Search This Blog

Feb 3, 2012

திருமந்திரம்> : 237 பதிகங்கள், 3000 பாடல்கள்


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் :: ஒன்று முதல் ஒன்பது தந்திரங்களில் முதல் தந்திரத்தின் 27 பதிகங்களின் விபரங்கள்.:
விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்: 39 ... 40
முதல் தந்திரம் - 27 பதிகங்கள்:  ..........................................(40+293=333)
பதிகம்: 1. சிவபரத்துவம்.....................:பதிக பாடல்கள்: 56.....96
பதிகம்: 2. வேதச் சிறப்பு........................:பதிக பாடல்கள் 06...102
பதிகம்: 3. ஆகமச் சிறப்பு:.......................பதிக பாடல்கள் 10...112
பதிகம்: 4. உபதேசம்.................................:பதிக பாடல்கள் 30....142
பதிகம்: 5. யாக்கை நிலையாமை.:பதிக பாடல்கள்: 25...167
பதிகம்: 6. செல்வம் நிலையாமை:பதிக பாடல்கள்: 09....176
பதிகம்: 7. இளமை நிலையாமை: பதிக பாடல்கள்: 10....186
பதிகம்: 8. உயிர் நிலையாமை...: பதிக பாடல்கள்: 10........196
பதிகம்: 9. கொல்லாமை................: பதிக பாடல்கள்: 02........198
பதிகம்: 10. புலால் மறுத்தல்.........: பதிக பாடல்கள்: 01........199
பதிகம்: 11. பிறன்மனை நயவாமை: பதிக பாடல்கள்:03..202
பதிகம்: 12. மகளிர் இழிவு...............: பதிக பாடல்கள்: 06........208
பதிகம்: 13. நல்குரவு...............................: பதிக பாடல்கள்: 05....213
பதிகம்: 14. அக்கினி காரியம்............: பதிக பாடல்கள்: 10....223
பதிகம்: 15. அந்தணர் ஒழுக்கம்......: பதிக பாடல்கள்: 14....237
பதிகம்: 16. அரசாட்சி முறை.............: பதிக பாடல்கள்: 10....247
பதிகம்: 17. வானச் சிறப்பு...................: பதிக பாடல்கள்: 02.....249
பதிகம்: 18. தானச் சிறப்பு.....................: பதிக பாடல்கள்: 01....250
பதிகம்: 19. அறஞ்செய்வான் திறம்: பதிக பாடல்கள்: 09...259
பதிகம்: 20. அறஞ்செயான் திறம்....: பதிக பாடல்கள்: 10....269
பதிகம்: 21.அன்புடைமை....................: பதிக பாடல்கள்: 10....279
பதிகம்: 22.அன்பு செய்வாரை அறிவன் சிவன்:பாடல்கள்: 10..289
பதிகம்: 23. கல்வி........................: பதிக பாடல்கள்: 10.................299
பதிகம்: 24. கேள்வி கேட்டமைதல்:பதிக பாடல்கள்:10....309
பதிகம்: 25. கல்லாமை...............///.......: பதிகபாடல்கள்: 10.....319
பதிகம்: 26. நடுவு நிலைமை...............: பதிகபாடல்கள்: 03....322
பதிகம்: 27. கள்ளுண்ணாமை............: பதிகபாடல்கள்: 11 ...333
******************************************************************
பத்தாம் திருமுறை : திருமூலர் - திருமந்திரம் :  237 பதிகங்கள், 3000 பாடல்கள்
பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார்.

******************************************************************

விநாயகர் வணக்கம்

பாடல் எண் : 1

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


விளக்கவுரை :  ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

குறிப்புரை :  `இந்து` என்பது வடசொல்லாதலின் இன்பெறாது என்று, `இந்து விளம்பிறை` எனப்பாடம் ஓதுவாரும் உளர். `நந்தி` என்பது சிவபெருமானுக்கே பெயராதல் அறிக. திருமூலர் தமது நூலை ``ஒன்றவன்முன்`` எனத் தொடங்கினார் என்பது சேக்கிழார் திருமொழி யாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர் தாம் முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க. திருமுறைகளுள் ஒன்றிலும் முதற்கண் விநாயகர் காப்பு இல்லாமையும், சாத்திரங்களிலும் உந்தி, களிறு முதலிய சிலவற்றில் இல்லாமையும் நோக்கத் தக்கன. ``ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி`` என்பதே சேக்கிழார் திருமொழியாகலின், இந் நூலின் தொடக்கப்பாடல் ``ஒன்றவன்றானே`` என்னும் பாடலே என்பது இனிது விளங்கும்.

======================================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!