சிவவாக்கியம் (406-410)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -406
உண்மையான சக்கரம் உபாயமா யிருந்ததும்
தன்மையான கயமுந் தரித்த ரூபமானதும்
வெண்மையாகி நீறியே விளைந்து நின்றதானதும்
உண்மையான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
தன்மையான கயமுந் தரித்த ரூபமானதும்
வெண்மையாகி நீறியே விளைந்து நின்றதானதும்
உண்மையான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
உண்மையாக உள்ள சக்கரமே அனைத்திற்கும் காரணமாயிருந்ததும் அந்த வெட்டாத சக்கரத்தின் தன்மையினால்தான் இரவு பகல் என்ற காலங்களும் உருவாகி சந்திர சூரியனாக உருத்தரித்து உடம்பு உருவமானது. அச்சக்கரத்தில் உள்ள விந்தே வெண்மையான நீராகி அதுவே வித்தாகி விளைந்து இவ்வுலகமெங்கும் நிறைந்து நிற்கின்றது. உண்மையான ஞானிகளே, இது எவ்விதம் என்பதை உலகிற்கு விரிவாக உபதேசியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -407
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -407
எள்ளகத்தில் எண்ணெய் போல எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்திலே இருக்க ஊசலாடு மூடர்காள்
கொள்ளை நாயின் வாலைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வல்லாளாகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே.
எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் போல எங்கும் எல்லாமுமாகவும் ஆகி நிற்கிறான் எம்பிரானாகிய ஈசன். நம் உள்ளகமாகிய கோயிலில் நம்பிரானாகிய ஈசன் இருப்பதை உணராமல் உலகமெங்கும் தேடி ஊசலாடும் மூடர்களே! திருட்டு நாயின் வாலைப்போல் ஆடிக் கொண்டிருக்கும் மனதை அறிந்து அதன் குணத்தை அடக்கி தியானிக்க வல்லவர்கலானால் எல்லாம் கொடுக்க வல்ல வள்ளலாகிய ஈசன் நமக்குள்ளே சோதியாக நின்றதைக் காணலாகும். அதுவே உண்மையாக விளங்கும் மெய்ப்பொருள்.
உள்ளகத்திலே இருக்க ஊசலாடு மூடர்காள்
கொள்ளை நாயின் வாலைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வல்லாளாகி நின்ற சோதி காணலாகும் மெய்ம்மையே.
எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் போல எங்கும் எல்லாமுமாகவும் ஆகி நிற்கிறான் எம்பிரானாகிய ஈசன். நம் உள்ளகமாகிய கோயிலில் நம்பிரானாகிய ஈசன் இருப்பதை உணராமல் உலகமெங்கும் தேடி ஊசலாடும் மூடர்களே! திருட்டு நாயின் வாலைப்போல் ஆடிக் கொண்டிருக்கும் மனதை அறிந்து அதன் குணத்தை அடக்கி தியானிக்க வல்லவர்கலானால் எல்லாம் கொடுக்க வல்ல வள்ளலாகிய ஈசன் நமக்குள்ளே சோதியாக நின்றதைக் காணலாகும். அதுவே உண்மையாக விளங்கும் மெய்ப்பொருள்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -408
வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
சித்தர் சிவவாக்கியம் -408
வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தானுவுண்டங் கென்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தானுவொன்று மூலநாடி தன்னுள் நாடியும்முளே
கானுமன்றி வேறியாவுங் கனா மயக்க மொக்குமே.
ஞானம் அடைய வேண்டும் என்று விரும்பி அது சொல்லப்படும் நூல்களை எல்லாம் படித்து விட்டு மட்டும் தாணுவென்ற ஈசன் தனக்குள்ளே ஆதாரமாக இருக்கின்றான் என்று சொல்லுகின்றீர்கள். ஆனால் தன்னை அறிந்து தனக்குள் இறையை உணர்ந்து தன்னை மறந்து தியானித்து ஈசனை தரிசித்து இன்புறாமல் இருக்கின்றீர்கள். தானாகி நின்ற ஒன்று நானாக மூல நாடியில் இருப்பதை தனக்குள் தேடி நாடி அது உகாரத்தில் சிகாரமாய் உள்ளதை உணர்ந்து காணுங்கள். அது மெய்ப்பொருளாக இருந்து உனக்குள்ளே இறை காட்சி என்பதையன்றி மற்றவை யாவும் கற்பனையேயன்றி கனாவில் தோன்றும் மயக்கமாகவே இருக்கும்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -409
வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -409
வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உலக்கிலாது நாழியான வாறு போலு மூமைகாள்
உழக்கு நாலு நாழியான வாறு போல மும்முளே
வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளீசன் மன்னுமே.
