சிவவாக்கியம் (106-110) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்
சிவவாக்கியம் (106-110)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 106 அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இல்லை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயவே!!!
நீயே பரம்பொருள் என அறிந்து என் உடல், பொருள், ஆவியை உனக்கே என ஒப்படைத்துவிட்டேன். . அதனால் எனக்கு வேறு பயம் ஏதும் இல்லாதிருக்கிறேன் பராபரனே. உன்னை தினமும் கைக்கூப்பி வணங்கிடவும், மெய் பக்தியினால் சிரம் உருகி கண்ணீர்விட்டு ஆர்த்தார்த்து அழுதிடவும், எந்நேரமும் என் பிராணனை சிவசிவ என வாசியிலேற்றி தியானித்திடவும், என் உயிருக்கும், உடலுக்கும் உறுதுணையாக வந்து நான் வாழ உரமாக இருப்பது நீ எனக்கு உபதேசித்த 'ஓம்நமசிவய' என்னும் மந்திரமே.

*******************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -107
பச்சை மண் பதுப்பிலே புழுபத்திந்த வேட்டுவன்
நிச்சலும் நினைத்திட நினைந்த வண்ணம் ஆயிடும்
பச்சாமன் இடிந்து பொய் ப்றந்ததும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இயற்று கோலமே!
தும்பியான குளவியானது ஈரமான மண்ணைக் கொண்டு அழகிய கூடுகட்டி உணர்வுள்ள புழுவை வேட்டையாடி கொண்டு வந்து அடைக்கும். பின் எந்நேரமும் தன்னைப் போல் மாற்றுவதற்கு ரீங்கார ஓசையுடன் கொட்டிக்கொண்டே இருக்கும். இப்படி ஒரே நினைவோடு செய்யும் அதன் செயலால் அப்புழுவானது குளவி நினைத்தவாறே குளவியாக மாறிவிடும். அற்ப உயிராக இருந்த புழு குளவியாகி அக்கூட்டை உடைத்துக்கொண்டு தும்பியாக பறந்து செல்லும். இதனை அறிந்து கொண்டு ஒரே நினைவோடு பிராணனை இறைவனோடு இணைக்க தியானம் செய்யுங்கள். ஈசன் நடத்தும் நாடகமே எல்லாம் என்பதை உணருங்கள்.
********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -108
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன். நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும். அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான். அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே
************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -109
விழியினோடு புனல் விளைந்த வில்வவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும்
தெளியும் வல்ல ஞானிகாள் தெளிந்திருத்தல் திண்ணமே
கண்களில் கண்ணீர் சிந்தி அன்பால் விளைந்த கரும்புவில்லைக் கொண்ட மனோன்மணி ஆத்தாளை ஐந்தாவது யோனியில் பிறந்து அறிந்து கொள்ள வேண்டும். வெளியிலே அவள் சக்தியை உணராமல் எப்படி வேண்டுமானாலும் பிதற்றலாம். ஆனால் அவளுடைய அருட்செயல்களால் ஏற்படும் விளைவுகள் யாவும் எப்போதும் நிற்பதில்லை. பரந்து காணப்படும் ஆகாயம் நம் மனமாக இருப்பதை அறிந்து தன் ஆன்மாவில் மூல வித்தாக ஈசன் மெய்ப்பொருளாக இருப்பதை உணர்ந்து தெளிந்த ஞானிகள் திண்ணமாக தியானத்தில் இருப்பார்கள்.

****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -110 ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் அறிந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே!
ஓம் நமசிவாய என்பதை நன்றாக உணர்ந்து அதை நம் உடலில் உணர்ந்து கொள்ள வேடும். ஓம் நமசிவாய என்பது என்ன என்பதை எல்லாம் உணர்ந்து அதன் மெய்யான தன்மைகளை சிந்தித்து தெளிந்து கொள்ள வேண்டும். ஓம் நமசிவாய என்பது நம் உடம்பில் உயிராக உள்ள மெய்ப்பொருளே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இப்படி அனைத்துமாய் இருக்கும் பஞ்சாட்சரம் நம் உடம்பிலும், உயிரிலும் கலந்து நிற்பதை ஓம் நமசிவாய என ஓதி தியானியுங்கள்.
**********************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!