சிவவாக்கியம் (086-090) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்
சிவவாக்கியம் (081-085)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 086 அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
பரவி ஓடி உம்முளே பறந்து வந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே
ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த மனத்தை குவித்து நம்மில் வெட்டவெளியான இடத்தில் நிறுத்தி நினைவால் நினைந்து தியானம் செய்ய மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும். பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் சோதியை தனக்குள்ளே கண்டு பரம்பொருளையே எப்போதும் கருத்தில் வைத்து தியானியுங்கள். அதுவாகிய மெய்ப்பொருளே இறவாநிலை பெற காரணமாகும்.

********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 087
சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூர்ணா
வீதியாக ஓடி வந்து வின்னடியின் ஊடுபோய்
ஆதிநாதன் என்று அனந்த காலம் உள்ளதே.
பூரணமாகிய சோதியில் ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தனாரீயாக நின்றது எது எனவும், எனக்குள் பரிசுத்தமான இடம் எது எனவும் காட்டி, எனக்கு யோகம் தியானம் செய்யும் முறைகளையும் போதித்து உபதேசித்த மெயகுருனாதனே வாசி யோகத்தில் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டின் வீதி வழியாக மேலேறி சகஸ்ரதளத்தை அடைந்து வெளியாக விளங்கும் இடத்தின் அடியில் சென்று சேருகின்றது. அங்கெ சோதியாகவும், நாதனாகவும், ஆதியாகவும் ஈசன் அனாதியாக எப்போதும் இருக்கின்றான்.

*******************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 088
இறைவனால் எடுத்த மாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவு நாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமைந்ததே
நமது உடம்பிலேயே சிவன் இருக்கும் சிதம்பரமாகிய ஆகாயத்தலத்தில் அறிவாக விளங்கும் சித்தத்தை அறியுங்கள். அவ்வறிவால் அமைந்த இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்காக ஆராதாரன்களாய் அமைந்துள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து நாதத்தை உண்டு உருவாக்கி ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் வெளிவுறம். அப்படி வரும் கோடிக்கணக்கான உயிர் ஒவ்வொன்றிலும் சிவனே அதனுள் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -089
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!
நெஞ்சிலே இருந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணவாயுவை யோகப் பயிற்சியினால் நிறுத்தி அன்பெனும் பக்தியுடன், தியானம் செய்து, வாசியை உங்களுக்குள்ளேயே இருத்த வல்லவர்கலானால் அவ்வாசியானது நம் பிராணனில் கலந்து இறைவன் இருப்பிடத்தை காட்டும். செய்த பாவவினைகள் யாவும் அகலும். எண்திசைகள் யாவிலும் இயங்கும் ஈசனை அறிந்துணர்ந்து, தும்பியானது ரீங்காரம் இடுவதைப் போல உனக்குள்ளே வாசியை ஓட்டி தியானம் செய்து இறைவனை அடையுங்கள்.

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 090
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்து நின்ற ஏக போக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிகப்புமாகி மெய் கலந்து நின்றதே!
தில்லையில் ஆடும் ஈசன் நம் உடலில் இடங்கொண்டு ஆகாய எல்லையில் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றான். வாசிக் காற்றை மேலேற்றி செய்யும் பயிற்சியினால் அவ்வாசியானது ஈசனை வணங்கி அவனுடன்
சேர்க்கின்றது. மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே. மனமே வாசியாகி எல்லையாக இருக்கும் ஆகாயத்தையும் கடந்து இறையைச் சேர்வதுவே ஆனந்தம். அவ்விறையையே உயிராக வெள்ளையும் சிகப்புமாக நம் உடலில் மெய்ப்பொருளாக நின்றது.

****************************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!