தமிழ் சைவ சித்தாந்தம், காஷ்மீர சைவம், கர்நாடக வீரசைவம். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களும், ஆகமங்களும் சைவ சித்தாந்தத்தின் ஆதார நூல்களாகும்
திருமுருக கிருபானந்தவாரியார் சைவ சமயத்தின் சிறப்புகள் பற்றியும். அதன் தொன்மைகளை பற்றியும். அதிலுள்ள அறிவுப்பூர்வமான விஷயங்களை பற்றியும் மிக எளிமையான முறையில் விளக்கினார். பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைந்தவனுக்கு இளநீர் கிடைத்தால் எப்படி சந்தோஷபப்படுவானோ அதே போன்று அவர் பேச்சு மனதில் பாலை வார்த்தது. நான் பிறந்த மதம் மூடத்தனமானது அல்ல. அதே நேரம் அதுதான் உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மதம் என்ற பெருமிதம் துளிர் விட ஆரம்பித்தது. நாளாவட்டத்தில் அந்த பெருமிதம் மதங்களைப் பற்றிய பல விஷயங்களை தேடிப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தது.
அப்படி தேடலில் பெற்ற பல கருத்துக்கள் வியப்பையும். மலைப்பையும் தந்தது. ஏசுநாதர் பிறப்பதற்கு 10,000 வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தின் முக்கிய பிரிவான சைவ சமயம் அமெரிக்காவில் இருந்தது என்றும், ஒரு காலத்தில் லிங்க வழிபாடுதான் உலகம்
முழுமையும் பரவிக்கிடத்தது. என்று அறியும் போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.அதன் விவரங்களை எனது குருஜி பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு தனது நூலான யார் ஞானியில் தெளிவாக கூறியிருப்பதை வாசகர்களும் நண்பர்களும் அறிவார்கள்.
அதனால் முதல் சமயமான சைவ சமயம் இந்து மதத்தின் இதயமாக எப்படி
இருக்கிறது என்பதை நாம் அனைவருமே நன்கு உணர்ந்திருக்கிறோம். அப்படிப்பட்ட சைவ சமயத்தின் கருத்துக்களை ஒரளவு சிந்தனை செய்தால் நமது மதத்தின் வரலாற்று பின்னனியை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொண்டால்தான் நம்மை பற்றிய பெருமிதம் நமக்கே வரும். இன்றைய நிலையில் சைவ சித்தாந்தம் தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமே அதிகமாக வழக்கத்தில் உள்ளது. காஷ்மீர சைவம் எனப்படும் சைவ பிரிவு இந்தியாவின் வடபகுதியில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் காஷ்மீர சைவத்திற்கும் தென்கோடியில் வழங்கும் சைவத்திற்கும் பல மாறுபாடுகள் உள்ளன. இதைபோலவே கர்நாடக பகுதியில் வழக்கத்திலிருக்கும் வீர சைவத்திற்கும், தமிழ் சைவத்திற்கும் பல வேற்றுமைகள் உண்டு. எனவே சைவ சித்தாந்தம் என்றால் அது தமிழர்களுக்கே பிரத்யேகமாக உரிய சொத்தாகும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.
தமிழர்களுக்கு சைவ சித்தாந்தம் சொந்தமென்றால் அது தமிழ்நாட்டில் எப்போது தோன்றியது? ஆதிகாலம் தொட்டே இருக்கிறதா? அல்லது இடையில் வந்ததா? என்றொரு கேள்வி எழும்பும், ஒரு காலத்தில் இந்தியா
முழுவதும் அங்கிங்கெனாதிபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருந்த சைவம் இடத்திற்கு இடம் ஏற்பட்ட சில மாறுபாடுகளால் வடக்கிலும், கன்னட தேசத்திலும் தனி பெயரோடு தனிக் கொள்கையோடு இன்று இருந்தாலும் சைவத்தின் மூலக் கொள்கைகளை சிந்தாமல் சிதறாமல் தமிழகம் மட்டுமே வைத்துள்ளது எனலாம்.

