சிவவாக்கியம் (426-430)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -426அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
பிரான் பிரான் என்று பினாத்துகின்ற மூடரே
பிரானை விட்டு மெம்பிரான் பிரிந்தவாற தெங்ஙனே
பிரானுமாய்ப் பிரானுமாய்ப் பேருலகந் தானுமாய்ப்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர் காணுமும்முடல்.
உடம்பை விட்டு பிராணன் போகப்போகும் கடைசி நேரத்தில் எம்பிரானே என பினாத்துகின்ற மூடர்களே! உங்கள் உடம்பிலேயே பிராணனை விட்டுப் பிரியாதிருந்த எம்பிரானை உணராமலேயே இருந்தீர்கள். உடம்பை விட்டு உயிர் எவ்வாறு பிரிந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம் பிராணனில் இருந்து எம்பிரானே இந்த பேருலகம் எங்கும் தானாகி நின்ற ஈசனால் முளைத்தேழுந்ததே உங்கள் உடம்பு என்பதைக் கண்டு கொண்டு அவ்வீசன் மீதே பித்தாக இருந்து உணருங்கள்..
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -427

ஆதியில்லை அந்தமில்லை ஆன நாலு வேதமில்லை
சொதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதி கண்டு கொண்டபின் அஞ்செழுத்து மில்லையே. .
பரம்பொருளான ஈசனுக்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அனாதியாக என்றும் நித்தியமாய் உள்ள அப்பொருள் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை. நான்கு வேதங்களால் ஆனதும் இல்லை, அது சோதியான தீயும் இல்லை. எந்த சொல்லுமில்லை, சொற்கள் யாவும் இறந்த தூய மனவெளி, அதற்கென்று எந்த நீதியும் இல்லை, அன்பும் இல்லை, இப்படித்தான் என்று சொல்லி நிச்சயிக்கப்படாதது. இப்படியாக எல்லாம் உள்ளதும், இல்லாததுமாக விளங்கும் ஆதியான வாலையைக் கண்டு கொண்ட பின் ஒரேழுத்தைத் தவிர அஞ்செழுத்து இல்லையே.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -428
அம்மையப்பனப்பு நீரமர்ந்த போதறிகிலீர்
அம்மையப்பனான நீராதியான பாசமே
அம்மையப்ப னின்னை யன்றி யாருமில்லை யானபின்
அம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை இல்லையே.
சித்தர் சிவவாக்கியம் -428
அம்மையப்பனப்பு நீரமர்ந்த போதறிகிலீர்
அம்மையப்பனான நீராதியான பாசமே
அம்மையப்ப னின்னை யன்றி யாருமில்லை யானபின்
அம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை இல்லையே.
அம்மை அப்பனின் அப்புவான நீரில் நீங்கள் அமர்ந்திருந்த போது அறியாமல் இருந்தீர்கள். அம்மை அப்பனாக நீரே ஆதியான பாசமாகவும், மனமாகவும் ஆனதை அறிந்து கொள்ளுங்கள். யாவையுமே அவ்வீசனிடம் ஒப்படைத்து சரணடைந்து அம்மை அப்பன் நின்னையன்றி வேறு யாரும் இல்லை என்று அவன் திருவடியையே தியானித்திருங்கள். அம்மை அப்பனாக அவனே இருந்து ஆண்டு கொண்டு அருள்வான், பின் அவனையன்றி வேறு யாரும் இல்லை இல்லையே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 429
நூறு கோடி மந்திரம் நூறு போடி யாகமம்
நூறு கோடி நாளிருந் தூடாடினாலு மென்பயன்
ஆறு மாறு மாறுமா யகத்தி லோரெழுத்தாய்ச்
சீரை யோத வல்லிரேல் சிவ பதங்கள் சேரலாம்.

நூறு கோடி மந்திரங்களையும், நூறு கோடி ஆகமங்களையும் கடைப் பிடித்து, நூறு கோடி நாட்களிலிருந்து ஊடாடி ஒழுகி ஓதி வந்தாலும் அதனால் என்ன பயன் உண்டாகும். இறவா நிலையடைந்து இறைவனைச் சேர இதனால் எந்த பயனும் இல்லை. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டு படிகளையும் முறையாக அறிந்து கடந்து நம் அகத்திலேயே ஒரேழுத்து மந்திரமாய் உள்ள சிகாரத்தை உணர்ந்து அதனை சீராக வாசியினால் மேலேற்றி ஊத வல்லவர்களானால் சோதியில் கலந்து சிவபதங்கள் சேரலாம் என்ற உண்மையை உணர்ந்து தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 430
முந்த வோரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
அந்த வோரெழுத்துளே பிறந்த காய மானதும்
அந்த வோரெழுத்துளே யோகமாகி நின்றதும்
அந்த வோரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே.
ஆதிக்கும் முந்தையான சோதியான ஒரெழுத்திலிருந்து முளைத்து எழுந்த செஞ்சுடராகியது நெருப்பு. அந்த ஒரெழுத்திலிருந்தே நீராக வந்து உயிராகி பிறந்து உடம்பு ஆனது. அந்த உடம்பிலேயே ஒரெழுத்தாக இருந்து அதற்குள் ஏகமாக சிவம் நின்றது. இவ்வாறு ஓரெழுத்தாய் உலகிலும் உயிரிலும் இயங்கும் ஈசனாகிய மெய்ப் பொருளையும் நன்கு அறிந்து உங்களுக்குள் உணர்ந்து கொள்ளுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!