சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-14), செப்டம்பர், 1893. இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாக
contradiction in Hindusim
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும், பெண்களும் ஒரே இலக்கினை நோக்கி செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான், எல்லா மதங்களின் நோக்கமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள்தான். அப்படியானால், இத்தன்மை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவேறு சூழ்நிலைகளுக்கும், பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஒரே உண்மையில் இருந்துதான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம், பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடு அவசியம். ஆனால் எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சிபுரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது அவர் இந்துக்களுக்கு பகவான். முத்துமாலையிலுள்ள முத்துக்களை கோர்க்கின்ற நூல்போல இருக்கின்றார்.
‘'நான் எல்லா மதங்களிலும் இருக்கின்றேன். மக்களினத்தை உயர்த்தி புனிதப் படுத்தும் அசாதாராண தூய்மையும், அசாதாரண ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றதோ, அங்கெல்லாம் நான் இருக்கின்றேன் என்று அறி’' என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப் பட்டிருக்கின்றதா என்று கண்டுபிடிக்கும்படி, நான் உலகத்திற்கு சவால் விடுகிறேன். நமது சாதிக்கும், கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறைநிலை பெற்றவர்களைக் காண முடிகிறது என்கின்றார் கீதையின் ஆசான் வியாசர்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-15), செப்டம்பர், 1893. இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாக
இன்னொன்று அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து எப்படி, சூன்யவாதம் பேசும் பௌத்தர்களையும், நாத்தீகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான். பௌத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதன் தெய்வமாக வேண்டும் என்னும், எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். ஆனால் இந்துவோ, மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதர்களே!! இந்து சமயக் கருத்தின் சுருக்கம் இதுதான்.
மேலும் பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே..அன்புடன் கே எம் தர்மா...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!