Nambiyandar Nambi is the scholar saint who compiled the first - 11 Thirumurais. Ten pieces of work of this saint find a place in the 11th Thirumaurai. Of these ten, one is on Vinayagar, one on Sivan, one an extension of Thiruththondath Thokai, six on Gnaanasambanthar and the last one on Thirnavukarasar.
பதினொரு திருமுறைகளையும் தொகுத்து வழங்கிய நம்பியாண்டார் நம்பிகள் பாடிய பத்துச் சிறு நூல்கள் இத்தொகுப்பின் நிறைவில் இடம் பெற்றுள்ளன. இப்பத்து நூல்களுள் ஒன்று விநாயகர் மீதும், ஒன்று சிவன் மீதும், ஒன்று திருத்தொண்டத் தொகையின் விரிவாகவும், ஆறு நூல்கள் திருஞானசம்பந்தர் மீதும், பத்தாவது நூல் திருநாவுக்கரசர் மீதும் பாடப்பெற்றுள்ளன. கீழ்தரப் பெற்றுள்ள பட்டியல் அவர் பாடிய நூல்களின் பெயர்களை விளக்கும்.
- திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
- திருத்தொண்டர் திருவந்தாதி
- ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
- ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
- ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
- ஆளுடையபிள்ளையார் திருஉலாமாலை
- ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
- ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
- திருநாவுக்கரசு நாயனார் திரு ஏகாதசமாலை
2.6.1 நம்பி - நூல்கள்:
நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்றவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுருக்கமாகத் தம் திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தவர். தேவாரமூவர் மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.
தமது நூல்களில் ஒன்றான திருச்சண்பை விருத்தத்துள்,
ஆறு தேறும் சடையான் அருள்மேவ
வீறு தேறும் தமிழால் வழிகண்டவன்...(திருச்சண்பை விருத்தம்)
வீறு தேறும் தமிழால் வழிகண்டவன்...(திருச்சண்பை விருத்தம்)
எனவும் இவர் திருஞானசம்பந்தரைப் பெரிதும் போற்றி மகிழ்கிறவர். இவ்வாறான 40 பனுவல்களின் தொகுப்பாக இப்பதினொராம் திருமுறை அமைந்திருப்பதை இப்பதிவு விளக்கி நிறைகிறது. பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் பெரியபுராணம் பற்றிய விரிவான செய்திகளைப் பின்வரும் பதிவில் (A0112) அறிந்து கொள்ளலாம்.
2.7 தொகுப்புரை:
சைவத் திருமுறைகள் என்ற தலைப்பில் அமைந்த இவ்விரண்டாம் பதிவில் பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பற்றிய விளக்கங்களும், அவற்றின் ஆசிரியர்கள் குறித்த சிறு அறிமுகமும் வழங்கப்பட்டுள்ளன. தேவாரமும், திருவாசகமும் தனியே ஒரு பதிவாகவும், பெரியபுராணம் பிறிது ஒரு பதிவாகவும் விரித்துரைக் கப்படுவதால் எஞ்சிய திருமுறைகள் பற்றிய விளக்கங்கள் மட்டுமே இப்பதிவில் வழங்கப் பட்டுள்ளன.
சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறைகளுக்கு உள்ள சிறப்பிடமும், தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழ் இலக்கியம் மற்றும் யாப்பியல் வளர்ச்சியிலும், இசை வளர்ச்சியிலும் சைவத் திருமுறைகள் ஆற்றிய பங்களிப்பை இப்பாடம் சுருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளது. விரிவான செய்திகளைப் பார்வை நூல்களின் துணைகொண்டு அறிந்து கொள்ளலாம்.
1. திருமந்திரம் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
2. திருமந்திரம் பாடப்பெற்ற தலம் எது? திருமந்திரம் பாடப்பெற்ற தலம் திருவாவடுதுறை.
3. திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ள மூன்று அழகிய தொடர்களை எடுத்துக்காட்டுக.
அ. | ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ |
ஆ. | ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே’ |
இ. | ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ |
4. ‘திருமுகப்பாசுரம்’ சிறு குறிப்பு:
மதுரைச் சிவன் திருவாலவுடையார் பாடியது; சீட்டுக்கவி வகையைச் சேர்ந்தது. தன்பால் அன்புடைய பாணபத்திரன் என்ற இசைவாணனுக்கு உதவிடுமாறு சேரமன்னர் சேரமான் பெருமாள் நாயனாருக்கு விடுக்கப்பட்ட திருமுகம் இது. பாடல் ‘மதிமலிபுரிசை மாடக்கூடல்’ என்று தொடங்குகின்றது. பதினொராம் திருமுறையுள் முதலில் இடம்பெற்றுள்ளது.
5. காரைக்கால் அம்மையார் பாடிய நூல்கள் எவை:
1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
2. மூத்த திருப்பதிகம்
3. திருஇரட்டை மணிமாலை
4 . அற்புதத் திருவந்தாதி
6. பதினொராந் திருமுறையுள் இடம்பெற்றுள்ள விநாயகர் பாமாலைகள் எவை?
1. | மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை | - | கபிலதேவர் |
2. | மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை | - | அதிராவடிகள் |
3. | திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை | - | நம்பியாண்டார் நம்பிகள் |
6. பதினொராந் திருமுறையுள் இடம்பெற்றுள்ள விநாயகர் பாமாலைகள் எவை?
1. மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை… கபிலதேவர்
2. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை… அதிராவடிகள்
3. திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை…நம்பியாண்டார் நம்பிகள்
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!