சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -511அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர்
சித்தினில் தெளிந்தபோது தேவர் கோயில் சேர்ந்தன
அத்தன் ஆடல் கண்டபோது அடங்கி ஆடலுற்றதே.
எல்லாத் திசைகளுக்கும் எல்லா உயிர்களுக்கும் தந்தையாக விளங்குபவன் எம்பிரானாகிய ஈசன்!! முத்தீயும் ஒன்றாக அமைந்துள்ள வித்தாகிய மெய்ப் பொருளில் முளைத்து எழுந்த செஞ்சுடரான சோதியானவன். இதனை உங்கள் சித்தமாகிய அறிவை அறிந்து தெளிந்தபோது தேவனாகிய ஈசன் நம் உள்ளக் கோயிலில் சேர்ந்திருப்பதை உணர்ந்து தியானத்தில் நில்லுங்கள். அங்கே அத்தன் நடராஜனாக நடம் புரிந்து கொண்டிருப்பதை கண்டபோது மனம் அதிலேயே அடங்கி அவனது ஆடலிலேயே உற்று அறிவாக பிரகாசித்திருந்தது.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -512

வல்ல வாசல் ஒன்பதும் அருத்தடைத்த வாசலும்
சொல்லும் வாசலோ ரைந்தும் சொல்லி விம்மி நின்றதும்
நல்ல வாசலைத் திறந்த ஞான வாசலூடு போய்
எல்லை வாசல் கண்டபின் இனிப் பிறப்ப தில்லையே.
நம் உடலில் உள்ள ஒன்பது வாசலில் அருத்தடைத்த வாசலாகியதாகச் சொல்லும் பத்தாம் வாசலில் உள்ள ஓரெழுத்தை அறிந்து அதிலேயே ஐந்தே பூதங்களும் அடங்கியிருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதிலேயே நமசிவய என்ற அஞ்செழுத்தை ஓதி தியானிக்க மெய்ப்பொருள் நீராக விம்மி நின்றது. அதுவே நம் தீயாகிய நந்தியாகிய நல்ல வாசலை வாசியினால் திறந்து ஞானம் விளங்கும் மௌனத்தில் ஊன்றி சோதியாக ஈசன் உலாவுகின்ற எல்லையான வாசலைக் கண்டு கொண்டு அவனையே தியானித்திருப்பவர்கள் இறவா நிலை பெற்று இனி இப்பூமியில் பிறப்பது இல்லையே.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -513
ஆதியான தொன்றுமே அநேக ரூப மாயமாய்ப்
பேத பேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆனபின்
ஆதியோடு கூடி மீண்டெழுந்து சன்மமான பின்
சோதியான ஞானியரும் சத்தமா யிருப்பரே.
.
சித்தர் சிவவாக்கியம் -513
ஆதியான தொன்றுமே அநேக ரூப மாயமாய்ப்
பேத பேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆனபின்
ஆதியோடு கூடி மீண்டெழுந்து சன்மமான பின்
சோதியான ஞானியரும் சத்தமா யிருப்பரே.
.
ஆதியான அது ஒன்று தான் அநேக விதமான உருவங்களாகி மாயமான நிலையில்லா உடம்பாகி பல விதமான பேதங்களாய் மனிதன், விலங்கு, பறவை, பாம்பு போன்ற சகல விதமான உயிர்களாக ஆனது. அந்த ஆதியோடு கூடி சோதியாக நின்ற ஈசனை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை உணர்ந்த ஞானிகள் வாசிலயத்தால் நாத சப்தத்தை கிளப்பி ஆதியாகிய மெய்ப்பொருளில் கூடி சோதியிலேயே நிலைத்து தியானித்திருப்பார்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 514
வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேனெலாம்
உண்டுளே யடங்குவண்ணம் ஒதுலிங்க மூலமாய்க்
கண்டு கண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லிரேல்
பண்டு கொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.

தேன் வண்டு மணம் வீசும் பூக்களிலிருந்து தேனை உறிஞ்சி எடுத்து வந்து தேனடையில் சேர்த்து வைத்து பின் அதையே உண்டு உள்ளேயே அடங்கி இருக்கும். அது போல நீங்கள் ஓதுகின்ற அஞ்செழுத்து மந்திரம் உங்களுக்குள்ளேயே இலிங்கமாகி மூலப் பொருளாக இருப்பதை அறிந்து கொண்டு அந்த லிங்கத்தையே கண்களில் கண்டு அஞ்செழுத்தை ஓதி அதன் வேறாக உள்ளிருக்கும் விதத்திலேயே அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றையும் இனத்து மனதை ஒடுக்கி ஈசனையே நினைந்து தியானம் செய்து அதிலேயே ஒடுங்கியிருங்கள். நீங்கள் முன் சென்மங்களில் செய்த பாவங்களும் வலிய ஊழ்வினைகளும் உங்களை விட்டு விலகி ஓடச் செய்வது சிவாயமே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 515
ஒரெழுத்தில் லிங்கமாக ஒதுமக்கரத்துளே
ஒரெழுத்தில் இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவரை முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.
உங்கள் உடம்பிலேயே உணர்வுறு மந்திரமாகிய ஒரேழுத்தே பஞ்ச பூதங்களாகி ஓதுகின்ற அஞ்செழுத்தான இலிங்கமாக அமைந்துள்ளது. ஒரெழுத்தில் ஈசன் இருந்து இயங்குகின்ற உண்மையை அறியாமல் இருக்கின்றீர்கள். அந்த ஒரெழுத்தில் இருந்தே தோன்றி அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றெழுத்தான ஒன்காரமாகவும் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளாகவும் முளைத்தெழுந்த சோதியை உணருங்கள். மணம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களையும் தினமும் அதிகாலமே எழுந்து சுத்தி செய்து நாவிலே நமசிவய மந்திரத்தை நவின்று அதுவே சிவன் என்பதை தெளிந்து தியானியுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!