சிவவாக்கியம் (396-400)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -396 அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
கோயிலுங் குளங்களும் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலு மனதிலே மயங்குறீர்
ஆயனை யரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே.
மாயிலும் மடியிலு மனதிலே மயங்குறீர்
ஆயனை யரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே.
கோயிலும் குளங்களும் தனக்குள் குறியாக விளங்கும் மெய்குருவை அறிவதற்கே அமையப் பெற்றது. அந்த உண்மையை உணராமல் உலக மாயையிலும் பெண்ணின் மடியிலும் விழுந்து மனம் போனபடி சென்று பின் மனதிலேயே மயங்கி நிற்கிறீர். ஆயனாகிய நாராயணனையும், அரனாகிய நடராஜனையும் தனக்குள்ளேயே இருப்பதை அறிந்து தியானித்து உணர்ந்து கொள்ளுங்கள். அதுவே தாயாகவும் தகப்பனாகவும் தானாகவும் அமர்ந்திருப்பது நான் என்ற ஈசனாகவும் இருப்பது மெய்ப்பொருளே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -397
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -397
கோயிலெங்கும் ஒன்றல்லோ குளங்கள் நீர்கள் ஒன்றல்லோ
தேயு வாயு ஒன்றாவோ சிவனுமங்கே ஒன்றலோ
ஆய சீவன் எங்குமாய் அமர்ந்துவார தொன்றலோ
காய மீதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.
கோயில் எங்கிலும் தெய்வம் உண்டு என்பதை உணர்த்தவே ஒரே விதமாக அமைக்கப்பட்டுள்ளது. குளங்கள் யாவிலும் உள்ள நீரும் ஒன்றே அல்லவா. தேயுவாகிய நெருப்பும், வாயுவாகிய காற்றும் உள்ள இடம் ஒன்றல்லவா, அங்கே சோதியாக உள்ள சிவனும் ஒன்றல்லவா. உலகில் உயிர்த்த உயிர்கள் எங்குமாய் உடம்பில் அமர்ந்து இருப்பதும் ஒன்றாகத்தானே அமைந்துள்ளது. உடம்பில் உள்ள உயிரை அறிந்து சிவத்தை உணர்ந்து யோகா ஞானம் செய்பவர்கள் ஞானியாக விளங்கி யாவருக்கும் காட்சியாவர் கண்டு கொள்ளுங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -398
காத்து கண்கள் மூக்கு வாய் கலந்த வார தொன்றலோ
சோதியிட்டெடுத்ததுஞ் சுகங்களஞ்சு மொன்றலோ
ஓதி வைத்த சாத்திர முதித்து வார தொன்றலோ
நாத வீடறிந்த பேர்கள் நாதராவர் காணுமே.
சித்தர் சிவவாக்கியம் -398
காத்து கண்கள் மூக்கு வாய் கலந்த வார தொன்றலோ
சோதியிட்டெடுத்ததுஞ் சுகங்களஞ்சு மொன்றலோ
ஓதி வைத்த சாத்திர முதித்து வார தொன்றலோ
நாத வீடறிந்த பேர்கள் நாதராவர் காணுமே.
காத்து கண்கள் மூக்கு வாய் ஆகிய யாவும் கலந்து நின்ற இடம் மெய்யில் ஒன்றுதான். சோதியினால் தீயாக உதித்து எண்சான் உடம்பு எடுத்ததும் அந்த உடம்பில் அடையும் இன்பமாகிய அஞ்செழுத்தும் ஒன்றுதான். ஒதிவைத்த சாத்திரங்கள் யாவிலும் உதித்த நாதமும் ஒன்றுதான். அந்த நாதம் போய் ஒடுங்கும் வீடாகிய சோதியை அறிந்து அதையே தியானிக்கும் யோகிகள் ஏக நாதனாகிய ஈசனைச் சேர்ந்து குருநாதர்கள் ஆவார்கள் என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 399
அவ்வுதித்த அட்சரத்தி னுட்கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரஞ் சம்புளத்திருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்த தவ்வுமா யுருத்தரித்த உண்மையே.

'அ' எனும் முதல் எழுத்துக்குள் முன்பு உதித்த ஒரேழுத்து அட்சரத்தின் உட்கலந்து நின்ற அட்சரம் சிகாரம். தொண்டைச் சவ்வில் உதித்த 'ஓம்' எனும் மந்திரமே நம் உள்ளத்தில் கோயிலாக இருக்கின்றது. 'மவ்' எனும் 'ம்' உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்களே! 'உவ்' எனும் உகாரத்தில் உயிராகவும் 'அவ்' எனும் அகாரத்தால் உடம்பாகவும் உருத்தரித்தது உண்மையே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 400
அகார மென்னு மக்கரத்தி லக்கர மொழிந்ததோ
அகார மென்னு மக்கத்தி லவ்வு வந்துதித்ததோ
உகாரமும் மகாரமும் ஒன்றி நன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
'அகாரம்' எனும் தூல தேகத்தில் சூட்சும தேகம் ஒழிந்து உள்ளது. அகாரம் என்னும் உடம்பில் உகாரம் ஆகிய உயிர் உலாவி நிற்கின்றது. உகாரம் என்னும் உணர்வும் மகாரமாகிய மனமும் அறிவில் ஒன்றி நடுவான சோதியாக நன்றாக நிற்கின்றது. இப்படி அகார, உகார, மகாரம் சேர்ந்து ஓங்காரமாகவும், உடல், பொருள், ஆன்மாவாகவும், அறிவு உணர்வு மனமாகவும், எட்டும், இரண்டும் சேர்ந்த ஒன்றாகவும் உள்ள உண்மைகளை மனவிகாரம் அற்ற ஞானிகளே! விரிவாக விளக்கி உரைக்க வேண்டும்.
***************************************************சித்தர் சிவவாக்கியம் - 400
அகார மென்னு மக்கரத்தி லக்கர மொழிந்ததோ
அகார மென்னு மக்கத்தி லவ்வு வந்துதித்ததோ
உகாரமும் மகாரமும் ஒன்றி நன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
'அகாரம்' எனும் தூல தேகத்தில் சூட்சும தேகம் ஒழிந்து உள்ளது. அகாரம் என்னும் உடம்பில் உகாரம் ஆகிய உயிர் உலாவி நிற்கின்றது. உகாரம் என்னும் உணர்வும் மகாரமாகிய மனமும் அறிவில் ஒன்றி நடுவான சோதியாக நன்றாக நிற்கின்றது. இப்படி அகார, உகார, மகாரம் சேர்ந்து ஓங்காரமாகவும், உடல், பொருள், ஆன்மாவாகவும், அறிவு உணர்வு மனமாகவும், எட்டும், இரண்டும் சேர்ந்த ஒன்றாகவும் உள்ள உண்மைகளை மனவிகாரம் அற்ற ஞானிகளே! விரிவாக விளக்கி உரைக்க வேண்டும்.
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!