தமிழர்களுக்கு சைவ சித்தாந்தம் சொந்தமென்றால் அது தமிழ்நாட்டில் எப்போது தோன்றியது? ஆதிகாலம் தொட்டே இருக்கிறதா? அல்லது இடையில் வந்ததா? என்றொரு கேள்வி எழும்பும், ஒரு காலத்தில் இந்தியா

சைவ சித்தாந்தத்தை தமிழர்களுக்கே உரிய தனிசொத்து என்று சொல்வதில் மிகப் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் தமிழர்களின் மதம்மான சைவம் அதன் மூல நூல்கள் தமிழில் இல்லாமல் வடமொழியில் இருப்பதற்கு என்ன காரணம்? அப்படியென்றால் இது தமிழருக்குறிய மதம் அல்ல என்ற சிக்கலை சிலர் எழுப்புகிறார்கள்.
சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களும், ஆகமங்களும் சைவ சித்தாந்தத்தின் ஆதார நூல்களாகும். அதாவது அந்த நூல்களில் தான் இந்த சித்தாந்தத்தின் முழுமையான கருத்துக்கள் காணகிடக்கின்றது. வேதாகமங்கள் அனைத்தும் வடமொழியிலேயே இயற்றப்பட்டிருக்கிறது. என்பது நாம் நன்கு அறிந்த சங்கதிதான். தமிழரது தனித்தன்மையான தத்துவம் இது என்றால் இது தமிழில் எழுதப்படாமல் வடமொழியில் எழுதப்பட்டதற்கு என்ன காரணம் என்ற இக்கேள்விக்கு பலவகையான பதில்கள் தரப்படுகின்றன. அந்த பதில்கள் கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தோற்றம் தருகிறதே தவிர ஒற்றுமையான கருத்துக்களை தரவில்லை. அப்பதில்களை பார்ப்போம்.
தத்துவக்கருத்துக்கள் முதல் முதலில் சமஸ்கிருத்திலேயே உருவாக்கப்பட்டன. அவர்களில் ஒருசாராருடைய கருத்துக்களை தென்பகுதி மக்களான தமிழர்களும், எற்றுக் கொண்டனர். அதனால் வடமொழியில் இயற்றப்பட்ட ஆகம நூல்கள் சைவ சித்தாந்த பிரமாண நூல்களாயின. என்பது ஒரு பதில். இன்னும் ஒரு விந்தையான பதிலை மறைமலையடிகள் கா.சு.பிள்ளை போன்றோர்கள் தருகிறார்கள். ஆதிகாலத்தில் வேதங்களும் ஆகமங்களும் தமிழில் தான் இருந்தன. ரிக், யஜுர், சாமம் அதர்வனம் போன்ற வேதங்கள் அதே பெயரிலேயே தமிழில் இருந்தது. இவற்றில் ஒன்றாகிய சாம வேதம் ராவணனால் பாடப்பட்டது.
சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களும், ஆகமங்களும் சைவ சித்தாந்தத்தின் ஆதார நூல்களாகும். அதாவது அந்த நூல்களில் தான் இந்த சித்தாந்தத்தின் முழுமையான கருத்துக்கள் காணகிடக்கின்றது. வேதாகமங்கள் அனைத்தும் வடமொழியிலேயே இயற்றப்பட்டிருக்கிறது. என்பது நாம் நன்கு அறிந்த சங்கதிதான். தமிழரது தனித்தன்மையான தத்துவம் இது என்றால் இது தமிழில் எழுதப்படாமல் வடமொழியில் எழுதப்பட்டதற்கு என்ன காரணம் என்ற இக்கேள்விக்கு பலவகையான பதில்கள் தரப்படுகின்றன. அந்த பதில்கள் கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தோற்றம் தருகிறதே தவிர ஒற்றுமையான கருத்துக்களை தரவில்லை. அப்பதில்களை பார்ப்போம்.


சற்று நடுநிலைமை உடையவர்கள் வேறு ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். தமிழர்களின் சொந்தக்கருத்துகளான வேதங்கள் ஆகமங்கள் ஆகியவை பரத வருஷம். என்று அழைக்கப்படும் இந்திய துணைகண்டம் முழுவதுமுள்ள மக்கள் அறிந்து கொள்வதற்காக வடமொழியில் தமிழ்ச்சான்றோர்களால் இயற்றப்பட்டது. என்றும் கூறுகிறார்கள். இவைகளையெல்லாம் பார்க்கும்போது நமக்கு குழப்பம் தான் மிஞ்சும். ஆகவே இக்கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு, வேறொரு முடிவிற்கு நாம் வரலாம்.
