சிவவாக்கியம் (081-085)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 081
மிக்க செல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்தி மேனி வெந்து போவது அறிகிலீர்
மக்கள் பெண்டிர் சுற்றம் மாயை காணும் இவையெலாம்
மறலி வந்து அழைத்த பொது வந்து கூடலாகுமோ?
மிக்க செல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்தி மேனி வெந்து போவது அறிகிலீர்
மக்கள் பெண்டிர் சுற்றம் மாயை காணும் இவையெலாம்
மறலி வந்து அழைத்த பொது வந்து கூடலாகுமோ?
பாவச் செயல்கள் செய்து நிறைந்த செல்வங்களைப் பெற்றும் நிம்மதி இன்றி வாழும் பாவிகளே! நீர் இறந்து போனால் சுடுகாட்டிற்கு கொண்டு பொய் விறகு, விராடியினால் அடுக்கி தீ வைத்து எரித்து இவ்வுடம்பு ஒருபிடி நீரும் இல்லாது சாம்பலாவதை அறிய மறந்தீர்களே! மக்கள், மனைவி, உறவு என்பவஈகள் யாவும் வெறும் மாயை என்பதை உணருங்கள். எமன் வந்து இவ்வுயிரை எடுத்து போகும் பொது நீ செய்த புண்ணிய பாவமின்றி வேறு யாரும் கூட வரமாட்டார்கள்.
***************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -082
ஒக்க வந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமை பெற்ற ஊரிலே
அக்கணித்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அநேக பாவம் அகலுமே
ஒத்து வாழும் பெண்ணுடன் சிற்றின்பத்தில் ஈடுபடும்போது அதையே யோகமாக்கி பேரின்பம் அடையும் பட்டணம் ஒன்று என்றும் இளமையோடு இருக்கின்றது. அந்த இடத்தில் ருத்திராட்ச மாலையும் கொன்றை மலரையும் சூடி ஈசன் உள்ளமாகிய அம்பலத்தில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார். அவனை அறிந்து அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி தியானம் செய்தால் செய்த அநேக பாவங்கள் யாவும் அகன்று விடும்.
****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தை -083
மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாட மாளிகைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல் கிடந்தது உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்
மாடமாளிகைகள் கட்டி மாளிகைகள் கட்டி மாடு, கன்று போன்ற சகல செல்வங்களையும் சம்பாதித்து தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று விபத்தில் நடப்பது போல் எமதூதர்கள் ஒரு நொடியில் உயிரைக் கொண்டு போன பின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும் உயிர் போனதை உணர்ந்தும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள். அவ்வுடலில் உயிராய் நின்ற ஈசன் ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து இரவா நிலைபெற்று இறைவனை சேர தியானம் செய்யுங்கள்.
**********************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தை -084
பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே
பழுதிலா கர்ம கூட்டம் இட்ட எண்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடு கொண்ட அப்பனே
நீலகண்ட காலகண்ட நித்தியா கல்லியாணனே
பரமனையே பாடுகின்ற உத்தமபக்தர்கள் இறைவனின் ஆடுகின்ற திருவடியையே தியானிப்பார்கள். குற்றமில்லாத கர்ம யோகிகள் கூட்டம் அரஹர என கோஷம் இட்டுக் கூவி நாதோபாசானையால் அழைப்பதும் எங்கள் பரமனையே. என்றென்றும் உள்ள செம்மையான போன்னம்பலத்துள் சோதியாக நின்று நடராஜனாக ஆடல் புரியும் எங்கள் அப்பனே. நீயே ஆழம் உண்ட நீலகண்டன், நீயே காலனை உதைத்த காலகண்டன், நீயே நித்தியமுமாய் ஆனந்தம் தரும் கல்யாண குணத்தவன்.
*************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தை -085
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையேல்
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடங்கினால்
தேனகத்தில் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே
இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவது போல் ஈசனின் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.

****************************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!