சிவவாக்கியம் (091-095)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 091
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!!!
உடம்பானது உயிர் எடுத்து வந்ததா? அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா? உடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறது. உடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆன்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து, ஆன்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக இறைவன் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலோ இருந்து உணர்ந்து கொண்டு ஞானம் போதியுங்கள்.
*****************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -092
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!!!
"ஓம்" என்ற ஓங்காரத்தில்தான் அனைத்தும் தோன்றுகின்றது. "ஓம்" என்பதில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று தத்துவங்கள் எழுத்துக்களாக அமைந்துள்ளது. அதில் "அ" என்னும் ஆகாயத் தத்துவத்தில் ஏழு உலகமும் ஆகி நிற்கின்றது. "உ" என்னும் விந்து தத்துவத்தில்தான் உருவம் தரித்து உருவாகின்றது. "ம" என்னும் த்த்துவத்தினால்தால் இவ்வுலகம் முழுவது மயங்குகின்றது. இதில் அவ்விலும், உவ்விலும் மவ்விலும் அமர்ந்திருப்பது "சி" என்னும் சிகாரமே.
********************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -093
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மறத்தில் ஊறல் அன்றுகான்
மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!!!
மந்திரங்கள் யாவையும் படித்து ஓதி மயங்குகின்ற மனிதர்களே! மந்திரம் என்பது மனதின் திறமே! மந்திரங்கள் தர்ம வழியையே பின்பற்றும். மந்திரங்களை உணர்ந்து உச்சரிக்கும் பொது அதில் ஏழும் சப்தங்களின் அதிர்வலைகள் மூலாதாரத்தில் மோதி அங்கிருக்கும் கனலான வாயுவை எழுப்புதற்கே அன்றோ அமைக்கப்பட்டது. அதனால் வாசி மேலே ஏறி பிராணசக்தி கூடி மரணமில்லா பெருவாழ்வு அடைவார்கள். மந்திரங்களை முறையாக அறிந்து ஓதி ஆறு ஆதாரங்களிலும் நிறுத்தி தியாநிப்பவர்களுக்கு மரணம் ஏதும் இல்லையே!!!

*************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -094
என்ன என்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பண்ணுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென
மின்னக்த்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறு போல்
என்னகத்தில் ஈசனும் யானும் அல்லது இல்லையே.
இலக்கணம் இல்லாத தமிழைப் போல் இலட்சியம் ஏதுமில்லாத மனிதர்களை என்னவென்று சொல்லுவது. பண்ணிசைத்துப் படும் செந்தமிழ் பாடல்கள் யாவும், பரம்பொருளின் பாதம் பற்றி இறைவனை அடைவதே குறிக்கோள் என்பதே மனிதனின் பண்பு என்று கூறுகின்றது. மின்னலாது தோன்றி, மின்னளிலேயே ஒடுங்கி, மின்னலாக மறந்தது, அது எங்கிருந்தும் ஒளியைப் பெற்றுக் கொள்ளாமல், மேக மூட்டங்களின் மோதலால் தானே தோன்றி ஒடுங்குவதைப் போல் எனக்குள் மன ஓட்டத்தை நிறுத்தி வாசியால் கனலும் அனாலும் கலந்து என்னுள் சோதியான ஈசனைக் கண்டு தியானம் செய்தேன். அங்கு என்னையும் ஈசனையும் தவிர வேறு யாரும் இல்லையே !!
****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -095
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆழமான வாறு போல்
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர்
ஆறு வித்தை ஒர்கிளீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்முளே பரப்பிரமம் ஆவீரே!
மிகச்சிறிய ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளே ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இன்ப துன்பமுறும் உடலாக உலாவுகின்றது. ஒரேழுத்தே பிரமமாகி நமக்குள் இருப்பதை அறிந்து அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் வாசியை ஏற்றி இறக்கி யோகவித்தை செய்வதை அறியாமல் இருக்கும் அறிவிலாத மனிதர்களே!! உமக்குள்ளேயே இந்த வாசி யோகத்தைச்செய்து பாருங்கள். மெய்ப்பொருளை அறிந்துப் பார்ப்பானைப் பார்த்து, வித்தாக உள்ள ஈசனை தியானம் செய்யுங்கள். நீங்களே அந்த பரப்பிரம்ம்மம் ஆவீர்கள்.
****************************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!