Search This Blog

Aug 6, 2011

சுவாமி விவேகானந்தரின் (சிகாகோ சர்வ மத மாநாடு) சொற்பொழிவு(பேப்பர்-16இறுதி பகுதி), செப்டம்பர்,1893.

-





சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-16 இறுதி பகுதி), செப்டம்பர்,19,1893. இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாக.

உலகம் தழுவிய மதம் (UNIVERAL RELIGION)

இந்து தனது திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற தவறி இருக்கலாம். ஆனால் என்றாவது, உலகம் தழுவிய மதம் (UNIVERSAL RELIGION) என்று ஒன்று உருவாக வேண்டுமானால் அது இடத்தாலும், காலத்தாலும் எல்லைப் படுத்த படாததாக இருக்க வேண்டும். அந்த மதம் யாரைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றதோ, அந்த கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும். 

சூரியன் தனது ஒளிக் கிரணங்களை எல்லோர் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ணா பக்கதர்கள், கிறிஸ்துவ பக்கதர்கள், ஞானிகள், பாவிகள் எல்லோரையும் சமமாக என்ன வேண்டும். அது பிறமன மதமாகவோ, பௌத்த மதமாகவோ, கிறிஸ்த்துவ மதமாகவோ, முகம்மதிய மதமாகவோ இருக்காமல் இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியையும் எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும்

விலங்கினங்களைப் போல உள்ள காட்டுமிராண்டி மக்களிலிருந்து இவரும் மனிதரா? என்று சமுதாயம் பய பக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு, அறிவாலும், இதயப் பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை எல்லோருக்கும் இடமளித்து தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்கவேண்டும்.

அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புருத்துதலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லோரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும். 


அத்தகைய மதத்தை அளியுங்கள். எல்லா நாடுகளும் உங்களைப் பின் பற்றும். அசோகரின் சபை பௌத்த சபையாக இருந்தது. அக்பரது சபை இதைவிட சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அது வீட்டுச் சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத்தான் கொடுத்து வைத்திருக்கிறது.

இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹூரா-மஸ்தாவாகவும், பௌத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்துவர்களுக்கு பரமண்டலங்களில் இருக்கும் பரமபிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக!!! 


விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சில வேளைகளில் மங்கலாகவும், சில பொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது, கிழக்கு திசையிலே, சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒலியுடன் மறுபடி உதயமாகி கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!