இறைவனின் சிருஷ்டியில் , எந்த நேரமும், நாளும் நல்ல நாட்களே. கிரக சுழற்சி காரணமாக , ஒரு சில தினங்களில் அந்த அருள் அலைகள், அபரிமிதமாக வெளிப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான தினம் தான், வரவிருக்கும் ஆடி அமாவாசை. இதில் என்ன அப்படி விசேஷம் என்று , நாம் பார்க்கவிருக்கிறோம், இன்றைய கட்டுரையில்.
எந்த ஒரு பெற்றோருக்கும், தன்னோட குழந்தைகளை நல்லா கவனிக்கணும். தன்னோட சக்திக்கும் மீறி , அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசை இருக்கும். நூற்றுக்கு தொண்ணூத்தொம்பது பேரு அப்படித்தான். ஒன்னு , ரெண்டு தவறுவதும் உண்டு. பெற்ற பிள்ளைகளைவிட தன்னோட சுயநலம் முக்கியம்னு நெனைக்கிற பெற்றோர்களும் உண்டு.
அப்படி , கண்ணும் கருத்துமா - உசிரையே உங்க மேல வைக்கிற பெற்றவர்களை - நீங்க எப்படி கவனிச்சுக்கணும் ? அவங்களுக்கு வயசானா, அவங்களை கடின வேலை எதுவும் செய்ய விடாம, மருத்துவ வசதி, ஆரோக்கியமான உணவு எல்லாம் கொடுத்து கவனிக்கலாம்.
இது உங்களை வளர்த்ததுக்கு , நீங்க செய்ய வேண்டிய நன்றிக்கடன். கடமை. ஐயா, அவங்க விதி முடிஞ்சு போச்சு. மேல போயிட்டாங்க. ... அதுக்கு அப்புறம்? வீட்லே படம் மாட்டி மாலை மட்டும் மாட்டிட்டா போதாது ..! அவங்க ஆத்மா சாந்தி அடைய வைக்கணும். அவங்க பூரிச்சுப்போய் , உங்களை ஆசீர்வாதம் பண்ணனும். இதுவும் உங்க கடன் தான். எப்படின்னு கேட்குறீங்களா? பத்து மாசம் அம்மா வயித்துலே இருந்தது ஒரு கடன். உங்க மூன்று தலைமுறையோட ஜீன்ஸ் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகுத்த , உங்கள் தந்தை , தாத்தா , கொள்ளுத் தாத்தா - இப்படி உங்க முன்னோர்களுக்கும், நீங்க பெரிய கடன் பட்டு இருக்கிறீங்க . இதை எப்படி தீர்க்கப்போறீங்க? நீங்க பண்ற கர்மத்துலே தான், இந்த கடன் அடையும்.
நீங்க , கடனாளியா இருந்தா - உங்களுக்கு , எப்படி மனசுலே நிம்மதி கிடைக்கும்? சரி, கடன் கொடுத்தவன் - நீங்க திருப்பி கொடுக்கிறவரைக்கும் உங்களை படுத்தி எடுத்திட மாட்டாங்க? நீங்க கொடுக்கலைனா, உங்க குழந்தைகளை தானே கேட்பாங்க ! இந்த மாதிரி தான் சார், பித்ரு கடனும். நம் உடம்பே பஞ்ச பூதங்களின் கலவை தான். நாம இயற்கையில் இருந்து எடுத்துக்கிடுறோம். என்ன ஆட்டம் போட்டாலும், ஒருநாள் இயற்கையிலேயே அடங்கி விடுகிறோம். மேல போன, ஆத்மா - நீங்க கொடுக்கிற எள்ளுப் பிண்டத்துக்கு - ஆலாப் பறக்குமாம். நீங்க பிண்டத்தை , பஞ்ச பூதமாகிய நீரில் கரைக்கிறது அவங்களுக்கு - சரியாக மேலுலகம் சென்று அடைகிறது. நீங்க பிண்டம் கொடுக்கும்போதே , அவங்க ஆத்மா நீங்க உலகத்திலே எந்த மூலைல இருந்தாலும், உங்க கிட்டக்கவே நிற்குமாம்.
இது உண்மை, பொய்னு எல்லாம் மடத்தனமா , ஆர்க்யூ பண்ணாம , ஆத்ம பூர்வமா - தர்ப்பணம் பண்ணுங்க. உயிரோட இருக்கும்போது , உங்க பிள்ளைகளோ , இல்லை உங்க அம்மாவோ , எதோ கோபத்திலே சாப்பிடாம படுத்திட்டா , எப்படி மனசு கஷ்டப்படுறீங்களோ , அதே அளவு அக்கறையோட - இந்த காரியத்தையும் செய்து வாருங்கள். இந்த பிண்டம் - அந்த ஆத்மாக்களுக்கு சாந்தி தரும். அவங்களுக்கு வலு கொடுக்கிற மிக முக்கிய சக்தி , இந்த எள் கலந்த மாவு உருண்டை. கருட புராணம் சொல்லும் தகவல்கள் , கடோபநிஷத் சொல்லும் உயிரின் பயணம் குறித்த நிலையை படித்த எந்த ஒரு மனிதனும் , பிற உயிர்களை வெறுக்க மாட்டான். பித்ரு தர்ப்பணம் செய்ய தவற மாட்டான்.
