Search This Blog

Jul 30, 2011

சித்தர்களின் சிந்தனையும், சித்துக்களும்.

சித்தர்களின் உயிரியல் (Biology) சிந்தனைகள்:
இயற்கையின் செயல்பாடுகள், பரிணாம வளர்ச்சியும் இயல்பும், நீண்டாயுளும் ஆமை அதிசயமும்! சிதம்பர ரகசியம்!!! 

இயற்கையின் செயல்பாடுகள்:
ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது (ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்ச பூதங்களின் சாரமாகும்). பின்பு 10 மாதம் தீட்டு வெளி யாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது. குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும்.
பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது. பிறகு நாளுக்கு நாள், பாலர் பருவம், வாலிபம், முதுமையுமாக பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு நரை, திரை வரும். உடம்பு தளர்ந்து போகும். உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துவிடும். உயிர் தோன்றும்போது உடம்பும் உயிருமான சுக்கில, சுரோணிதமாகிய திரவப்பொருளாக இருந்த இந்த உடம்பு, திடப்பொருளாக மாறி இறந்துபோகிறது. இது மிக நுட்பமான இயற்கையின் செயல்பாடாகும்.
பரிணாம வளர்ச்சியும் அதன் இயல்பும்:
சடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா சீவராசிகளும் அதனதன் அமைப்பின்படி பரிணாம வளர்ச்சிக்குட் பட்டிருக்கும். இதை உண்மைப்பொருள் அறிந்தவர்கள் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. அதன் போக்கில்தான் சென்று சாகவேண்டும். ஆனால் மனிதன் மட்டும் தடுக்கவும் வெல்லவும் முடியும்.

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.


ஊர்வன : 11
மானுடம் : 9
நீர் :10
பறவை :10
நாற்காலோர் :10
தேவர் :14
தாவரம்(4*5) : 20
******************
மொத்தம் = 84
******************

ஆக 84 இலட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும். மேற்கண்ட பாடலில் 7 வகை தோற்றத்தைப்பற்றி உள்ளது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றும். குறிப்பாக கருப்பை முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றும்.தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்றபேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள். மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள்.
நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை. பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை. நாற்காலோர்(நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை.

நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள். தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை. மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்குதான். புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை.
செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை. கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு. மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.

குறிப்பு : மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே. அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, அதை உண்ணுவதும் இயற்கையே, அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே. உணவில் உள்ள சத்,அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்று வதும் இயற்கையே. பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே.
நாம் நமக்கு பசி வந்ததாகவோ, நாம் உண்ணுவதாகவோ நினைக்ககூடாது. பசியும் இயற்கையே, நாம் உண்ணுவதும் இயற்கையே, அறுசுவையும் இயற்கையே, உறங்குவதும் இயற்கையே, உறங்கி விழிப்பதும் இயற்கையே, உடல் இன்பமும் இயற்கையே, கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே. ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்.
தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!
ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
திருவள்ளுவரின்
திருக்குறள்:126/1330 .ஒருமையுள் ஆமைபோல்..<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=176699", இணைப்பினை அழுத்தி இனிய இசையில் விளக்கத்துடன் குறளை கேட்கலாம்.  
ஒரு பிறவியில் ஒருவன் ஆமைபோல் ஐம்பொறி களயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும். ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.
ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம். ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது. இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.

இதையே திருமூலரும் கூறுகிறார்:
ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே..-திருமந்திரம் 2264, 2304
மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் (ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால்) என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்: வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம். 
 இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டு பிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலை முறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.
நீண்ட நாள் வாழ்வது எப்படி?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக் கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்! 
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.
 
சிதம்பர ரகசியம்:
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-


விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள். ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

நீண்ட ஆயுளைப் பெற "ஓம்" பிரணவமந்திரம்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள்:
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18
முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2
முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1
முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0
முறை சுவாசித்தால் முடிவேயில்லை......(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புறபத்துகள் அதிகம். ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.
நன்றி: Nàthàn கண்ணன் Suryà on Friday, June 18, 2010 at 5:50am

10 comments:

  1. [ma] மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பரே! கிருபாநிதி அவர்களே!!![/ma]

    ReplyDelete
  2. தங்களின் பதிவை படித்தேன். மகிழ்தேன்.

