சிவவாக்கியம் (401-405)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -401 அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சத்தியாவது உன்உடல் தயங்கு சீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்கு மேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தி ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர் வெளி
சத்தி சிவமு மாகி நின்று தன்மையாவது துண்மையே.
பித்தர்காள் இதற்கு மேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தி ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர் வெளி
சத்தி சிவமு மாகி நின்று தன்மையாவது துண்மையே.
சக்தியாக இருப்பது உன் உடம்பு, அதிலே தங்கி இயங்குவது உன் உயிர். அந்த உயிருக்குள் உட்சோதியாக இருப்பது சிவம். இதையறியா பித்தர்களே! இதற்குமேல் ஒன்று இருப்பதாக சொல்லி பிதற்றுவதற்கு ஏதும் இல்லையே. இதுவே பஞ்சபூதங்களாய் ஐந்து புலன்களாக சுற்றி அமைந்து சொல்லிறந்த மௌன வெளியில் ஒரேழுத்தாக விளங்கும் வாலையை தியானியுங்கள். அச்சக்தியே சிவம் ஆகி நின்ற தன்மையை உணருங்கள். அச்சோதியே உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -402
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -402
சுக்கில துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசல் தன்னில் முளைத்தெழுந்த வோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமச்சிவாயமே.
சுக்கில சுரோணித கலப்பால் உருவாக்கி கருவான உயிர் உடம்பில் பண்ணிரண்டு அங்குல அளவு செல்லும் சூரியகலை மூச்சில் சூரியன் முளைத்தெழுந்து உச்சியில் நின்று உலாவுகின்றது. அது மெய்யாகிய உடம்பில் சதுரவாசல் எனும் பத்தாம் வாசலில் உள்ள மெய்ப்பொருளில் ஞானதீபமாக சிவம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. அது ஓம் நம் நமசிவய என்ற மந்திரமாக இருப்பதை அறிந்து உணர்ந்து நினைந்து உச்சரித்து யோகா ஞான சாதகத்தால் தியானியுங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -403
அக்கரம் அனாதியல்ல ஆத்துமம் அனாதியல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியல்ல
தக்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியல்ல
ஒக்க நின்று உடன்கலந்த உண்மை காண் அனாதியே.
சித்தர் சிவவாக்கியம் -403
அக்கரம் அனாதியல்ல ஆத்துமம் அனாதியல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியல்ல
தக்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியல்ல
ஒக்க நின்று உடன்கலந்த உண்மை காண் அனாதியே.
உடம்பு அனாதி இல்லை, ஆன்மா அனாதி இல்லை. இவைகளில் புகுந்திருக்கும் பஞ்சபூதங்களும் ஐம்புலன்களும் அனாதி இல்லை. தகுதி பொருந்திய மெய் நூல்களும் சாஸ்திரங்களும் அனாதி இல்லை. உயிரும் உடம்பும் ஒன்றி நின்று அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றும் இணைந்து அருட் பெருஞ் சோதியாக உடல் கலந்து உலாவும் சிவமே அனாதி என்ற உண்மையை அறிந்து அத்திருவடி ஒன்றையே பற்றி தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -404
மென்மையாகி நின்றதேது விட்டு நின்று தொட்டதேது
உண்மையாக நீயுரைக்க வேணும் எங்கள் உத்தமா
பென்மையாகி நின்ற தொன்று விட்டுநின்று தொட்டதை
உண்மையாயுரைக்க முத்தி உட்கலந்திருந்ததே.

மென்மையாகிய நின்று அது நம் உடம்பில் எது? உடம்பை விட்டு நின்றும் உயிரைத் தொட்டு நின்றும் உள்ளது எது? உள் தமராக உள்ள அது என்ன என்பதை உண்மையாக உரைக்கவேண்டும் உத்தமரே. பெண்மையாகி வாலையாக நின்ற ஒன்றை உடம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் தொட்டும் தொடாமலும் இருந்தவாறு உயிரைத்தொட்டு நின்ற அது என்ன என்பதை அறிந்து உண்மையாய் சொல்லிவிட்டால் அதற்குள்ளேயே முத்தியும் சித்தியும் உட்கலந்து சோதியாய் இருக்கின்றது.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 405
அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே
உடக்கினால் எடுத்த காயம் உண்மையென்று உணர்ந்து நீ
சடக்கிலாறு வேதமுந் தரிக்க ஒதிலாமையால்
விடக்கு நாயு மாய வோதி வேறு வேறு பேசுமோ.
அஞ்செழுத்துக்குள்ளேயே உலகம் யாவும் அடங்கியுள்ளது. அஞ்செழுத் தினால் அண்டங்கள் யாவையும் அடக்கலாம். விந்துவால் விளைந்த இவ்வுடம்பை உண்மையென்று உணர்ந்து அஞ்செழுத்தினால் ஓதி உயர்வடையுங்கள். சடங்குகளாலும் சாஸ்திரங்களாலும் வேதங்கள் முழுவதும் ஓதி வந்தாலும் ஆற்று நீரை நாய் நக்கி குடிப்பது போல்தான். நாயாக அலைந்து உங்கள் உடம்புக்குள்ளே அஞ்செழுத்தாய் அமைந்ததை நன்கு ஆராய்ந்து ஓதி வேறு பேச்சில்லாது மௌனத்தில் ஊன்றி தியானியுங்கள்.
***************************************************சித்தர் சிவவாக்கியம் - 405
அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே
உடக்கினால் எடுத்த காயம் உண்மையென்று உணர்ந்து நீ
சடக்கிலாறு வேதமுந் தரிக்க ஒதிலாமையால்
விடக்கு நாயு மாய வோதி வேறு வேறு பேசுமோ.
அஞ்செழுத்துக்குள்ளேயே உலகம் யாவும் அடங்கியுள்ளது. அஞ்செழுத் தினால் அண்டங்கள் யாவையும் அடக்கலாம். விந்துவால் விளைந்த இவ்வுடம்பை உண்மையென்று உணர்ந்து அஞ்செழுத்தினால் ஓதி உயர்வடையுங்கள். சடங்குகளாலும் சாஸ்திரங்களாலும் வேதங்கள் முழுவதும் ஓதி வந்தாலும் ஆற்று நீரை நாய் நக்கி குடிப்பது போல்தான். நாயாக அலைந்து உங்கள் உடம்புக்குள்ளே அஞ்செழுத்தாய் அமைந்ததை நன்கு ஆராய்ந்து ஓதி வேறு பேச்சில்லாது மௌனத்தில் ஊன்றி தியானியுங்கள்.
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!