சிவவாக்கியம் (411-415)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -411
ஆடுகின்ற எம்பிரானை அங்கமிங்கு நின்று நீர்
தேடுகின்ற வீணர்காள் தெளிவ தொன்றை ஒர்கிலீர்
நாடி யாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்
கூடொணாத தற்பரங் குவிந்து கூடலாகுமே. .
நமக்குள் சிற்றம்பலமாகிய இடத்தில் ஆடிக் கொண்டிருக்கின்ற எம்பிரானாகிய ஈசனை அங்கும் இங்கும் நின்று நீராகத் தேடுகின்ற வீணர்களே! தெளிவான நீராக நின்ற ஒன்றை அறிந்து உணர்ந்து அந்த ஒன்றையே ஒன்றி தியானியுங்கள். அதனையே நாடி நாடி 'உம்' என்ற உகாரத்தை உணர்ந்து அகராத்தையே நோக்கி ஒரே நினைவுடன் தியானிக்க வல்லவர்கலானால் எவருக்கும் கூடி கிடைக்காத தற்பரமாகிய மெய்ப் பொருள் கூடி எல்லாமாக குவிந்து நிற்கும் சோதியை சேரலாம்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -412

சுற்றி ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர் வெளி
சத்தியுஞ் சிவமுமாகி நின்ற தன்மை யோர்கிலீர்
சத்தியாவது உம்முடல் தயங்கு சீவன் உட்சிவம்
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இருந்த கோலமே.
சுற்றி ஐந்து பூதங்களும் ஒன்றாகி கூடியிருக்கும் இடத்தில் சொல்லிறந்த ஓர் எழுத்தாக விளங்கும் வெளியில் சத்தியும் சிவமும் ஒன்றாகி நின்ற மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து ஓர்ந்து நில்லுங்கள். அதிலிருந்தே சத்தியாக ஆகியதே உங்கள் உடம்பு. உடம்பில் நின்று இயங்கும் உயிரில் உட்சோதியாய் உள்ளதே சிவம். இப்படி ஈசன் இருந்த கோலத்தை அறிந்து கொள்ளாமல் பித்தராக திரியாதீர்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -413
அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.
சித்தர் சிவவாக்கியம் -413
அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.
அகாரம் அம்பலமாக இருக்கும் இடத்தில்தான் அநாதியான ஈசன் கோயில் கொண்டுள்ளான். உகாரம் அம்பலமாகிய இடத்தில்தான் ஈசன் உண்மையாக உள்ளது. மகாரம் மனதாக அமைந்து சோதியே வடிவமாகி அமைந்தது. சிகாரமே ஆதியும் நடுவும் அந்தமும் ஆகி நின்றதை அறிந்து தெளிந்து தியானியுங்கள், அதுவே சிவம் என்பதை உணர்ந்து.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 414
சக்கரம் பரந்த தோடிச் சக்கரம் போல பலகையாய்ச்செக்கிலாடு மெண்ணெய் போலச் சிங்கு வாயு தேயுவும்
உக்கிலே யொளி கலந்து யுகங்களும் கலக்கமாய்ப்
புக்கிலே புகுந்த போது போன வாற தெங்ஙனே.
.

வண்டிச் சக்கரம் கழன்று ஓடியதால் வெறும் பலகையாய் கிடக்கும் வண்டியைப் போல், சக்கரமாக விளங்கிய வாலை பறந்தோடியதால் உயிர் போய் உடம்பு கிடக்கின்றது. செக்கினில் ஆடி எடுக்கும் எண்ணெய் போல உடம்பினில் சிகாரத்தால் காற்றையும் நெருப்பையும் இணைத்து உயிரிலே இருக்கும் சோதியிலே கலந்து யுகங்கள் தோறும் நில்லுங்கள். பூவிலே புகுந்திருந்த ஆன்மா கலக்கமாய் உடலை விட்டு போனது எவ்வாறு என்பதை அறிந்து கொண்டு ஈசனை தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 415
வளர்ந்தெழுந்த கொங்கை தன்னை மாயமாமென்றெண்ணி நீர்
வளங்கொள் சீவராமுடம்பை உண்மையாகத் தேர்விர்காள்
விளங்கு ஞான மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல்
களங்க மற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே.
இளம்பெண்களின் வளர்ந்தெழுந்த கொங்கைமேல் மயங்கி வீழும் ஆசையை விட்டு அதை மாயம் என்று எண்ணியிருங்கள். அதைப் போன்ற கொள்கையாய் இருந்து எல்லா வளங்களும் கொண்ட உயிர் உறையும் சூட்சம உடம்பை உணர்ந்து அதுவே உண்மையென்று அறிந்து யோகஞான சாதனகங்களை பயின்று பாடுபடுங்கள். ஞானம் விளங்கும் பெரியோர்களின் ஞான உபதேசங்களைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். மெய்யான இடத்திலிருந்து மெய்ப் பொருளை உணர்ந்து தியானம் செய்யுங்கள். அதனால் மனக்குற்றங்கள் யாவும் நீங்கி களங்கமில்லாது நெஞ்சக் கோவிலில் வாழும் ஈசனோடு சேர்ந்து, இறைகருத்து தானே வந்து புகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!