மருத்துவக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும் விளங்குகின்றது வர்மக்கலை என்று கேள்விப் பட்டிருக்கின்றோம். நவீன மருத்துவ உலகில் இதனைப் பற்றியும் ஆரய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் காணக்கிடைக்கின்றன. இதற்கான பயிற்சியும், சில வர்மக்கலை நிபுணர்களால் தற்சமயம் வகுப்புக்கள் நடத்தப் பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதனைப் பற்றி பலகுறிப்புக்கள் சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது. இக்கலையை அகத்திய மாமுனி என்னும் சித்தர் உருவாக்கியதாக செய்திகளும், குறிப்புக்களும் கூறுகின்றன. இந்த வர்மக்கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய "ஓடிவுமுறிவுசாரி" என்ற நூலே மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
நமது உடல் நரம்பு மண்டலங்களால் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது என்பதனை நாமறிவோம். இந்த மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் 108 உயிர்நிலைகள் உள்ளதென அகத்தியரின் குறிப்புக்களில் அறியப்பட்டுள்ளது.
அவைகளின் தொகுப்பு:-
தலைப்பகுதி................................37 வர்ம நிலைகள்.
நெஞ்சுப்பகுதி.............................13 வர்ம நிலைகள்.
உடலின் முன்பகுதியில்........15 வர்ம நிலைகள்.
முதுகுப் பகுதியில்...................10 வர்ம நிலைகள்.
கைகளின் முன்பகுதியில்....09 வர்ம நிலைகள்.
கைகளின் பின்பகுதியில்.....08 வர்ம நிலைகள்.
கால்களின் முன்பகுதியில்.19 வர்ம நிலைகள்.
கால்களின் பின்பகுதியில்...13 வர்ம நிலைகள்.
கீழ்முதுகுப் பகுதியில்............08 வர்ம நிலைகள்.
இந்த உயிர் நிலைகளை முறையாகக் கையாளுவதன் மூலம் உடலை வலிமையாக்கவும், வலுவிழக்கச் செய்யவும் முடியும். இவ்வாறு மிக நுட்பமாக கையாளும் இந்த கலையே வர்மக்கலை எனப்படுகிறது. இக்கலையை நான்கு பிரிவுகளாக படுவர்மம், தொடுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம் என பகுத்துள்ளனர்.
படுவர்மம்:- படுவர்மம் என்ற பிரிவு மிகவும் அபாயகரமானது என்றும், இந்த படுவர்மத்தில் ஏற்படும் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம். உடனடியாக மயக்கமும், வாய் பிளந்து, நாக்கு வெளியே தள்ளி நுரைத் தள்ளும். அடிபட்ட இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும். மிகுந்த பயிற்சியுள்ள ஒருவரால் மட்டுமே இதனை செய்திட முடியும்.
தொடுவர்மம்:- படு வர்மம் போல பலமாகத் தாக்கப் படுவதன் மூலமே ஏற்படுகின்றது. இருப்பினும் படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது. எளிதில் குணப்படுத்த இயலும்.
தட்டுவர்மம்:- ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கப்படுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாகத் தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.
நோக்கு வர்மம்:- வர்மக்கலை நிபுணர் தனது பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன்மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்குவர்மமாகும். இந்த வர்மமுரையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்திய மாமுனிவர், நோக்குவர்மா முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.
உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவுகள், அடிகள் போன்றவை பற்றியும், அவற்றால் அடையும் பாதிப்புக்களையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் அகத்தியர் குறிப்பிட்டிருக்கின்றார். சில உயிர் நிலைகளில் ஏற்படும் பாதிப்புக்களுக்கு சிகிச்சைகள் இல்லையென்றே குறிப்பிடுகிறார். மேலும் இந்த சிகிட்சைகளுக்குத் தேவையான மருந்த்கலான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவைகளைத் தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளையும் இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கின்றது.
இக்கலையை பயில அடிப்படையான தகுதிகள் சிலவற்றை தனது நூலில் அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும், நிதானமும், பதட்டமோ கோபப்படும்தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படைத் தகுதியாகக் கூறுகின்றார். மேலும் எதிரிகளைத் தாக்கும் நோக்கத்துடன் கற்காமல், மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.
இவர்கள் தங்களின் உயிருக்கு ஆபத்து நேரும் தருனமன்றி, வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதனை பிரயோகிக்கக் கூடாது. அப்படியான சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் எதிரியைத் தாக்கி வீழ்த்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தேர்ந்த வர்மக்கலை நிபுணன் ஒருவன் எத்தகைய பலசாளியையும் ஒன்றிரண்டு தாக்குதலிலேயே எதிரியை நிலை குலைய வைத்து வீழ்த்தி விடமுடியும். குறிப்பிட்ட சில வர்மபுள்ளிகளைத் தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
சித்த மருத்துவத்தில் இதனை உள்ளடக்கி மருத்துவங்கள் செய்யப்படுகின்றன. தற்காப்புக் கலையாக உருவான இந்த கலை, காலப்போக்கில் மருத்துவ சிகிச்சைக்கும் மேற்கொள்ளப்பட்டது. வர்மக்கலை, இதனை மர்மக்கலை என்றும் 'நரம்படி' என்றும் கூறுகின்றனர்.
வர்மக்கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே தற்காலத்தில் நம்மிடையே இருக்கின்றார்கள். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினராக உள்ளனர். குருமுகமாக இந்த வித்தையைக் கற்றுக்கொண்ட எவரும் விளம்பர வெளிச்சத்திற்கு விருப்பம் கொள்வதில்லை என்பது அறிந்ததே. இக்கலை உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக நுட்பமான கலையாகும்.

http://varmam.org/workshops/workshopschedule.php மேலதிக தகவல்களுக்கும் பயிற்றுவிக்கும் தொடர்புக்கும் காண்க: இனிய நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டி.. அன்புடன் கே எம் தர்மா....
I hope you like this... நோக்கு வர்மம்- Nokku Varmam - A new perspective
ReplyDeletehttp://ragsgopalan.blogspot.com/2011/10/nokku-varmam.html
மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே ராக்ஸ் கோபாலன் அவர்களே!!!
ReplyDeleteஇந்த கலையின் மூலம் மிக சில ரே உள்ளார்கள் என்று கூறுயுள் ளிர்கள் அவர்களின் முகவரியை எனது போன் க்கு8072458270 தகவல் தெரிவியுங்கள் ஐயா எனது மனைவி பலவினமாக சத்து பற்றாகுறையின் காரனமாக நடக்க முடியாமல் இருக்கிறார்கள்
ReplyDelete