'தமிழ் இனி மெல்லச் சாகாது' - மெரினாவில் மெய் சிலிர்க்க வைத்த மெழுத்திரிகள்!
இலங்கையின் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மே 17 இயக்கம், சென்னை மெரீனா கடற்கரையில் ஒழுங்கு செய்திருந்த மெழுவர்த்தி ஏற்றலுடன் கூடிய நினைவேந்தல் நிகழ்வில், வரலாறு காணாத வகையில் சுமார் 50,000 ற்கு மேற்பட்ட தமிழக மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு பற்றிய மேலதிக தகவல்கள்
எப்போதும் காற்று வாங்குவதற்காக கடற்கரைக்கு வரும் தமிழர்கள் ஜூன் 26 மாலை ‘சுதந்திரம்’ வாங்குவதற்காக வந்திருந்தனர். கட்சி, மதம், சாதி கடந்து தனது இனத்துக்காக தமிழன் கிளர்வானா எழுவானா என்ற கேள்விக்கு எழுவான் போராடுவான் என்று பதில் தந்திருக்கிறது ஜூன் 26&ம் தேதி மாலை. உலகின் பல நாடுகளில் நடக்கும் அவலங்களை ஐ.நா. தட்டிக் கேட்கிறதோ இல்லையோ… அதற்காக ஒரு தினத்தை நிர்மாணிப்பதில் ஐ.நா.வுக்கு நிகர் ஐ.நா.தான். அந்த வகையில் ஜூன் 26 என்ற தேதியை உலக சித்ரவதைகள் தினமாக அறிவித்திருக்கிறது ஐ.நா.
இந்த வகையில் உலகத்தில் மாபெரும் சித்ரவதைகளுக்கு ஆளான ஈழத் தமிழர்களுக்காக ஜூன் 26 அன்று சென்னை மெரினா கடற்கரையில் அணி திரளுமாறு தமிழர்களுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார் மே 17 இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன். மதம், சாதி, கட்சி கடந்து மெரினாவில் அணி திரண்டு ஈழத்தமிழர்களுக் காக கையில் மெழுகுவிளக்கு ஏந்துமாறு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்ததோடு நிற்கவில்லை. இந்த அழைப்பை அனைத்து அரசியல் கட்சிகள் மூலமும் தமிழர்களுக்கு விடுக்க வைத்தார்.
இந்நிலையில்தான் தமிழகம் காணாத அந்த பேரெழுச்சி சுமார் ஐம்பதாயிரம் தமிழர்களின் வருகையால் வெளிப்பட்டது. கைகளில் மெழுகுவர்த்திகளோடு வெளிச்சக் கூட்டமாய் திரண்ட தமிழர்களின் வருகைகடற்கரையில் உணர்ச்சி அலைகளை உண்டாக்கியது.மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்துவதற்காக பழ,நெடுமாறன், சீமான், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, பா.ம.க. சார்பில் வேல்முருகன் என தமிழர்கள் திரண்டனர்.
‘‘இந்த எழுச்சி தொடரவேண்டும். மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ள இந்த எழுச்சி தொடர்ந்தால் நமக்கான இலக்கை நாம் அடையமுடியும்’’ என்று கடற்கரை காற்றில் நம்பிக்கை விதைகளை வார்த்தைகளாக விதைத்தார் பழ.நெடுமாறன். ‘‘எல்லாரும் ஈழத் தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்த வந்திருக்கும்போது நான் வராமல் இருந்தால் நாளைய உலகம் என்னை சபிக்காதா?’’ என்று கேட்டுக் கொண்டே மழையும் வந்தது மெரினாவுக்கு. சுமார் பதினைந்து நிமிடங்கள் தன் அஞ்சலியை அழுது தீர்த்து விட்டு சென்றது மழை. மழை அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் போது தான் மே 17 இயக்கத்தின் அமைப்பாளர் திரு.முருகன், கையில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
‘‘தமிழர்களே… மத, சாதி, கட்சி பேதம் இன்றி இங்கே கூடியிருக்கிறோம். இதுதான் இன்றைய தமிழனத்தின் தேவை. நாம் ஒன்றுபட்டால் நடக்காதது இல்லை. போர்க் குற்றம் போர்க் குற்றம் என்ற ஒரு மாய் மால வார்த்தையை இப்போது புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள் சிலர். போர்க் குற்றம் என்று சொல்பவர்கள் போர் எதற்கானது என்பதை சொன்னார்களா? போர் குற்றம் என்பதை விட ஈழத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை உரத்து சொல்ல வேண்டும். அதுதான் இப்போதைய தேவை. எந்த கட்சியின் தயவையும் நம்பியிருக்காமல் இதோ இதே போன்று நாம் கூட வேண்டும். தமிழனுக்கு எப்போது அநீதி இழைக்கப் பட்டது என்று நாம் உணர்ந்தாலும் அதற்கு மறுநாள் காலை இந்த கண்ணகி சிலையின் பின்புறம் தமிழர்கள் அனைவரும் கூடுவோம். யார் அழைப்புக்கும் காத்திருக் காமல் யார் தலைமைக்கும் காத்திருக்காமல் நாம் கூடுவோம். என்ன கூடுவீர்களா?’’ என்று திருமுருகன் கேட்க… ‘கூடுவோம் கூடுவோம்’ என்று பேரலையாக எழுந்தது தமிழ்க் கூட்டத்தின் குரல். ‘‘போலீஸ் அனுமதியைப் பற்றி கவலைப் படாதீர்கள். தமிழ்நாட்டில் தமிழனுக்காக அல்லாமல் வேறு யாருக்காக கூடப் போகிறோம்?’’ என்று திருமுருகன் பேசி முடித்ததும்.. மே 17 குழுவினரின் நாடகம் ஆரம்பித்தது.
தமிழர்களின் தலையறுத்து ரத்தம் குடிக்க அலைபவர்களைப் பற்றிய நாடகம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே போலீஸார் வந்தனர். ‘நீங்கள் பெற்ற அனுமதி நேரம் முடிந்துவிட்டது. நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளுங்கள்’ என்றனர். சில கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு கொஞ்ச நேரம் தொடர்ந்த நாடகம் போலீஸாரால் மீண்டும் நிறுத்தப்பட்டது. ‘‘தமிழனுக்கு அஞ்சலி செலுத்தக் கூட தமிழ்நாட்டுப் போலீஸின் அனுமதி வேண்டுமா? நாடகத்தை தொடர்ந்து நடத்துங்கள்’’ என்று கூடியிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பினர். ஆனால் நாடகம் பாதியில் முடிந்தது. ஆனால்… ஒன்று அந்த நாடகம் பல பேரது “நாடகங்களை” கடற்கரையில் வைத்து வெளிப்படுத்தியது.
கடந்த பத்துவருடங்களுக்கு மேலான காலங்களில் மெரினாவில் ஒலி பெருக்கியோடு சமூக பிரச்னைகளை யாரும் பேசியதில்லை. அந்த இடைவெளியை தகர்த்து சுமார் ஐம்பதாயிரம் தமிழர்களைக் கூட்டிய மே 17 இயக்கத்தின் முன்னெடுப்பு தொடர வேண்டும். அதற்கு தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவும் தொடரும்

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!