சிவவாக்கியம் (416-420)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -416
நாலு வேதமொதுகின்ற ஞானமொன் றறிவிரோ
நாலு சாம மாகியே நவின்ற ஞான போதமாய்
ஆல முண்ட கண்டனும் அயனுமந்த மாலுமாய்ச்
சால வுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.
நான்கு வேதங்களும் சொல்கின்ற ஞானப்பொருள் ஒன்று உங்களிடமே உள்ளது என்பதை அறிவீர்களா? நான்கு சமயங்களிலும் குருநாதன் சொல்லித்தந்த வண்ணம் யோக ஞான சாதகங்களை செய்து தியானத்திலிருந்து அந்த ஞானப் போதப் பொருளை உணருங்கள். ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டனும் பிரமனும் விஷ்ணுவும் மூவரும் அமர்ந்திருந்த நெஞ்சமாகிய கோவிலின் உள்ளே ஒன்றாகிய சிவமாய் அமைந்திருப்பதை அறிந்து அதையே எப்போதும் எண்ணித் தவம் புரிந்து 'சிவயநம' என்று இருந்திடுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -417

சுத்தமென்று சொல்லுவதுஞ் சுருதி முடிவில் வைத்திடீர்
அத்தனித்த மாடியே அமர்ந்திருந்த தெவ்விடம்
பத்தி முற்றி யன்பர்கள் பரத்திலோன்று பாழாது
பித்தரே இதைக் கருதிப் பேசலா தெங்ஙனே .
எல்லா நூல்களும் முடிவாகச் சொல்வது இறைவன் பரிசுத்தமான இடத்தில்தான் இருக்கின்றான் என்பதைத்தான் கூறுகின்றது. இப்படியான இடத்தில் அத்தனாகிய ஈசன் நித்தியமாய் நின்று ஆடிய வண்ணம் அமர்ந்திருந்தது நம் உடலில் எந்த இடம்? அதுவே பரிசுத்தம். அதனை அறிந்து அதிலேயே பக்தி வைத்து பற்றி நின்று முக்தி அடையும் மெய்யன்பர்கள் பாழ் என்ற சூன்யமாக நின்ற ஒன்றே பரம்பொருள் என்பதை அறிந்துகொண்டு அடைவார்கள். பித்தர்களே! இதையே கருதி மெய்ப்பொருளை அடைவதையன்றி வேறு பேசுவதனால் பயன் இல்லை.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -418
எங்ஙன விளக்கதற்குள் ஏற்றவாறு நின்று தான்
எங்ஙனே யிருந்தருளி யீசனேச ரென்பரேல்
அங்ஙனே யிருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கமன்மியான போலத் திரிமலங்களற்றவே.
சித்தர் சிவவாக்கியம் -418
எங்ஙன விளக்கதற்குள் ஏற்றவாறு நின்று தான்
எங்ஙனே யிருந்தருளி யீசனேச ரென்பரேல்
அங்ஙனே யிருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கமன்மியான போலத் திரிமலங்களற்றவே.
நம்மில் சோதியான விளக்கின் உள்ளே வாசியை இருத்தி ஏற்றி நில்லுங்கள். அங்கே ஈசன் எழுந்தருளி அன்பே சிவமாய் அமர்ந்திருக் கின்றான். அப்படி மறைவாக இருந்தருளுகின்ற ஈசன் நமக்குள் ஆதியாக வாலையில் தற்பரம் பொருளாக இருக்கின்றான், அவனை அறிந்து தற்பரத்திலேயே நின்று அவனையே நினைத்து தியானித்தால் தவராஜ சிங்கங்களாக மாறி யானையைப் போன்ற அறிவு சொரூபங்களாகி ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அற்று இறவா நிலைப் பெறுவார்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 419
அற்றவுள் ளகத்தையும் அளக்கிடும் மெழுகிடும்
மெத்த தீப மிட்டதிற்பிற வாத பூசையேத்தியே
நற்றவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே
கற்றிருப்பதே சரிதை கண்டு கொள்ளு மும்முளே.
.

மும்மலங்கள் அற்ற உள் மனதில் அழுதும் அரற்றியும் உருகியும் அவனையே எண்ணி இருந்திடுங்கள். அம்மனத்தில் மெல்லிய தீபமாகிய சோதியில் மீண்டும் பிறவாத உண்மையான பூசையாகிய சூரியகலையில் வலதுபக்க பூவில் வாசியை ஏற்றி சேர்த்திடுங்கள். ஏகநாதனாகிய ஈசனின் பாதத்தை நாடியே மனம் வைத்து நற்றவம் புரிந்திடுங்கள். நீங்கள் கற்கவேண்டிய மெய்க்கல்வி இதுவே என்பதை மெய்ப் பொருளிலேயே நின்று கண்டு கொள்ளுங்கள். எல்லா உண்மையும் உங்களுக்குள்ளேயே உள்ளதை உணர்ந்து தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 420
பார்த்து நின்ற தம்பலம் பரமனாடு மம்பலம்
கூர்த்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததீ சிவாயமே.
பார்த்து நின்ற அதுவே சிற்றம்பலம். பரமனாகிய நடராஜன் ஆடிக் கொண்டிருப்பதே பொன்னம்பலம், கூர்ந்து கவனித்து வேலின் கூர்மையாக நின்ற அதுவே அம்பலம். கோயிலாகி கோனாகிய அம்பலம், சொல்லும் வார்த்தைகளின் பொருளாகிய அம்பலம். வன்னி எனும் தீயாகியதே அம்பலம். சீற்றம் தோன்றும் சிகாரமான அம்பலம், எல்லாம் அறிந்து அறிவாக வெளியாக தெளிவாக இருப்பது சிவாயமே.

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!