சமஸ்கிருதம் என்பது அன்னியமொழி அதற்கும் தமிழருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அது யாரோ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருடைய பாஷை அந்த இனத்தினர் எல்லாவிதத்திலும், தமிழருக்கு முற்றிலும் மாறு பட்டவர்கள் என கருதினால்தானே வடமொழியில் எழுதப்பட்டது ஏன்? தென்மொழியில் எழுத படாதது ஏன் என்றெல்லாம் கருத்துக்கள் உருவாகும். சமஸ்கிருதம் என்பது தனி ஒரு இனத்திற்கு சொந்தமானது அல்ல. அது பாரத தேசம் முழுமைக்கும் பொதுவான சொத்து. தமிழர்களும், பாரத தேசத்து மக்கள் தான் மற்றைய இந்திய மக்களுக்கு சமஸ்கிருதத்தில் எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை தமிழர்களுக்கும் உணடு. எனவே வடமொழி
என்பதும் தமிழர்களது மொழிதான்.எனவே தான் அந்த மொழியில் ஆகம நூல்கள் எழுதப்பட்டிருக்கிறது என்ற சிந்தனை வருமானால் எந்த சிக்கலும் எப்போதுமே வராது. வருங்கால தலைமுறையும் நம்மைப்போல் வேண்டாத மொழிச்சண்டையில் ஈடுபடாமல் அமைதியாக வாழ்வார்கள்.

வேதங்கள். ஆகமங்கள் என்ற வார்த்தைகளை நாம் பலமுறை பயன்படுத்துகிறோம். இதில் வேதம் என்ற வார்த்தைக்கு முழுமையான அறிவு என்ற பொருள் உள்ளது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் ஆகமங்கள் என்ற வார்த்தையின் உண்மைப்பொருள் நிறையபேருக்கு தெரியவில்லை. என்பது உண்மையாகும். எனவே ஆகமம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு மேலே சென்றால் நமக்கு பலவிதத்திலும் நன்மை உண்டு.
நேரிடையாக ஆகமம் என்ற வார்த்தை வடமொழி இலக்கணப்படி ஒன்றிலிருந்து வந்தது என்ற பொருளை சுட்டும். இதன் கருத்தாக்கம் என்னவென்றால் ஒரே பரம்பொருளான சிவபெருமானிடம் இருந்து வந்தவைகள் ஆகமங்கள்
என்பதாகும். இது சரியான முறையான கருத்துத்தான் என்றாலும் கூட தத்துவ நோக்கில் இந்த வார்த்தைக்கு வேறொரு பொருள் தரப்படுகிறது. ஆ என்பது பாசத்தையும், கா என்பது பசுவையும் அதாவது ஜீவன்களையும், மா என்பது பதி அல்லது இறைவனையும் குறிப்பதாகும். என்றும் சொல்லப்படுகிறது. தத்துவ நோக்கில் பார்த்தாலும் பக்தி நோக்கில் பார்த்தாலும். மனிதனை இறைவனோடு சம்மந்தப் படுத்துவதே ஆகமங்கள் என்று துணிந்து கூறலாம்.
பொதுவாக ஆகமங்கள் 28 வகை என்று கூறுகிறார்கள். இதில் 10 நேரிடையாக இறைவன் சொன்னது என்றும், மீதமுள்ள 18 யோகிகள் உருவாக்கியது என்றும் வழி வழியாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆகமமும், ஞான காண்டம் யோக காண்டம் கிரியா காண்டம். சரியா காண்டம் என்று நான்கு பகுதிகளை தனக்குள் கொண்டுள்ளது. இதில் ஞான காண்டத்திலேயே மனிதனின் ஆன்மீக கேள்விகளுக்கு சரியான பதில்கள் பல தரப்பட்டுள்ளன. வேதங்களை போலவே ஆகமங்களும், காலவரையரை செய்ய முடியாத அளவிற்கு வயதில் மூத்தவைகளாகும்.
