Search This Blog

Jul 30, 2011

கணினியின் நிலையை அறிய

கணினியின் நிலையை அறிய:
கணினியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணினியினுடைய வேகமும் அமையும். ஒரு சிலர் தனது கணினி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள், ஒரு சிலரோ எனது கணினி என்னைவிட வேகமாக உள்ளது. என்று கூறுவார்கள் இதற்கு காரணம் கணினியில் இருக்கும் வன்பொருள்கள் ஆகும். மேலும் அதற்கேற்றார் போல் மென்பொருளும் சரியாக அமைய வேண்டும். 

சரி கணினி ஆமையோ முயலோ எதுவாக இருந்தாலும் இதை எப்படி நாம் சரியாக கணக்கிடுவது என்றால் இதற்கும் மென்பொருள்கள் உண்டு. அதில் ஒன்றுதான் NovaBench. மென்பொருளை தரவிறக்க சுட்டி http://novabench.com/download.php
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Start Benchmark Tests என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் உங்கள் கணினினுடைய RAM மற்றும் வன்பொருள்கள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் டிஸ்பிளே எந்த அளவு உள்ளது என துல்லியமாக பார்க்க முடியும். 
அதற்கான காட்சி படத்தையும் காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக நம் கணினியில் எதாவது குறையிருப்பின் அதையும் அறிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!