இனியவை நாற்பது:http://tawp.in/r/6qf
இன்னா நாற்பது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு) : தமிழும் இலக்கியங்களும்
தமிழகத்தில் சங்கம் மருவிய கால கட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப் பட்டவை. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடையதாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா:
நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு ,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".
பால்,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு ,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".
இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.
புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.
***************************************************************************************************
“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”

திருக்குறள்:
திருக்குறள், தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்:
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை. அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
“அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது. “பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன. கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

**********************************************
The following is a list of translations/commentaries of the Tamil literary classic THIRUKURAL - taken out from the Encyclopaedia of Tamil Literature, vol. 1, Inst. of Asian Studies, Thiruvanmayur, Tamilnadu, India.
1.Bengali : (5): 1) Nalini Mohan, Sanyal, thirukural, Calcutta, 1939; 2) Sastri, E.C., thirukural, Calcutta, 1974; 3) Nalini Mohan, Sanyal, thirukural, Calcutta, 1939; 4) Sastri, E.C., thirukural, Calcutta, 1974 & 4) Krishnamoorthy, S. Calcutta, 2001. 2. Burmese: (1): Myo Thant, U, thirukkural, Rangoon. 3. Chinese: (1): Chi Eng Hsi, thirukkural, Hongkong, 1967. 4. Czech: (1): Zvelebil, Kamil V, Thirukural (selections), Prague, 1952–1954. 5. Dutch: (1): Kat, D, Thirukural (selections), Netherlands, 1964
6. English: (25): 1) Aiyar, V.V.S, Kural_: Maxims of thiruvalluvar, 4th ed, Madras, 1961; 2) Balasubramanian, K.M, Thirukural of thiruvalluvar, Madras, 1962; 3) Chakravarthi, A, thirukural in English with commentary, Madras, 1953; 4) Drew, H.W., The kural of thiruvalluvar with commentary of Parimelazhakar, Madras, 1840; 5)Drew, H.W. and Lazarus, J., Thirukural (in verses), Reprint, Madras, 1956; 6) Ellis, F.W., thirukural on virtue (in verse) with commentary, 1812, reprint Madras 1955; 7) Gajapathy Nayagar, A, The rosary of gems of thirukkural, Madras, 1969; 8) Kasturi Srinivasan, Thirukural: an ancient Tamil classic (in couplets), Bombay, 1969; 9) Mathavaiyah, A, Kural in English with commentary in Tamil, Madras, 1925; 10) Michael, S.M., The sacred aphorisms of thiruvalluvar (in verse), Nagarcoil, 1928; 11) Muthuswamy, P, Thirukural in English, Madurai, 1965; 12) Parameswaran Aiyar, T.V., 108 gems from the sacred Kural, Kottayam, 1928; 13) Parameswaran Pillai, V.K., kural, Madras; 14) Pope, G.U, A collection of the English translation of thirukural, Madras, 1959; 15) Popely, H.A., The sacred Kural (selections in verses), Calcutta, 1951; 16) Raja, P, thirukural (in verses), Kumbakonam, 1950; 17) Rajagopalachari, C, kural, the great book of thiruvalluvar, Madras, 1937, 3rd ed, 1973; 18) Ramachandra Dikshithar, V.R., thirukural in English with roman translation, Madras, 1949; 19) Ranganatha Muthaliar, A: thirukural moolamum uraiyum with English translation, Madras, 1933; 20) Thangaswami, T.D, thirukural (selections in verse), Madras, 1954; 21) Thirunavukarasu, Mrs, T., Kural a selection of 366 verses (a gem for each day), Poona, 1916; 22) Vadivel chettiar, K, kural in English with Tamil text and parimelazhakar commentary,(3parts), Madurai, 1972–1980; 23) Vanmikinathan, G, the thirukural - a unique guide to moral, material and spiritual prosperity, trichy, 1969; 24) Yogi Suddanantha Bharathi: Thirukural with English couplets, Madrs, 1968 & 25) Yogi Suddanantha Bharathi, thirukural couplets with clear prose rendering, Madras, 1970
