வேதங்களும் உபநிஷதங்களும் பல விஞ்ஞான கருத்துகளை பேசுவதாக சொல்கிறீர்கள். அவைகளில் வானவெளியில் கிரகங்கள் விழுந்து விடாமல் சுற்றுவது எப்படி? என்று விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறதா என்று ஒரு நண்பர் எனது குருஜியிடம் கேட்டார். அவருக்கு அப்போது அவர் சொன்ன பதிலை இங்கு நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பிரசன்ன உபநிசத்தில் பிற்பலாத மகரிஷி இந்த கேள்விக்கு மிகச்சரியான பதிலை தருகிறார். கடவுள் மக்களின் நலத்திற்காக இந்த பிரம்மாண்டமான பூமி சூரியன், சந்திரன் முதலிய கிரகங்களை படைத்து அவைகளை பிராண சக்தி, பிரம்ம சக்தி, பராசக்தி போன்ற சக்திகளால் இயக்கி சுழல விட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது அவரது பதிலாகும்.

இதை மேம்போக்காக பார்க்கும் போது குழப்பமாகவும் நம்புவதற்கு கஷ்டமாகவும் இருக்கும். இந்த வாசகத்தின் கருத்துக்களை மாறுபட்ட கோணத்தில் ஆழ்ந்து சிந்திக்கும் போது சில உண்மைகள் தெரியவரும். உதாரணமாக இரண்டு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும் போது கீழே விழாது. ஓட்டம் நின்று விட்டால் மறு வினாடியே கீழே சாய்ந்து விடும்.
சக்கரம் சுற்றும் போது அதிலிருந்து கிளம்பும் ஒரு விதமான விசை பூமியின் ஆகர்ஷன சக்தியோடு எதிர்மறை உறவை ஏற்படுத்தி கீழே விழாமல் தாங்கி கொள்கிறது. பூமிக்கு சக்தி உண்டு. ஆகர்ஷன சக்தியை தான் பிற்பாலாத மகஷி ஆன்மிக பரிபாஷையில் பராசக்தி என அழைக்கிறார்
கிரகங்களில் உள்ள ஆகர்ஷன சக்தியும் சூரியனிடமுள்ள பிரம்ம சக்தி என்ற உஷ்ண மின்காந்த சக்தியும் இணையும் போது சமநிலை சக்தி என்ற பிராண சக்தி உருண்டு விழுந்து விடாமலும், சரிந்து விழுந்து விடாமலும் தாங்கி கொள்கிறது. பூமியின் சுழற்ச்சி வேகம் நிமிடத்திற்கு நாற்பதாயிரம் கிலோ மீட்டராகும்.
இத்தனை வேகத்தில் சுற்றுவதனால் பூமியின் ஆகர்ஷன சக்தியானது குறையாமலும், கூடாமலும் இருக்கிறது. இந்த நிலை தான் மற்ற கிரகங்களுக்கும்.
இத்தனை வேகத்தில் சுற்றுவதனால் பூமியின் ஆகர்ஷன சக்தியானது குறையாமலும், கூடாமலும் இருக்கிறது. இந்த நிலை தான் மற்ற கிரகங்களுக்கும்.
அறிவியல் கருவி கொண்டு விஞ்ஞானம் அறிந்த இந்த உண்மைகளை எந்த வித புறக்கருவிகளும் இல்லாமல் ஆத்ம சக்தியொன்றையே துணையாக கொண்ட நமது ரிஷிகள் கூறியிருப்பது சிறப்பான வியப்பேயாகும்
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!