சிவவாக்கியம் (421-425)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -421
சென்று சென்றிடந் தொறும் சிறந்த செம்பொன்னம்பலம்
அன்று மின்று நின்றதொ ரனாதியான தம்பலம்
என்று மென்றிருப்பதோர் இறுதியான அம்பலம்
ஒன்றியோன்று நின்றது ளொழிந்ததே சிவாயமே.
பிறந்து இறந்து மீண்டும் பிறந்துழலும் நமக்குள் இருக்கும் சோதி யாவர்க்கும் நின்று சென்ற இடங்களில் சிறந்த செம்மையான பொருளாகியது. பொன்னம்பலம் அன்றும் இன்றும் யாவர்க்கும் ஒன்றாகி என்றும் நித்தியமான அனாதியான ஈசன் விளங்கும் அம்பலம். என்றென்றும் நிலையாகவும், உறுதியாகவும், இறுதியாகவும் உள்ள ஒரெழுத்தான அம்பலம். அதிலேயே ஒன்றி ஒன்றாகி நின்று தியானியுங்கள். ஒன்றான சோதியில் ஒன்றி ஒழிந்திருப்பதுவே சிவம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -422

தந்தை தாய் தமரும் நீ சகல தேவதையும் நீ
சிந்தை நீ தெளிவு நீ சித்தி முத்தி தாணும் நீ
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவ நீ என்னையாண்ட ஈசனே. .
என் தந்தையும், தாயும், சுற்றமும் நீயே. சகல லோக தேவதைகளும் நீயே. என் சித்தத்திலிருந்த சிந்தையும் நீயே. தெளிவான அறிவும் நீயே. சித்தியும், முத்தியும் தருபவன் நீயே. விந்தாகிய சோதி நீயே. அதில் விளைந்த நாதமான உயிரும் நீயே. வேதங்கள் உரைக்கும் மேலான தெய்வமும் நீயே. எனக்குள் இருந்த எந்தை நீயே. ஏக இறைவன் நீயே. என்னையும் மெய்ப் பொருளாகக் கொண்டு என்னை ஆண்டு கொண்டவன் நீயே, ஈசனே.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -423
எப்பிறப்பிலும் பிறந்திறந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப்பிலும் பிறந்தென்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலமறுத்தே ஆசை நீக்க வல்லிரேல்
செப்பு நாத வோசையிற் றெளிந்து காணலாகுமே.
சித்தர் சிவவாக்கியம் -423
எப்பிறப்பிலும் பிறந்திறந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப்பிலும் பிறந்தென்ன நீறு பூசுறீர்
அப்புடன் மலமறுத்தே ஆசை நீக்க வல்லிரேல்
செப்பு நாத வோசையிற் றெளிந்து காணலாகுமே.
எல்லாப் பிறப்பிலும் பிறந்து இறந்து அழிந்த ஏழைகளே! பெறுதற்கரிய இம்மானிடப் பிறப்பில் பிறந்த நீங்கள் இறவா நிலைப் பெற்று இறைவனை அடைய நினையாது, நீராக நின்ற நிலையை உணராது, சாம்பலை திருநீறு என்று உடம்பு முழுதும் பூசித்திரிகிறீர். நீரால் விளைந்த மும்மலங் களையும், ஞானிகள் செப்பும் நாத ஓசை உங்களுக்குள் தோன்றி, சோதியில் சேர்வதை உணர்ந்து தெளிவாகக் காணலாம்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 424
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்று நீர் மரித்த பொது சொல்வீரோ
மந்திரங்களும் முளே மதிக்க நீறு மும் முளே
மந்திரங்களாவது மனத்தினைந் தெழுத்துமே.
.

பற்பல மந்திரங்களைக் கற்று ஓதியும் உண்மையை உணராமல் மயங்குகின்ற மனிதர்களே! இத்தனையும் படித்தும் செத்துவிட்டால் அம்மந்திரங்களை உங்களால் சொல்ல முடியுமா? ஆதலால், உடலில் உயிர் இருக்கும் போதே மந்திரங்களாக உங்களுக்குள் நின்ற ஓங்காரத்தையும், அதனுள் இருந்த ஊமை எழுத்தையும் அறிந்து கொள்ளுங்கள். உயிர் இருந்தால்தான் யாவரும் மதிப்பார்கள். அந்த உயிருள் நீராக நின்ற ஈசனை உணர்ந்து, அவனையே மனத்தில் இருத்தி அஞ்செழுத்தை நினைந்து தியானியுங்கள். மந்திரங்களாவது உங்கள் மனத்தில் நின்ற ஒரேழுத்தே. அதுவே அஞ்செழுத்தாக இருப்பது உண்மை.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 425
எட்டு யோக மானதும் இயங்குகின்ற நாதமும்
எட்டு வக்கரத்துளே உகாரமும் மகாரமும்
விட்டலரந்த மந்திரம் வீணாத் தண்டின் ஊடுபோய்
அட்ட வக்கரத்துளே அமர்ந்ததே சிவாயமே.
அட்டாங்க யோகம் செய்வதனால் வாசி இலயத்தினால் இயங்குகின்ற நாதமும், அகாரமாகிய எண்சான் உடம்பின் உள்ளே உகாரமாகிய உயிரும், மகாரமாகிய மனமும் சேர்ந்து ஓங்காரமாகி விட்டு எழுந்த ஒரெழுத்து மந்திரம் வாசியினால் முதுகுத்தண்டின் நடுவாக ஊர்ந்து மேலேறி அகாரமான சூரியனில் அமர்ந்திருந்த சோதியைச் சேரும். அதுவாக இருந்ததே சிவம் என அறிந்து தியானியுங்கள்.

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!