இனி சைவ சித்தாந்த ஞான பொக்கிஷமான ஆகமங்களின் கடவுளை பற்றி கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை எளிமையான முறையில் சிந்தித்துப் பார்ப்போம்.
பொதுவாக ஆகமங்கள் 28 வகை என்று கூறுகிறார்கள். இதில் 10 நேரிடையாக இறைவன் சொன்னது என்றும், மீதமுள்ள 18 யோகிகள் உருவாக்கியது என்றும் வழி வழியாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆகமமும், ஞான காண்டம் யோக காண்டம் கிரியா காண்டம். சரியா காண்டம் என்று நான்கு பகுதிகளை தனக்குள் கொண்டுள்ளது. இதில் ஞான காண்டத்திலேயே மனிதனின் ஆன்மீக கேள்விகளுக்கு சரியான பதில்கள் பல தரப்பட்டுள்ளன. வேதங்களை போலவே ஆகமங்களும், காலவரையரை செய்ய முடியாத அளவிற்கு வயதில் மூத்தவைகளாகும்.
கடவுள் என்ற தனித் தமிழ் சொல்லிலேயே மிக பெரும் அறிவுப் பூர்வமான உண்மை அடங்கியுள்ளது. கடவுள் என்ற தனிச் சொல் புறநானூறு தொல்காப்பியம் போன்ற மிக பழமையான தமிழ் நூல்களில் கையாளப் பட்டிருக்கிறது. கடவுள் என்ற ஒரே சொல்லுக்கு சிவபெருமானின் திரிசூலம் போல 3 கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன. கடவுதல் என்றால் இயக்குதல் எனவே கடவுள் என்பது உலகத்தை இயக்குபவரை குறிப்பது முதலாவது பொருள். இரண்டாவது தாக கடவுள் என்பது உள்ளத்தை மனதை கடந்தவர் எனப் பொருள் கொள்ளலாம். மூன்றாவதாக கடவுள் உலகத்தை கடந்தவர். அதே நேரம் உலகின் உள்ளும் உள்ளவர். ஒவ்வொரு உயிர் உள்ளும் நிறைந்து நிலைத்து நின்று அவற்றை கடந்தும் இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். இவைகள் சைவ சித்தாந்தம் கடவுளுக்கு சொல்லும் அறிவியல் பூர்வமான உண்மைகளாகும். கடவுள் என்ற வார்த்தையின் ஆராய்ச்சியை இம்மட்டோடு நிறுத்தி கடவுளை பற்றி சைவ சித்தாந்த கருத்துக்கள் இன்னும் என்னென்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
இந்த விஷயத்தில் சைவம் இரண்டு பிரிவுகளான கருத்துக்களை கொண்டுள்ளது. ஒன்று கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிப்பது மற்றொன்று கடவுளுக்குரிய குணங்களையும், இயல்புகளையும் விவரிப்பது. கடவுள் உண்டு என்பதை நிருபிக்கும் முதல் பிரிவுக்குள் மேலும் இரு பிரிவுகள் உண்டு. அவை சுபக்கம். பரவக்கம் என்ற வார்த்தைகளால் சைவ சித்தாந்திகள் குறிப்பிடுகிறார்கள். கடவுள் உண்டு என்பதை காரணங்கள் காட்டி நிருபிப்பது சுபக்கம் ஆகும். கடவுளை மறுப்பவர்களின் வாதங்களை பொருந்தாது என்று புறம் தள்ளுவது பரபக்கம் ஆகும். ஒரு பொருள் இருக்கிறது என்பதை நிருபித்துக்காட்ட மூன்று வழிகள் உண்டு. அவைகளை பிரமாணம், பிரதியட்சம், அனுமானம் ஆப்தவாக்கியம் என்று சொல்லலாம்.


வேதங்கள் என்பது எந்த ஒரு தனி மனிதனாலும் உருவாக்கப்பட்டது அல்ல. உடலை சுருக்கி உயிரை பெருக்கி

மேலும் பயணிப்போம் நண்பர்களே.....அன்புடன் கே எம் தர்மா...
Best Veera Saivam Matrimony in tamilnadu visit: Veera Saivam matrimony
ReplyDeleteBest Veera Saivam Matrimony in tamilnadu visit: வீரசைவம் தி௫மண தகவல் மையம்