சிவவாக்கியம் (491-495)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -491அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
புத்தகங்களை சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙனென்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்து நோக்க வல்லிரேல்
உத்தமத்துளாய சோதி யுணரும் போக மாகுமே.
புத்தகங்கள் பலவும் நிரம்பப் படித்து தலைக்கனத்தை சுமந்து உண்மையை உணராது, கற்ற கர்வத்தினால் பொய்களையே பிதற்றித் திரிகின்றீர்கள். நீங்கள் பிறந்த இடம் எது? சாகப் போகும் இடம் எது? என்பதையும் அது உங்களுக்குள் எங்ஙனமாய் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவே மெய்யறிவு என்பதையும் அதிலேயே அத்தனை தத்துவங்களும் பொருந்திய சித்தனாம் சிவன் இருப்பதை அறிந்து கொண்டு அதையே நோக்கி தியானம் செய்து ஞானத்தில் வல்லவராகுங்கள். உங்கள் உள்தமரில் உள்ள உத்தமமான சோதியை உணர்ந்து இறை இன்பம் பெறுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -492

அருளிலே பிறந்த உதித்து மாயை ரூபமாகிய
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல்
மருளதேது வன்னியின் மறைந்ததே சிவாயமே..
ஈசன் அருளினாலே பிறந்து வளர்ந்து மாயா ரூபமான இந்த பொய்யான உடம்பைப் பெற்று இருளாகிய துன்பத்தில் வீழ்ந்து சாகும் மனிதர்களே! நான் சொல்லுவதை கேளுங்கள். உங்கள் உடம்பிலேயே மெய்ப்பொருளை அறிந்து அங்கு சோதியான ஈசனை உணர்ந்து அப்பொருளிலேயே வாசியைப் புனைந்து மனம், அறிவு, உணர்வு என்ற மூன்றையும் அதிலேயே பொருந்தி நோக்கி தவம் புரிந்து வல்லவராகுங்கள். மருளாகிய மயக்கமும் துன்பங்களும் வன்னியாகிய சோதியில் மறைந்துவிடும். வன்னியாக நின்ற அதுவே சிவம் என்பதை அறிந்து தியானியுங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -493
கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணா
உருக்கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின்
தருக் கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின்
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டு மற்றிருந்ததே.
.
சித்தர் சிவவாக்கியம் -493
கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணா
உருக்கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின்
தருக் கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின்
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டு மற்றிருந்ததே.
.
கருவாக உருவாகிய போதே என்னோடு கலந்து நின்றவன் ஈசன் என்பதை நான் கண்டுகொண்டேன். நான் காணவும் அனைத்துக்கும் காரணமானவன் ஈசன். அவன் என்னுள் உருவாகவும் சோதியாகவும் கலந்து நின்றதை தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அண்டங்கள் யாவும் கலந்து நின்றது அச்சோதியே என்பதைத் தெளிந்து அவ்வீசனையே பற்றி தியானித்திருக்கின்றேன். அதன்பின் நான் இருப்பதைப் பற்றியோ இறப்பதைப் பற்றியோ எந்த நினைவும் இன்றி எல்லாம் அவ்வீசனிடமே ஒப்படைத்து சரணடைந்து என்றும் நித்தியமான இரண்டுமற்றிருந்த மெய்ப்பொருள் ஒன்றிலேயே தியானித்து இருக்கின்றேன்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 494
தன்ம சிந்தை யாமளவுந் தவமறியாத் தன்மையாய்க்
கன்ம சிந்தை வெயிலுழன்ற கருத்தழிந்த கசடரே
சென்ம சென்மந் தேடியும் தெளியொணாத செல்வனே
நன்மையாக வும்முளே நயந்து காண வேண்டுமே.

தர்ம எண்ணம் சிறிதும் இல்லாத தன்மையினால் தர்மமே தவம் என்பதை அறியாமல் கர்மாவினால் ஏற்பட்ட பந்தங்களில் சிந்தையை வைத்து அதனால் வருகின்ற இன்ப துன்பங்களால் கடும் வெயிலில் விழுந்து துடிக்கும் புழுப்போல துடித்து இப்பிறப்பின் உண்மையானக் கருத்தை அறியாமல் அழிந்து போகும் கசடர்களே! எத்தனை சென்மங்கள் எடுத்து தேடினாலும் கண்டு தெரிந்து கொள்ள முடியாத செல்வமான ஈசனை நமக்குள் நல்ல பொருளாகவும் நன்மையை தரவல்ல மெய்ப் பொருளாகவும் நடுவாகவும் இருப்பதை அறிந்து அதையே எப்போதும் நினைவில் நிறுத்தி தியானித்து நயந்து காண வேண்டும்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 495
கள்ள உள்ளமே யிருக்கக் கடந்த ஞானம் ஒதுவீர்
கள்ள உள்ளம் அறுத்த போது கதியிதன்றிக் காணகிலீர்
உள்ளமே விளக்கி நித்தம் ஒளியை அணுக வல்லிரேல்
தெள்ளு ஞானமும் முளே சிறந்ததே சிவாயமே.
கள்ளத்தனமான எண்ணங்களை உங்கள் உள்ளத்தில் வைத்துக் கொண்டு, எல்லாம் கடந்த எல்லையைக் கண்டது போல் ஞானம் பேசி உபதேசம் செய்கின்றீர். அந்த கள்ள எண்ணங்கள் யாவையும் வேரோடு அறுத்து உள்ளத்தை பரிசுத்தமாக்கி தியானிக்கும் போது நமக்கு நற்கதி கொடுக்கும் திருவடி மெய்ப்பொருளையன்றி வேறு எதையும் பார்க்காதீர்கள். நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் யாவையும் அன்பால் கசிந்துருகி அகற்றி நித்தமும் வாசியினால் ஒலியை ஏற்றி ஒளியுடன் கூட்டி தியானிக்க வல்லவரானால் தெளிந்த சோதியாகிய ஞானம் உங்களுக்குள் சிறந்து அதுவே சிவத்தோடு சேர்க்கும்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைத் தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!