Search This Blog

Jul 29, 2011

சுவாமி விவேகானந்தரின் (சிகாகோ சர்வ மத மாநாடு) சொற்பொழிவு(பேப்பர்-11), செப்டம்பர்,1893.



சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி. (பேப்பர்-11), செப்டம்பர், 1893. இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத்தொகுப்பாக.

வேதங்கள் ஆன்மாவின் புனித தன்மையை புகட்டுகின்றன. ஆயினும் சடமாகிய இந்த உடலுக்குள் கட்டுப் பட்டதாக இருக்கின்றது, இந்த கட்டு அவிழும்போழுது அது நிறைநிலைத் தன்மையை அடைகிறது. எனவே முக்தி என்ற சொல்லை ஒரு விடுதலையின் அம்சமாகவே கூறுகின்றன. விடுதலை- மரணத்திலிருந்து, துன்பத்திலிருந்து, முழுமை பெறாத நிலையிலிருந்து. அந்த விடுதலை மரணத்திலிருந்தும், துன்பத்திலிருந்து, முழுமை பெறாத நிலையிலிருந்து மாறவேண்டு மானால் அந்த இறைவனின் கருணையால் மட்டுமே முடியும், கடவுளின் கருணை யால் இந்த கட்டு அவிழும் அந்த கருணை தூயவர்களுக்குத்தான் கிட்டும்.

 

எனவே அவனது கருணையைப் பெறுவதற்கு தூய்மை அவசியம் என்று ஆகிறது. அந்த கருணை எப்படி செயல் படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப் படுத்துகிறான். ஆம் தூயவர்களும், மாசற்றவர்களும் இந்த பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக் கோணல்கள் நேராகின்றன. சந்தேகங்கள் விலகுகின்றன. காரண,  காரியங்கள் என்ற பயங்கர விதி அவர்களை அடக்குவதில்லை. இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும். 

 

இந்து வார்த்தைகளிலும், கொள்கைகளிலும் வாழ விரும்ப வில்லை. புலன் வயப்பட்ட சாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகின்றான். சடப் பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேராக செல்ல விரும்புகின்றான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால், அவரை நேரில் காண விழைகின்றான். அவன் அவரைக் காண வேண்டும். அதுதான், அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். 

 

ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று, "நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன்' என்று கூறுவதுதான். நிறை நிலைக்கு அதுதான் நியதி. இந்து மதம் என்பது எதோ ஒரு கோட்பாட்டையோ, கொள்கையையோ  நம்புவதற்கான போராட்டங்களிலும், முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெற்று நம்பிக்கை கொண்டதல்ல இந்து மதம். உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆவதே இந்து மதம் ஆகும். 

 

இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும்,. தெய்வத் தன்மை அடைவதும், தெய்வத்தை அணுகுவதும், அவனைக் காண்பதுமே அவர்கள் நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறைநிலையை அடைவது தான் இந்துக்களின் மதம். நிறைநிலை பெற்ற ஒருவன் என்னஆகின்றான்? 

 

அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடையவேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக் கின்றான். இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப்போகின்றனர். இந்தியா விலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இதுதான் பொதுவாக உள்ள மதம். இறைநிலை என்பது எல்லையற்றது. இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. 

 

எனவே ஆன்மா நிறை நிலையையும், எல்லை யற்ற நிலையையும் அடையும் பொழுது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீரும். இறைவனை நிறை நிலையாக ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக இருக்கின்ற ஒருவர் மட்டுமேயாக, பணியரிவடிவமாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித்தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவதுதான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கின்றோம். 

 

காயம் படாதவர்கள்தான் தழும்பைக் கண்டு நகைப்பார்கள். நான் கூறுகின்றேன், அது அம்மாதிரி அல்ல என்று. இந்த சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கைப் பெருகப் பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக பிரபஞ்ச உணர்வாக மாறும்போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது. 

 

எல்லையற்ற பிரபஞ்சம் தழுவிய அந்த தனித் தன்மையைப் பெற வேண்டு மானால், துன்பம் நிறைந்த இந்த உடல் சிறை என்னும் தனித் தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும்போதுதான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போதுதான், துன்பம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும்போதுதான், பிழைகள் அகல முடியும். இது தான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. 

 

உடலைச் சார்ந்த தனித் தன்மை ஒரு மாயை, இடைவெளியற்று பறந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள்தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா, அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்கு வர வேண்டி யிருக்கிறது. 

 

எனது வலைப்பூவில் "ஓம் நமசிவாய" மந்திர உச்சாடனம் உண்டு. தேவை இல்லை எனில் ஒலிப்பானை அனைத்துக் கொள்ளலாம். நன்றி, அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!