    ReplyDelete
  3. /// ஒரு பிறவியில் ஒருவன் ஆமைபோல் ஐம்பொறி களயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும். ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன. ///

    ஐயா .
    நான் கேள்வி கேட்பதற்கு மன்னிக்கவும்.
    மேலே கூறப்பட்டுள்ள ஏழு பிறவிகள் எங்கு நடப்பதை குறிக்கின்றது. அதற்க்கு சித்தர்களின் கருத்து என்ன ..?

    ReplyDelete
  4. நன்றி கூறவேண்டாம் இனிய நண்பரே கிருபா அவர்களே!!! நீங்கள் எனது பதிவுகள் அனைத்தையும் கவனியுங்கள்!! நன்றி என்ற ஒரு பதம் இறைவனிடம் மட்டுமே சொல்லக் கூடிய வார்த்தை!!!! இந்த பதிவு உங்களுக்கு ஏற்புடையதாயின் மிக்க மகிழ்ச்சி!!! தங்களின் பின்னூட்டக் கருத்துக்கு வந்தனமும் வாழ்த்துக்களும்.!!!

    ReplyDelete
  5. தங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் பதிவினைப் பகிர்ந்தமைக்கு இனிய நண்பரே இளங்கோ அவர்களே!!! மேலும் எனது இனிய நண்பர்களுக்கு தேவை உணர்ந்து பதிவுகளைப் பகிர உங்களின் பின்னூட்டக் கருத்து என்னை மேலும் ஊக்குவிக்கின்றது, குறைகளை சுட்டவும் வேண்டுகின்றேன்!!! வாழ்த்துக்கள் இளங்கோ அவர்களே!!!

    ReplyDelete
  6. இனிய நண்பரே இளங்கோ அவர்களே!!! ஆமையின் அடக்கம், அனைத்திற்குள்ளும் அடக்கம். இந்த ஆமையை தனித்தனியாக பிரித்து உடல் கூறு, மற்றும் அதன் வாழ்க்கைத் தன்மை, வாழும் காலம், எதனால் இது நிகழ்கின்றது என்பதனை சிறிது சிந்தித்து தெளிந்தோமானால் அனைத்தும் விளங்கவரும் என்பதே எனது கருத்து நண்பரே !!!

    ReplyDelete
  7. நன்றி என்னும் பதம் (சொல்) போலவே 'மன்னிக்கவும்' என்ற பதமும், நான் செய்தது தவறு - என்று எனது மனசாட்சி கூறினால் ஒழிய நான் உபயோகிப்பது இல்லை. நீங்கள் அதனை இங்கு உபயோகித்தது எனக்கு மன வேதனையைத்தான் தருகின்றது இனிய நண்பர் இளங்கோ அவர்களே!!! உங்களுக்கு நீங்கள்தான் அதிகாரி. நீங்கள் உபயோகிக்கும் சொல்லும் பதமுமே உங்களை நிர்வகிக்கின்றது. கவனம் கொள்ளுங்கள்.
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. இனிய நண்பரே!! ஏழு பிறவி உண்டா? முதல் கேள்வி!!! இருப்பின் எங்கனம்? இரண்டாம் கேள்வி! நீங்கள் இதனை சிந்திக்காமல் என்னிடம் கேள்வி எழுப்ப இயலாது உங்களால் என்பது, எனக்குத் தெரிந்தாலும், பதில் கொடுக்க வேண்டியது எனது கடமை. இதற்குப் பதில் ஒரு தனிப் பதிவாகவே வெளியிட வேண்டி இருக்கின்ற காராணத்தால் தற்சமயம் பொறுத்துக் கொள்ளுங்கள். பதிவு வெளி வரும் சமயம், இது எனது முகநூலின் ரசிகர் பக்கத்தில் நிச்சயம் வெளிவரும். மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும்.!!!

    ReplyDelete
  9. அனைவரும் அறிய வேண்டிய தகவல் ....
    வாழ்த்துக்கள் ! andkm...

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!