பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு : தமிழும் இலக்கியங்களும்
இனியவை நாற்பது:http://tawp.in/r/6qf
இன்னா நாற்பது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு) : தமிழும் இலக்கியங்களும்
தமிழகத்தில் சங்கம் மருவிய கால கட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப் பட்டவை. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடையதாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா:
நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
இன்னிலைந் காஞ்சியோடு ,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".
பால்,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு ,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".
இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.
புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.
**************************************************
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.
புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.
**************************************************
இன்னா நாற்பது-பாடல் : 01
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழைக்கு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊன் இன்னா;ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின்.. 01
பொருள்: பந்தம்=சுற்றம், வனப்பு = அழகு
1). சொந்த பந்த சுற்றம் இல்லாத இல்வாழ்கையான் அழகு துன்பமாகும். எவ்வளவுதான் சொத்து சுகங்கள் இருப்பினும் சுற்றம் சூழல் உறவினர்கள் இல்லாத தனிமனித வாழ்க்கை பெரும் துன்பமாகும். 2). நல்வாழ்க்கை வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கும், தந்தையை இழந்த, தந்தை இல்லாத வாழ்வு ஆண்மகவுக்கு, வாழ்க்கையே ஒரு துன்பமாக அமையும். 3). பற்றில்லாத துறவிகள் வீட்டில் இருந்து, உணவு உண்ணுதல் பெரும் துன்பமாம். 4). உச்சரிக்கும் மந்திரங்கள் தமக்கு எவ்வித பயனையும் தராதது மிகத் துன்பமாம்.
************************************
இன்னா நாற்பது - பாடல் 02பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உட்கு...02
பொருள்: இல் - மனையில்; புகல் - நுழைதல்;
1). நுழைதல் அந்தனருடைய வீட்டில் நாயும் கோழியும் நுழைதல் துன்பமாம். 2). கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பமாம். 3). பகுப்பு இல்லாத புடவையை உடுத்துதல் துன்பமாம். 4). அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பமாகும்.
************************************
இன்னா நாற்பது பாடல் -03கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புனை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்த்தல் உயிர்க்கு..03
பொருள்:- நெடுநீர் - கடல்; கடுமொழி - வன்சொல்;
1). கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். 2). தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம். 3). வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். 4). உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.
1). கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். 2). தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம். 3). வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். 4). உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.
************************************
இன்னா நாற்பது பாடல் -04எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கோடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் சேரல் ஏன்னா; இன்னா,
பேரு வலியார்க்கு இன்னா செயல்...04
பொருள்: புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல்.
1). எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். 2). கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம் 3). செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதல் துன்மாம்; 4). திறமை உடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாகும்.
************************************
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!