சிவவாக்கியம் (071-075)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை--071 அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்கவேண்டும் என்றாலோ மண்ணுலே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர்.
நாம் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் இருக்க முடியுமா? இருந்து இறக்க வேண்டும் என்று தானே இப்பூமியில் நம்மைப் படைத்தனர். குறுகிய எண்ணம் இல்லாத என் குருநாதன் எனக்கு உபதேசித்த சிவனாம என்ற அஞ்செழுத்தையும் இறப்பதற்கு முன் அறிந்து கொண்டு வணங்கி செபம் செய்து தியானம் செய்யுங்கள். அதுவே இப்பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாக இருப்பதை உணராமல் இறை திருவடியை மறந்து கெடுகின்றீர்கள்.
***********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -072
அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ
விண்பறந்த மாத்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ
விண்பறந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.
'நமசிவய' என்ற அஞ்செழுத்துக்கும் (9+11+4+15+12=51) எண்களைக் கொடுத்து அம்பத்தோர் அட்சரங்களாக்கி அமைத்து அதை ஒரேழுத்தான 'சி' யில் அடக்கினர். ஆகாயத்தில் பறந்து நின்ற சோதியான சிகாரமும், வேதங்கள் நான்கும் கூறும் சிகாரமும் ஒன்றே. மூலாதரத்திலிருந்து ஆஞ்ஞா வரை ஓம் நமசிவய என்று உச்சரித்து தியானியுங்கள். நம் உடம்பிலேயே இழிந்கமாகவும், பீடமாகவும் அமைத்திருப்பது சிவமே என்பதை உணருங்கள்.

***************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -073
சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே
சிவயநம என்ற மந்திரமே சிவன் இருக்கும் அட்சரமாகும். நமக்கு ஆபத்து வரும் காலங்களில் உபாயமாக வந்து காப்பதற்கு நம்பி உபாசிக்க உண்மையாக உள்ள மந்திரம் இதுவே. நம் பிராணனிலிருந்து கடந்த்க்ஹு போன பிராண வாயுவை மீண்டும் நம் பிரானநிலேயே சேர்த்து ஆயுளைக் கூட்ட பிரானவாமம் செய்தால் அதற்கு உற்ற துணையாக இருப்பது சிவாயநம எனும் அஞ்செழுத்து மந்திரமே. ஆதலின் அதை ஓதி தியானியுங்கள். அதுவே உங்களுக்கு உபாயமாக என்றும் வரும்.
*************************************சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -073
சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே
சிவயநம என்ற மந்திரமே சிவன் இருக்கும் அட்சரமாகும். நமக்கு ஆபத்து வரும் காலங்களில் உபாயமாக வந்து காப்பதற்கு நம்பி உபாசிக்க உண்மையாக உள்ள மந்திரம் இதுவே. நம் பிராணனிலிருந்து கடந்த்க்ஹு போன பிராண வாயுவை மீண்டும் நம் பிரானநிலேயே சேர்த்து ஆயுளைக் கூட்ட பிரானவாமம் செய்தால் அதற்கு உற்ற துணையாக இருப்பது சிவாயநம எனும் அஞ்செழுத்து மந்திரமே. ஆதலின் அதை ஓதி தியானியுங்கள். அதுவே உங்களுக்கு உபாயமாக என்றும் வரும்.
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -074
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே
உருவாக உள்ளது ஆனால் உருவும் அல்ல. வெளியாகி இருப்பது ஆனால் வெளியும் அல்ல. ஐம்புலன்களில் உருவாக உள்ளது, ஆனால் உருவும் அல்ல. ஐம்புலன்களில் ஒன்றை சேர்ந்து இருப்பது ஆனால் அதைச் சார்ந்து நிற்கவில்லை. மறுவாக உள்ளது ஆனால் தூரம் அல்ல. பஞ்சபூதங்களில் எல்லாம் உள்ளது அனால் மற்றதல்ல. பாசம் அற்றிருப்பது ஆனால் பாசம் அற்றதல்ல. மிகவும் பெரியது ஆனால் பெரியதும் அல்ல. மிகவும் சிறியது ஆனால் சிறியதும் அல்ல. பேசும் தன்மை கொண்டது ஆனால் பேசாதது. ஆன்மா தானாகி தற்பரமாய் நின்ற அதை அறிவதற்கு அறிய மெய்ப்போருல்களின் உண்மைகளை யார் அறிந்துகொண்டு தியானம் செய்து காண வல்லவரோ!!
***********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 075
ஆத்துமா அனாதியோ அனாத்துமா அனாதியோ?
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நீல்களும் சதாசிவமும் அனாதியோ?
வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே?
உனக்குள் இருக்கும் ஆன்மா அனாதியா? அனைத்திலும் இருக்கும் ஆண்டவன் அனாதியா? உனக்குள் ஐம்போரிகலாகவும், ஐந்து புலன்கலாகவும், இருப்பவை அனாதியா? தத்துவ விளக்கங்கள், உண்டென்றும் இல்லையென்றும் தர்க்கம் செய்யும் வேதாகம நூல்கள் அனாதியா? அல்லது ஆஞ்ஞாவில் உள்ள சதாசிவம் அனாதியா? என்பதை யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே எது அநாதி என்பதயும் எது நித்தியம் என்பதை அனைவரும் உணரும் வண்ணம் விரைந்து வந்து கூறவேண்டும்.
****************************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
Please read this book sir.
ReplyDeletewww.vallalyaar.com/?p=409
Thanks
Balu
[ma]மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பரே பாலு அவர்களே!!! நிச்சயமாக வள்ளலார் வலைதளத்தினை கண்டு கருத்தினைப் பதிவு செய்கின்றேன். !!!![/ima]
ReplyDelete