இன்றைக்கும் , பிராமண சமூகத்தில் - பெற்றோரை இழந்தவர்கள் , அமாவாசை தர்ப்பணம் செய்ய தவறுவதே இல்லை. நம்மில் , குறைந்த பட்சம் - இறந்தவர்களின் திதி வரும் அன்னைக்கு பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. இவர்கள் அனைவரும், வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் முன்னோர்களின் ஆசி , உங்களுக்கு முழுவதும் கிடைக்க , ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து , மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அவர்களை விட, உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை. நீங்கள் உயிருள்ள வரை, உங்கள் தாய், தந்தையரின் இறந்த திதி வரும் நாளில் , மறக்காமல் , ஈம சடங்குகளை குறைவற செய்யுங்கள். இதைவிட உங்களுக்கு பெரிய காரியம், முக்கியமான காரியம் எதுவும் இல்லை.
வாய்ப்பு இருக்கும் அன்பர்கள், நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் - தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிக்கலாம். காலையில் தினமும் , நீங்கள் உணவு உட்கொள்ளும்முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால்தான், உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும். உங்கள் உணவை காகம் சாப்பிடும்போது, உங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும்.உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும் , தன்னைப்போல விலகும். உங்கள் பின்னால், உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும், புகழின் உச்சியிலும் நிற்பீர்கள்.
திடீர்னு , இந்த விஷயத்தை இன்னைக்கு ஏன் திரும்ப எடுக்கிறேன்னா.. நாளைக்கு ஆடி அமாவாசை. சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம் , தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது. இவை ஆரம்பிக்கும் மாதங்களில் , விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது . அந்த வகையில் - ஆடி மாதத்திற்கும், தை மாதத்திற்கும் - வரும் அமாவாசையில் - நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜை , தர்ப்பணம் செய்தாலும், அவர்களை உடனே சென்றடையும். இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள் - இந்த ஆடி அமாவசை யன்றோ , அல்லது தை அமாவாசை யன்றோ - பித்ரு பூஜை செய்து , பிண்டங்கள் கொடுக்கலாம்.
உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில், அதன்பின் உங்கள் குலதெய்வம் , அதற்குப் பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம்..! உங்களுக்கு ஒரு கஷ்டம் நா , உடனே ஓடி வர்றது , உங்க அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி தான். இவங்களுக்கு பலம் கொடுக்கிறது , உங்கள் பித்ரு பூஜையும் , தர்ப்பணமும் தான். நாளை - அமாவாசை . அதிலும் ஆடி அமாவாசை. சனிக்கிழமை வருகிறது. அதிலும் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் . கர்ம காரகனான சனி, உங்கள் கர்மங்களை முற்றிலும் அழிக்க , நாளை விரதம் இருந்து , உங்கள் முன்னோர்களின் ஆசி முழுவதும் கிடைக்க வேண்டுங்கள். இறை நாமம் ஜெபிக்கலாம். பல கோடி மடங்கு பலன்கள் கிடைக்கும். இறையருள் உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். நாளை நள்ளிரவு , பனிரெண்டு மணிக்கு மேல் - நிறை அமாவாசை. சதுரகிரியில் , அதே நேரத்தில் , சிறப்பு பூஜைகள் நடைபெறும். லட்சக் கணக்கில் - பக்தர்கள் . நாளை நள்ளிரவு சதுரகிரியில் தங்கி , அந்த பாக்கியம் அடைவர்.
உங்கள் அருகில் இருக்கும் ஆலயம் சென்று , நீங்களும் நாளைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன் !

*
ReplyDeleteKeyem Dharmalingam
ஆடி அமாவாசை. சனிக்கிழமை வருகிறது. அதிலும் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் . கர்ம காரகனான சனி, உங்கள் கர்மங்களை முற்றிலும் அழிக்க , நாளை விரதம் இருந்து , உங்கள் முன்னோர்களின் ஆசி முழுவதும் கிடைக்க வேண்டுங்கள். இறை நாமம் ஜெபிக்கலாம். பல கோடி மடங்கு பலன்கள் கிடைக்கும். இறையருள் உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். நாளை நள்ளிரவு , பனிரெண்டு மணிக்கு மேல் - நிறை அமாவாசை