சிவவாக்கியம் (346-350)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -346
நாதமான வாயிலில் நடித்து நின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்த முச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே.
நாதம் வந்து சேர்ந்து பத்தாம் வாசலில் விந்து நிழலாக நடித்து நின்றது. வேதமான நான்கு வாசல் பொருந்திய வீதியில் விரிந்திருக்கின்ற சூரிய சந்திர அக்னி ஆகிய முச்சுடரில் நாத ஒலி வாசியில் கீதமான ஹ்ரீங்கார ஓசையுடன் கிளர்ந்தெழும்பி உடம்பினுள் உகாரத்திலே நின்றது. ஐந்து பூதங்களும் ஒன்றாகப் பொருந்தி நின்ற அகாரத்தில் புகுந்து அறிவாகிய ஆதியை அறிந்து அனைத்தையும் ஒன்றிணைத்து ஒன்றாக்கி தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -347

ஆவி ஆவி ஆவி ஆவி ஐந்து கொம்பின் ஆவியே
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர்
வாவி வாவி வாவி வாவி வண்டல்கள் அறிந்திடார்
பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாதரே.
ஆவி எனும் ஆன்மா ஐந்து புலன்களிலும் கலந்து ஆவியாகவே இருக்கின்றது. அது உலகில் மனிதர்களின் உடம்பில் மேவி சூட்சமமாக நின்றுள்ளது. அ, உ, இ என்பதின் உண்மைகளையும், எல்லாம் போய் எஞ்சியுள்ள வண்டல்களாய் இருந்த உப்பின் தன்மைகளையும், எவரும் அறிந்திடாமல் இடத்தில் இருக்கின்றனர். உப்பை படியில் அளந்து அதனை உண்டு வாழ்ந்து அதன் உண்மையை அறியாது பாவியாகி மாளும் மாந்தர்களே! உப்பு என்ற மெய்ப்பொருளின் உண்மைகளை உணருங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -348
வித்திலே முளைத்த சோதி வில்வளையின் மத்தியில்
உத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே
நத்திலே திரட்சி போன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடத்துழன்ற வாலையான சூட்சமே.
சித்தர் சிவவாக்கியம் -348
வித்திலே முளைத்த சோதி வில்வளையின் மத்தியில்
உத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே
நத்திலே திரட்சி போன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடத்துழன்ற வாலையான சூட்சமே.
வித்தாகிய உப்பிலே முளைத்த சோதி வில்வளைவைப் போன்ற புருவ மத்தியில் அமர்ந்திருக்கும். அந்த உத்தமமான ஒளி அதுவாக உள்ளதை அறிந்து யோக ஞான சாதகத்தால் மௌனத்தில் தீபமாக பிரகாசிக்க செய்யுங்கள். அதையே உற்று நோக்கி அங்கேயே தவமிருங்கள். நத்தையின் திரட்சி போன்று நமக்குள்ளேயே அதுவாக உள்ள நாதனை அறியாது இருக்கின்றீர்கள். அது நம் உடம்பிலேயே வஸ்துவாக கிடந்தது உழலும் சூட்சமாய் உள்ள வாலை என்பதை கண்டுணர்ந்து தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 349
மாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூளையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.
.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 350
மோனமான வீதியில் முடுகி நின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே.
.
வாசி நடக்கும் வீதியை அறிந்து மௌனத்தினாலேயே நாத ஒலியை ஹ்ரீங்கார ஓசையில் மேலேற்ற மேலேற்ற வாசி இலயமாகி எல்லை காண முடியா வேகத்தில் ஆறு ஆதரங்களையும் கடந்து சகஸ்ராதளம் எனும் கபாலத்தில் சுழன்று கொண்டிருக்கும். அது இசையுடன் கூடி உச்சியில் பக்குவத்துடன் இருந்த வாலையின் நடுவில் ஞானமாக விளங்கும் செஞ்சுடராகிய சோதியில் அன்பினால் நடத்தி ஒன்றாக இணையும். அப்படி வாசியும் வாலையும் இணைந்து சோதியாக விளங்கும் மெய்ப் பொருளே சிவமாகிய பரம்பொருளே.
***************************************************

அழகான பதிவு...படித்தேன்.
ReplyDeleteமிக்க வந்தனங்களும், வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !
Deleteமிக்க வந்தனங்களும், வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !
Delete