வெளியில் பல கதைகளையும் தத்துவங்களையும் வழக்காகப் பேசி தனக்குள்ளே இறைவனை அறிய உபதேசிக்கிறீர்கள், ஆனால் உண்மையில் அவன் இருக்கும் இடம் அறியாது மனதிற்குள்ளேயே மறுகித் தவிக்கிறீர்கள், கடல் நீரைச் சுருக்கி உப்பாக்கி அளப்பது போல் உண்மையை உணராமல் ஊமைஎழுத்தை அறியாமல் இறைத்தன்மையை தெரிந்து கொள்ளாமல் மனதிற்குள் ஊமைகளாய் உழல்கின்றீர்கள். கடல் நீரிலிருந்து உப்பாக பரவியிருந்து உப்பான பொருளாக ஆனது போல் கடவுள் தன்மையிலிருந்து உங்கள் உடலுக்குள்ளே உப்பான மெய்ப் பொருளாய் இறைவன் இருப்பதை உணர்ந்து 'உம்' என்று உள்ளுக்குள் வாசி ஏற்றி வழக்கமாக தியானிக்க மனமே வாசியாகி அதற்குள்ளேயே ஈசன் மறைந்து ஆடிக்கொண்டு உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 410
அறத்திறங்களுக்கு நீ அண்டம் எண்திசைக்கும் நீ
சித்தர் சிவவாக்கியம் - 410
அறத்திறங்களுக்கு நீ அண்டம் எண்திசைக்கும் நீ
திறத்திறங்களுக்கு நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கு நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே .
தர்ம காரியங்கள் யாவும் நீ. உலகமும் எண்திசைகளும் நீ. திறமை நிறைந்த செயல்கள் யாவும் நீ. உண்மையை தேடுகின்றவர்களின் சிந்தையில் அறிவாக நிற்பவன் நீ. உறக்கமும் நீயே, உணர்வும் நீயே. என் உட்கலந்து உறையும் சோதி நீ. எக்காலத்திலும் மறக்க முடியாத நின் திருவடிகளை அறியாது மறந்துபோனாலும் என் தலையில் நீ மறக்காமல் குடிகொண்டு விளங்கவேண்டும் ஈசனே.
***************************************************தர்ம காரியங்கள் யாவும் நீ. உலகமும் எண்திசைகளும் நீ. திறமை நிறைந்த செயல்கள் யாவும் நீ. உண்மையை தேடுகின்றவர்களின் சிந்தையில் அறிவாக நிற்பவன் நீ. உறக்கமும் நீயே, உணர்வும் நீயே. என் உட்கலந்து உறையும் சோதி நீ. எக்காலத்திலும் மறக்க முடியாத நின் திருவடிகளை அறியாது மறந்துபோனாலும் என் தலையில் நீ மறக்காமல் குடிகொண்டு விளங்கவேண்டும் ஈசனே.
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
நமது மனது வேலை செய்து கொண்டிருக்கும். சும்மா இருக்கவே இருக்காது! மனம் வேலை செய்தால் வினை நடக்கும் உருவாகும். வினை இருக்க இருக்க மீண்டும் பிறப்பு!
ReplyDeletehttp://sagakalvi.blogspot.com/2012/01/blog-post_26.html
//நமது மனது வேலை செய்து கொண்டிருக்கும். சும்மா இருக்கவே இருக்காது! மனம் வேலை செய்தால் வினை நடக்கும் உருவாகும். வினை இருக்க இருக்க மீண்டும் பிறப்பு! வினை த்திரை மெல்லிய ஜவ்வு அற்று போனால் தன் பிறப்பு இறப்பு நீங்கும். அது எப்படி? இதுதான் சூட்சுமம்!
ReplyDeleteவினை திரை அகலவே நாம் தியானம் செய்யவேண்டும் எப்படி என்றால் மனம் சும்மா இருக்காது. நாம் தான் சும்மா இருக்க வேண்டும்! முடியுமா ? நம்மால் முடியாது? ஆனால் முடியும்? அதுதான் தந்திரம்! செயல்பட்டு இருக்கும் மனதை நம் இறைவன் திருவடியிலே நம் கண்மணி ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியிலே இறுதி (இருத்தி) விடவேண்டும். நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! புறத்திலே வரும் மனதை அகத்திலே இருத்திவிட்டால் போதும்! நாம் சும்மா இருந்தால் போதும்! // சிவனே என்று சும்மா இருத்தலே சுகம்!!!