முந்தைய
பதிவில் நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்பு (array) நாள் ஒன்றுக்கு சுமார் 5000 வாட்ஸ் அல்லது 5 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என
பார்த்தோம்.
பூமியின்
சுழற்சி,
சூரியனின் சுழற்சி
இவற்றின் அடிப்படையில் பூமியில் ஒவ்வொரு பகுதி அல்லது ஊரிலும் சூரியனுடைய ஒளி
கதிர்கள், வெவ்வேறு
கோணத்தில் , வெவ்வேறு
கால (duration)
அளவில்
இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாதமும் விழும் சூரிய ஒளியின் மூலம்
தினசரி உற்பத்தி செய்யக் கூடிய மின்சாரத்தை கணக்கிட முடியும். இது நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறு படும். தமிழ் நாட்டில் முக்கியமான
ஊர்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக கிடைக்ககூடிய மின்சாரத்தின் அளவை காட்டும்
அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
இந்த
பட்டியலின் படி திருச்சியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5.13KWh வீதம் ஒரு வருடத்தில் 1872.45 KWh / யூனிட் மின்சாரத்தை ஒரு சதுரமீட்டர் பரப்பில் பெற முடியும்.
1 KWh
என்பது 1000 Wh அல்லது 1 யூனிட் ஆகும்.
ஒரு
நிறுவனம் தயாரிக்கும் 100W சோலார் பேனலின் விபர குறிப்பை (Specification) கீழே கொடுத்துள்ளேன். அதில் பேனலின் அளவு (size) 56.7 இஞ்ச் நீளம், 25.1 இஞ்ச் அகலம் என கூறப்பட்டுள்ளது. இந்த அளவு கிட்டத்தட்ட
எல்லா கம்பெனிகளின் பேனல்களின் அளவும் ஒரே மாதிரியாகத்தான். இருக்கும். அதிக
அளவில் வித்தியாசமிருக்காது. இப்பொழுது நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்புக்கு
எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை பார்க்கலாம்.
(56.7"x 2) =
113.4" = 9' 9" =10 அடி 25.1" x 5) = 125.5" = 10' 6" = 10 1/2 அடி
அதாவது 10 1/2 அடி அகலமும் 10 அடி நீளமும் தேவை. இதை சரியான திசையில் சரியான கோணத்தில்
வருடம் முழுவதும் அதிக பட்ச சூரிய ஒளி படும் வகையில் பொருத்த வேண்டும். கீழே 1 MW சோலார் பேனல் வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டுள்ளதை
காட்டும் புகைப்படம்.
இனி சோலார்
பேனலின் விபர குறிப்பை பார்க்கலாம்.
Spec:
* 150x150mm multi-crystalline solar cells
* Typical Power: 100W
* Minimum Power: 95W
* Voltage at Typical Power: 17V
* Current at Typical Power: 5.9A
* Open Circuit Voltage: 22V
* Short Circuit Current: 6.69A
* Dimension: 56.7" L x 25.1"W x 1.38" D
* Weight: 24lbs
* 150x150mm multi-crystalline solar cells
* Typical Power: 100W
* Minimum Power: 95W
* Voltage at Typical Power: 17V
* Current at Typical Power: 5.9A
* Open Circuit Voltage: 22V
* Short Circuit Current: 6.69A
* Dimension: 56.7" L x 25.1"W x 1.38" D
* Weight: 24lbs
1. 150x150mm multi-crystalline solar cells என்பது 150 mm X 150 mm அளவுள்ள கிரிஸ்டலைன் செல்களால் உருவாக்கப்பட்ட சோலார் பேனல்
என்பதை குறிக்கிறது.
2. Typical Power: 100W அதாவது சூரிய ஒளி அதிகமாக அதன் மீது விழும் பொழுது பேனல் தரும் மின் சக்தி 100 W.ஆகும்.
3.
Minimum Power: 95W குறைந்த பட்ச சக்தி ௯௫
4.
Voltage at Typical Power: 17V அதிக பட்ச மின் அழுத்தம் 17V
5.
Current at Typical Power: 5.9A அதிக பட்ச மின் அழுத்தத்தில் தரும் கரண்ட் 5.9 ஆம்பியராகும்.
6. Open
Circuit Voltage:22V பாட்டரியுடன் (லோடு) இணைக்காமலிருக்கும் பொழுது உள்ள மின் அழுத்தம் 22V.
7.
Short Circuit Current: 6.69A ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு இந்த விபரம் தேவை இல்லை.
8.
Dimension: 56.7"L x 25.1"W x 1.38"D 56.7 அங்குல நீளம், 25.1 அகலம், 1.38 அங்குல பருமன் உடையது.
9.
Weight: 24 lbs இதன்
எடை 24
பவுண்ட்
(10.9
Kg)
இதர விபரங்களைஅடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்........
==============================================
சூரிய ஒளி சக்தியை அறியக்கொடுத்த திரு.திரவிய நடராசன்
அவர்களுக்கு மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு. அடுத்து வரும் பதிவுகளில் மேலும் விரிவாக காணலாம். அன்புடன் கே எம் தர்மா. (Posted by திரவிய நடராஜன்) http://lawforus.blogspot.com/2012/06/4.html
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!