சிந்திக்க தெரிந்த மனிதர்கள் அனைவருமே படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம். வேதங்கள் உபநிஷதங்கள் பகவவத் கீதை சங்கரர் ராமாநுஜர் மத்துவர் இன்னும் உலகத்தில் உள்ள அனைத்து அறிவுச் சுரங்கங்களையும் நம் கண்முன்னால் விரித்து விவரித்து பிரமிக்க செய்கிறார் யோகி ஸ்ரீராமானந்த குரு கடவுளை நம்பாத சித்தாத்தையும் அதிலுள்ள நியாயங்களையும் கூட புறந்தள்ளாமல் எடுத்து விமர்சிக்கும் அழகும் மேலை நாட்டு தத்துவங்களை புரியவைக்கும் பாங்கும் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.
சக்தி விகடனில் 4.9.2009 யார் ஞானி? புத்தக விமர்சனம் படிக்க இங்கு செல்லவும் Click Here
சக்தி விகடனில் 4.9.2009 யார் ஞானி? புத்தக விமர்சனம் படிக்க இங்கு செல்லவும் Click Here
சங்கர் பதிப்பகம்,
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049. தொலைபேசி : +91-9444191256
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049. தொலைபேசி : +91-9444191256
*********************************************************
எனது ஆரம்ப பாடசாலை ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடம். அப்போது அங்கு பணியில் இருந்த ஆசியர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள். இதனால் பாடங்கள் முதல் வழிபாடு வரையிலும் கிறிஸ்துவ தாக்கமே அதிகமாக இருக்கும். அது மட்டுமல்ல. குழந்தைகள் இடத்திலும் பாகுபாடுகள் வெளிப்படையாக காட்டப் படுவதும் உண்டு. கிறிஸ்துவ குழந்தைகளுக்கு தனிச்சலுகைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படும். இந்து குழந்தைகள் நன்றாக படிப்பவர்களாக இருந்தால் கூட அவர்களை பல நேரங்களில் ஒரங்கட்டபடுவார்கள்.
குழந்தைகள் தங்களுக்குள் பழகும்போதும், விளையாடும்போதும் கூட கிறிஸ்துவ குழந்தைகளின் மேலாதிக்கம் அதிகமாக இருக்கும். இத்தகைய ஒரு சூழலில் படிப்பை ஆரம்பித்த நான் எனக்குள் இயற்கையாலும் அப்போது பதிந்து இருந்த அதிகாரத்திற்கு உட்படக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி கிறிஸ்துவ தாக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அதே நேரம் வேறு வழியில்லாமல் அந்த பாடசாலையிலேயே படிக்க வேண்டிய நிலையிலும் பிள்ளை மனதிற்கு தகுந்த எதிர்புணர்ச்சியை பல நேரங்களில் காட்டி இருக்கிறோம். அதனால் சில சங்கடங்களும் எனக்கு அப்போது ஏற்பட்டது உண்டு.

இந்த மாதிரியான நிலையில் ஒரு கிறிஸ்துவ பிரசங்கியார் ஒருநாள் எங்கள் வகுப்பிற்கு வந்து மத போதனை செய்தார். அவர் பேச்சு உலகிலேயே அறிவுடைய மதம் விஞ்ஞான ரீதியிலான மதம். கிறிஸ்துவம் மட்டும் தான் மற்ற மதங்கள் எல்லாம் முட்டாள் தனமானவை அர்ப்பத்தனமானவை என்று எங்களுக்கு பாடம் எடுத்தார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று இந்துமதத்தில் சிலை வழிபாடும். ஆடு கோழி பலி இடுதலும், தீ மிதித்தலும் பெண்களை உயிரோடு எரித்தலும், இன்னும் பல மூட பழக்கவழக்கங்கள் மட்டுமே நிறைந்துள்ளதாக கூறினார். அவர் கூற்று அந்த வயதிலேயே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் என்னுடைய அப்போதைய வயதும், அறிவும் அவருக்கு பதில் சொல்ல கூடிய அளவில் வளர்ச்சியடையவில்லை.
ஆயினும், அவர் கூற்று என் மனதிற்குள் நெறிஞ்சி முள்ளாக உறுத்திக்கொண்டிருந்தது. இந்த நிலையில் திருமுருக கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவை இலங்கை வானொலியில் கேட்டேன். அவர் சைவ சமயத்தின் சிறப்புகள் பற்றியும். அதன் தொன்மைகளை பற்றியும். அதிலுள்ள அறிவுப்பூர்வமான விஷயங்களை பற்றியும் மிக எளிமையான முறையில் விளக்கினார். பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைந்தவனுக்கு இளநீர் கிடைத்தால் எப்படி சந்தோஷபப்படுவானோ அதே போன்று அவர் பேச்சு என் மனதில் பாலை வார்த்தது.

நான் பிறந்த மதம் மூடத்தனமானது அல்ல. அதே நேரம் அதுதான் உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மதம் என்ற பெருமிதம் எனக்குள் துளிர் விட ஆரம்பித்தது. நாளாவட்டத்தில் அந்த பெருமிதம் மதங்களைப் பற்றிய பல விஷயங்களை தேடிப் படிக்கும் ஆர்வத்தை எனக்குள் வளர்த்தது. அப்படி நான் தேடலில் பெற்ற பல கருத்துக்கள் வியப்பையும். மலைப்பையும் எனக்கு தந்தது. ஏசுநாதர் பிறப்பதற்கு 10,000 வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தின் முக்கிய பிரிவான சைவ சமயம் அமெரிக்காவில் இருந்தது என்றும், ஒரு காலத்தில் லிங்க வழிபாடுதான் உலகம் முழுமையும் பரவிக்கிடத்தது. என்று அறியும் போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
அதன் விவரங்களை எனது நூலான யார் ஞானியில் தெளிவாக கூறியிருப்பதை வாசகர்களும் நண்பர்களும் அறிவார்கள்.
இந்து மதத்தைப் பற்றியும், அதன் ஆன்மீக கோட்பாடுகளையும் நாம் அறியக் கொடுத்த பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு அவர்களுக்கு மிக்க நன்றி. மிகுந்த வந்தனமும் வணக்கத்துடன்... கே எம் தர்மா...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!