சிவவாக்கியம் (386-390)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -386
ஈன்றெழுந்த வெம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கு மாயினான்
மூன்று மூன்று வளையமாய் முப்புரங் கடந்தபின்
ஈன்றேழுந்த அவ்வினோசை யெங்குமாகி நின்றதே.
திருவரங்கம் எனும் வெளியிலே எம்பிரானாகிய ஈசன் சிகாரத்தில் எழுந்து நிற்கின்றான். நான்கு திசைகளாக ஆகி நான் என்ற பாம்பாக பத்தாம் வாசலில் ஆடி நிற்கின்றான். ஆறு ஆதாரங்களையும் சூரிய சந்திர அக்னி மண்டலமான முப்புரங்களையும் கடந்த பின் 'ஈம்' என்ற அவ்வின் ஓசை நாதமாகவும் ஒளி சோதியாகவும் எங்கும் அவனே ஆகி நிற்கின்றான்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -387

என்குமேங்கு மொன்றலோ வீரேழு லோக மொன்றலோ
அங்கு மிங்கு மொன்றலோ அனாதியான தொன்றலோ
தங்கு தாபரங்களுந் தரித்த வார தொன்றலோ
உங்களெங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.
எங்கெங்கும் ஈரேழு உலகத்திலும் அங்கும் இங்கும் அனாதியாக என்றும் நித்தியமாக உள்ளது ஒன்றுதான். இப்பூமியில் விளையும் தாவரங்களிலும் உயிர் தரிப்பது ஒன்றுதான். அந்த ஒன்றாகிய பரம்பொருளே உங்களிடமும் எங்களிடமும் உடம்பில் பங்கு கொண்டு சோதியாக உதித்து நின்றது சிவமே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -388
அம்பரத்தி ளாடுஞ் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தாம்பரமும் அகோரமிட்டலர்ந்ததும்
அம்பரக் குழியிலே அங்கமிட்டுருக்கிட
அம்பரத்தி லாதியோட மர்ந்ததே சிவாயமே.
சித்தர் சிவவாக்கியம் -388
அம்பரத்தி ளாடுஞ் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தாம்பரமும் அகோரமிட்டலர்ந்ததும்
அம்பரக் குழியிலே அங்கமிட்டுருக்கிட
அம்பரத்தி லாதியோட மர்ந்ததே சிவாயமே.
உடலுக்குள் நின்றுலாவி ஆடுகின்ற சோதியான தீயே அனைத்திற்கும் மூலம். உடலுக்குள் உயிர் அகாரத்தில் அமைந்திருக்கின்றது. உடம்பில் உள்ள உயிரை அறிந்து பக்தியால் அங்கம் குலைந்து யோக ஞான சாதகத்தால் உருக்கவும் நினைந்து தியானியுங்கள். உடம்பிலேயே ஆதியாக உள்ள மெய்ப்பொருளில் சோதியாக அமர்ந்திருப்பதே சிவம்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 389
வாடிலாத பூ மலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடி நின்றுரு வெடுத்துகாரமாய லர்ந்ததும்
ஆடியாடி யங்கமு மகப்படக் கடந்த பின்
கூடி நின்று லாவுமே குருவிருந்த கோலமே.
.

வாடாத பூவாக மலர்ந்திருப்பது அது. வண்டைப்போல் நாவிலே ரீங்காரமிட்டு ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் மலர்ந்திருந்தது. அதனை உடலுக்குள் மேலும் கீழும் அகார உகாரத்தினால் ஏற்றி இறக்கி வாசியை செலுத்தி சூட்சம தேகம் கடந்தபின் கோனாகிய இடத்தில் சோதியில் கூடி நின்று உலாவுவது மெய்குரு இருந்த கோலமே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 390
விட்டடி விரைத்ததோ வேருருக்கி நின்றதோ
எட்டி நின்ற சிவனுமீரேழு லோகங் கண்டடோ
தட்டுருவமாகி நின்ற சதாசிவத் தொளியதோ
வட்ட வீடறிந்த பேர்கள் வான தேவராவரே.
கடைசி மூச்சை விட்டு உயிர் போனதால் உடல் விறைத்து மரணம் நேர்ந்தது. பின் இருவினகளைப் பற்றி மீண்டும் பூமியில் பிறப்பெடுக்கின்றது. உடம்பை விட்டு நின்ற உயிர் மீண்டும் உடல் பெற்று பதினான்கு உலகங்களையும் கண்டது. இப்படி எத்தனை லோகங்களிலும் எப்படி பிறப்பெடுத்தாலும் உருவமாகி நின்ற அது சதாசிவத்தின் ஒளியினால் தான் இவ்வுடம்பு ஜனன மரண வயப்படுகின்றது. இவ்வுடம்பில் வட்ட வீடாக விளங்கும் பிரமத்தை அறிந்தவர்கள் இப்படி பிறப்பு, இறப்பு வயப்பட்டு உழல்வதை உணர்ந்து மீண்டும் பிறவாமை என்ற ஆன்மாவை ஈடேற்றி தவம் புரிந்து நிலைபெற்று வானில் உள்ள தேவர்களாவார்கள்.

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!