடைய பாடுபட்டு வாழ்ந்திருப்பர்.
*********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -113
மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே!!!!
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -113
மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே!!!!
மூலமான வித்திலிருந்து இயங்கும் நாத வித்து எனும் தாதுக்களால் இந்த பூமியும் உயிர்களும் தோற்றியது. இவ்வுலக வாழ்வில் வரும் இன்ப துன்பங்களின் அனுபவங்களால் இறைவனை அடுத்தும், விடுத்தும் வாழ்ந்து, மலர்ந்த பூக்கள் உதிருவது போல் வாழ்வு முடிந்ததும் ஐம்புலன்களும் பொறிகளும் கலங்கி பூமியில் மரணமடைகின்றனர். பிறப்பு, இறப்பு எனும் இவ்வுலக மாயையில் சிக்கி உழலும் மனிதர்கள் உடம்பில் நீ நின்று ஆட்சி செய்யும் மாயம் என்ன மாயம் ஈசனே!!!!
***********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -114
பாரடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்திலும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெளிந்த ஞானியே
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -114
பாரடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்திலும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெளிந்த ஞானியே
பூமியில் அடங்கியுள்ள யாவிலும் ஆகாயமாக விரிந்துள்ள அனைத்திலும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்த பரம்பொருளே சோதியாக உள்ளது. அச்சோதியே எல்லா உயிரிலும் வியாபஈத்து அவரவர் மனத்துள்ளும் புற உடம்பிலும் மெய்ப் பொருளாக விளங்கி நிற்கின்றது. அதனை அறிந்து தன சீவனிலே சிவனைக் கண்டு தியானிக்கும் யோகி தெளிந்த ஞானியே!!!
************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -115 மன்கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே !
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே !
மண்பாண்டமாகிய இவ்வுடலைச் சுமந்து ஏறாத மலையிலேல்லாம் ஏறி துன்புறுகின்றீர்கள். என்னால் ஆகாத காரியங்கள் யாவையும் செய்ய முடியும் என ஆணவத்தோடு கூறுகின்றீர்கள். தமக்குள்ளே இருக்கும் ஈசனை அறிந்து கொள்ளாமல் இருந்தாலும், கோயிலில் சென்று நாள்தோறும் இறைவனை தரிசித்து தரையில் தலைப்பட வனாகவும் மாட்டீர்கள். இப்படிப்பட்ட மனிதர்களோடு எப்படி என்னால் சேர்ந்து வாழ முடியும்.
*********************************
நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!