7. Fijian: (1): Berwick, S.L, Na. Thirukkurala, Fiji, 1964. 8. Finnish: (1): Aalto, Pentit, Kural - the ancient Tamil classic, Finland, 1972. 9. French: (5): 1) Ariel, M, kural de thiruvalluvar (traduits du tamoul), Paris, 1848; 2) Barrigue de, Fontaineu, G, le livre de l'amour de thiruvalluva, Paris, 1889; 3) Danielou, Alain, thiruvallouvar kural, Pondicherry, 1942; 4) Jacolliot, Louis, kural de thiruvalluvar, selections, Paris, 1767; 5) Lamairesse, M, thirukural in french, Pondicherry, 1867. 10. German: (6): 1) Albrecht, Fenz and K. Lalithambal: thirukural von thiruvalluvar aus dem Tamil, Madurai,1977; 2) Cammera, A.F, thirukural waith German translation, Leipzig, 1803; 3) Graul, Karl, der kural des thiruvalluvar, London, 1854; 3) Graul, Karl, der tamu lische gnomes dichtar thiruvalluvar, Leipzig, 1865; 4) Rickert, Friederich, thirukural, selections, Berlin, 1847 & 5) William and Norgate, Der kural des thiruvalluvar, 2nd ed, London, 1866
11. Gujarati: (1): Kalani, Kantilal L., thirukural in Gujarati, Bombay, 1971 (Gujarti - Philosopher - Writer in Gujarati Literature - [1930-1998]. Kantilal has won many prices for his books and has written more than 60 books. One of his Co-profound translation is “VISHNU SAHSTRNAM”.. 12. Hindi: (7): 1) Sankar Raju Naidu, S, thirukural in Hindi, Madras, 1958; 2) Seshadri, K, thirukural in Hindi, Lucknow, 1982; 3) Govindaraj Jain, Kural in verse, first two parts, New delhi, 1942; 4) Jain, B.D, thirukural, thirupananthal, 1961; 5) Khenand Rakar, thirukural, parts 1 and 2, Ajmer, 1924; 6) Rajan Pillai, thirukural, Lucknow, 1976 & 7) Venkatakrishnan, M.G, thirukural, Trichy, 1964. 13. Kannada: (4): 1) Gundappa, L, thirukural (3 parts), Madras, 1960, 2) Gundappa, L, thirukural dharma bhaga, Bangalore, 1955, 3) Srinivas, P.S, thirukural with original couplets and translations in Kannada, Madurai, 1982, 4) Srikanthaiah, B.M, Kural (selections in verses), bangalore, 1940. 14. Latin: (2): 1) Graul, Charles, Kural of thiruvalluvar, Tranquebar, 1866, 2) Veeramamunivar, thirukural (Books I and II), London, 1930
15. Malay: (3): 1) Dr.G.Soosai Ph.D,J.P.,P.P.N,P.K.T.,Thirukkural Kitab Murni TamilNadu.,Kuala Lumpur,1978 & 1991, 2) Ismail, Hussein: thirukural sastera kalasik Tamil yang, Kuala Lumpur, 1967, 3) Ramily Bin Thakir thirukural (in verses), Kuala Lumpur, 1964. 16. Malayalam: (7): 1) Azhakathu Kurup, thirukural in verses, Trivandrum, 1875, 2) Balakrishna Nair, G, Kural waith commentary, Part I, Trivandrum, 1963, 3) Chellan Nadar, K, thirukural tharmanaskantam, Parassala, 1962, 4) Damodaran Pillai,P, thirukural manikal, Trivandrum, 1951, 5) Gopalakurup, Vennikulam, thirukural (first 2 parts in verse), Kottayam, 1960, 6) Govinda Pillai, A, thirukural, Trivandrum & 7) Thirukkural Malayalam Vivarthanam Published by DC Books Kottayam Written By S. Ramesan Nair. 17. Oriya: (1): Kishrod, Dash Ch, thirukuralu-in oriya language, Sampalbur, 1985. 18. Punjabi: (1): Ram Murti Sharma, thirukural dhamma granth of the tamils, Chandigarh, 1983. 19. Polish: (1): Umadevi, Wandy Dynowskiev, thiruvalluvar kural, Madras, 1958
20. Rajasthani: (1): Kamala Gurg, thirukural needhi sastra, Jaipur, 1982. 21. Russian: (2): Glazov, J.J and Krishnamurthi, A, thirukural, a book on virtu, politics and love, Moscow, 1963 and Ibragimov, A., Thirukural in couplets with illustrations, Moscow, 1974. 22. Sanskrit: (1): Srirama Desikan, S.N, thirukural in Sanskrit slokas, Madras, 1961, 1968. 23. Saurashtra: (1): Ram, S.S, Saurastra thirukural payiram - pitika pragaranam, Madurai, 1980. 24.Sinhala: (2): De Silva, Charles, Sirigiya (thirukural in sinhalese), Colombo, 1964 & Sissigamy Govokgada, M, thirukural, Colombo, 1961. 25. Swedish: (1): Frykholm Ingya, thirukural, Uddavalla, 1971. 26. Telugu: (2): Jagannatha Sastri, Mudiganthi, thiruvalluva sookthalu, West Godavari, 1952 & Lakshminarayana Sastri, Kural, chittoor, 1906. 27.Urdu: (2): Kohan, Muhamad Yusuf, Kural in Urdu and Arabic, Madras, 1976 & Surawathi Hasarat, Kural in Urdu, New Delhi, 1966; It is the book that most no. of translations made after BIBLE. Be proud of Tamil
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!
அனைத்துக் குறட்பாக்களும் தமிழில் : http://www.tn.gov.in/literature/thiruvalluvar/Thirukkural/Thirukkural-ProjectMadurai.pdf
Text of Tirukkural in the Tamil Script with translation in English.: http://acharya.iitm.ac.in/cgi-bin/show_kural_ad.pl?1
மேலதிக விளக்கங்களுக்கு: http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html
http://www.tamil.net/projectmadurai/
அனைத்துக் குறட்பாக்களும் தமிழில் : http://www.tn.gov.in/literature/thiruvalluvar/Thirukkural/Thirukkural-ProjectMadurai.pdf
மேலதிக விளக்கங்களுக்கு: http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html
http://www.tamil.net/projectmadurai/
மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே..
நீதி நூலாம் திருக்குறளைத் தொடர்ந்து.. அன்புடன் கே எம் தர்மா..
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!