சிவவாக்கியம் (486-490)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -486அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
என்னகத்தில் என்னை நான் எங்குமோடி நாடினேன்
என்னகத்தில் என்னையன்றி ஏது மொன்று கண்டிலேன்
மின்னெழும்பி வின்னகத்தின் மின்னொடுங்கு மாறு போல்
என்னகத்துள் ஈசனோடி யானுமல்ல தில்லையே.
என்னகத்தில் ஆறு ஆதாரங்களிலும் ஏழாம் தலமான சகஸ்ராரத்திலும் என் உள்ளமாகிய கோயிலிலும் எல்லா இடங்களிலும் மனதை ஒட்டி ஈசனையே நாடி தேடினேன். என் உள்ளத்தில் நானாக நின்ற மெய்ப்பொருள் ஒன்றை யன்றி வேறு ஒன்றும் ஏதும் இல்லை என்பதை கண்டு கொண்டேன். மின்னல் தோன்றிய விண்ணிலேயே மின்னல் ஒடுங்குவது போல் என் அகத்திலேயே ஆகாயத்தில் ஈசன் ஒடுங்கியிருப்பதை அறிந்து கொண்டேன். என் அகத்துள் உள்ள மெய்ப்பொருளில் ஈசனும் யானும் இணைந்து ஒன்றாகி இருப்பதை உணர்ந்தேன். என் உயிரில் உள்ள ஈசன் ஓடிவிட்டால் நான் என்ற ஒன்று இல்லையே..
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -487

நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ
நாலு சாம மாகிய நவின்ற ஞான போதமாய்
ஆலமுண்ட கண்டனும் அயனுமந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே.
நான்கு வேதங்களும் சொல்லுகின்ற ஞானப் பொருள் ஒன்றை அறிவீர்களா? சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளிலும் சொல்லப்படும் ஞான போதமாய் அமைந்திருந்த மெய்ப்பொருள் அதுவாய் உள்ளது. ஆலமுண்ட நீலகண்டனும் பிரமனும், திருமாலும் ஒன்றாகி அதிலேயே அமர்ந்திருப்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து தங்கள் நெஞ்சமாகிய உள்ளக் கோவிலில் தரித்து நின்ற அதுவே சிவம் என்பதை உணர்ந்துகொண்டு அதிலேயே நினைவை வைத்து தியானத்தில் இருங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -488
முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுர மும்முளே அடங்க வாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமச்சிவாயவே.
.
சித்தர் சிவவாக்கியம் -488
முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுர மும்முளே அடங்க வாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம் நமச்சிவாயவே.
.
பனிரெண்டு அங்குல அளவு வெளிச் செல்லும் பிராணவாயுவான மூச்சினால் மூலமாகி மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை எழுப்ப சந்திர, சூரிய, அக்னி கலைகளால் மூன்று வித பேதமாக நின்ற அகார, உகார, மகார அட்சரங்களால் சுழுமுனை வழியாக முதுகுத் தண்டின் ஊடே மேலேற்றி, நான்கு கைகள் பொருந்தியிருக்கும் சதுர வீட்டில் வீற்றிருக்கும், உமக்குள் இருக்கும் மெய்ப்பொருளில் அடங்கச் செய்வதே வாசி யோகமாகும். மெய்யெனும் உடம்பில் சதுரமாகிய வீட்டில் உள்ள மெய்ப்பொருளில் ஞான தீபமாய் விளங்கும் சோதியே ஈசன். அதையே எண்ணி உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயவே. (முச்சதுரம்= 3 X 4= 12)
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 489
மூல மண்டலத்துலே முச்சதுர மாயமாய்
நாலு வாசல் என்விரல் நடு உதித்த மந்திரம்
கோலியென்றும் ஐந்துமாய்க் குளிர்ந்தலந்து நின்றறீ
மேலுமேலு நாடினேன் விழைந்ததே சிவாயமே.

மூல மண்டலத்திலுள்ள உயிரிலிருந்து பனிரெண்டு அங்குல அளவு வெளிவிடும் மூச்சில் நான்கு அங்குல அளவு உயிரில் உள்ள பிராணவாயு மாயமாக சென்று கொண்டே இருக்கின்றது. அந்த உயிர்காற்று மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் இருக்கும் நான்கு வேதங்களாய் நமக்குள் இருக்கும் வாசலில் நம் கட்டை விரல் அன்குஷ்ட அளவில் அமைந்திருக்கின்றது. அதன் நடுவில் நடுவாக உதித்திருக்கும் ஓரெழுத்து மந்திரமே சிகாரம். அதுவே நமசிவய என்ற அஞ்செழுத்தாகி ஐந்து பூதங்களும் நீராகவும் நெருப்பாகவும் குளிர்ந்தலர்ந்த பனிக்கட்டி போல நின்றதை அறிந்து உணர்ந்து அதிலேயே தியானித்து நில்லுங்கள். அதுவே சிவம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து கொண்டு அதன் மேலேயே ஒரே நாட்டமுடன் விரும்பித் தவம் செய்யுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 490
இடங்கள் பண்ணி சுத்தி செய்தே யிட்ட பீடமீதிலே
அடங்க நீரும் பூசல் செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஓங்குகின்ற நாதனார் உதிக்கு ஞானம் எவ்விடம்
அடங்குகின்ற தெவ்விடம் அறிந்து பூசை செய்யுமே.
புண்ணிய இடங்களைத் தேடிச் சென்று கருவறையை சுத்தம் செய்து பீடமிட்டு அமைத்திருக்கும் சிலைகளில் வாசனை திரவியங்களாலும் புனித நீராலும் அபிஷேகம் செய்து பூசைகள் பண்ணுவீர்கள். ஆனால் உங்கள் உள்ளத்தை அறிந்து அதனை சுத்தி செய்து ஈசனார் கட்டாதலிங்கமாக இருக்கும் பீடத்தை உணர்ந்து அதிலேயே அடங்கி பூவாக விளங்கும் உங்கள் ஆன்மாவை அசையாமல் நிறுத்தி பூசை செய்வதே அரியதான தவம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் பீடம் மீதில் ஒதுங்கியிருக்கும் ஈசனார் ஞானப் பொருளாகி உதிப்பது எந்த இடம்? அடங்கி இருப்பது எந்த இடம்? என்பதனை அறிந்து கொண்டு அங்கேயே உங்கள் ஆன்மாவை நிறுத்தி இந்த மெய் பூசையை செய்து

தியானித்திருங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!