சிவவாக்கியம் (456-460)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -456அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்து தேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பரந்துங் கண்டதில்லையே.
உலக முழுதும் உள்ள உயிரில் எந்தையான ஈசர் உகந்து வைத்த பாதத்தினால் ஒளி பெற்று நீராக இருந்து வருகின்றது என்பதை உமக்குள் தியானித்திருந்து பாருங்கள். அது செம்மையான மெய்ப் பொருளாக நடுவில் இருப்பதை அறிந்து அதுவே ஈசர் பாதம் என்பதை உணர்ந்து வாசியை ஏற்றி சேருங்கள். ஈசனின் அடியையும், முடியையும் காண விரைந்து தேடிய பிரமனும், திருமாலும் பூமியைப் பிளந்தும் வானிலே பறந்தும் சோதிப் பிழம்பாக பூமிக்கும், வானத்திற்கும் நின்ற ஈசனின் அடி முடியைக் கண்டதில்லை. அப்படிப்பட்ட ஈசன் நமக்குள் மெய்ப் பொருளில் சதியாக உள்ளதை உணர்ந்து அதுவே திருவடியானதை அறிந்து அதையே நோக்கி தியானித்திருங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -457

கண்டிலாது அயன் மாலென்று காட்சியாகச் சொல்கிறீர்
மிண்டினால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டு மட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல்
பண்டு முப்புரமெரித்த பக்தி வந்து முற்றுமே.
திருமாலும், பிரமனுங்கூட ஈசனின் அடிமுடியைக் கண்டதில்லை என்று கதை காட்சியாக சொல்கிறீர்கள். உடம்பினுள் ஈசனுடன் மேவி கூடியே இருந்தாலும் ஈசனே யாவர்க்கும் மேலான இறைவனாய் இருப்பதை அறிந்துணர்ந்து கொள்ளுங்கள். இறை தொண்டுகள் செய்து அன்புடன் மெய் பக்தி வைத்து அழுது தொழுது அதையே நோக்கி தியானிக்க வல்லவர் களானால் முன்பு முப்புரங்களையும் மெல்ல சிரித்தே எரித்த ஈசன் நம் பக்கத்திலேயே தீயாக நின்று முற்றுமாய் அவனே வந்து ஆண்டு கொள்வான்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -458
முற்றுமே அவனொழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றில்லாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதங் காணலா யிருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.
.
சித்தர் சிவவாக்கியம் -458
முற்றுமே அவனொழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றில்லாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதங் காணலா யிருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.
.
யாவிலும் முழுவதுமே அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன். அவனே அனாதியாய் பற்றில்லாத ஒன்றான பரம்பொருளாகி நம்மை பற்றி நிற்கும் வல்லமையான மெய்ப் பொருள். அதையே பற்றி நின்று பரம் பொருளை அடைவதே மெய் கல்வி. நிரம்ப கற்று பட்டம் பதவி பெற்றிருந்தாலும் உனக்குள் இருக்கும் ஈசர் பதம் காணாமல் இருக்கலாமோ! எவ்வளவு கற்றாலும் ஈசன் பாதம் அறிய முடியாது. மெய்ப்பொருளை பெற்று ஈசனையே எண்ணி தியானம் செய்து ஞானமடைந்த குருவினைப் பணிந்து அன்புடன் தொண்டு செய்து பிரியமாக நடந்து அப்பதமடைய ஆவல் கொண்டு கேளுங்கள். உணர்ந்த அதை உணர்த்துவார்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 459
கேட்டு நின்ற உன்னிலை கிடைத்த காலந் தன்னுளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும்
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டெழுப்புமே.

ஞானம் கேட்டு நின்ற உனக்கு நிலையான மெய்ப்பொருள் கிடைத்த காலத்தில் தன்னுள்ளேயே அறிந்து உணர்ந்த நேரத்தில், உனக்குள்ளே உன்னை சந்தேகித்து சங்கடப்படுத்தி வாட வைத்த தத்துவ மயக்கங்கள் யாவையும் அகற்றி தெளிய வைக்கும் உன் உடம்பாகிய வீட்டிலேயே புதிர்களாய் இருந்தவை யாவும் விளக்கமாக விளங்கி மெய்யறிவு வந்து சேர்ந்திடும். வன்னி எனும் அனலையும் மாருதமான தனஞ்செயன் வாயுவான கனலையும் வாசியினால் கூட்டி ஏற்றினால் மூலாதாரத்தை விட்டு குண்டலினி சக்தி மேலே எழும்பி நாத ஒலியுடன் கிளம்பும்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 460
எழுப்பி மூலநாடியை யிதப் படுத்தலாகுமோ
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல்
சுழுத்தியுங் கடந்து போய் சொப்பணத்தில் அப்புறம்
அழுத்தியோரெழுத்துளே அமைப்பதுண்மை ஐயனே.
குண்டலினியை எழுப்பி சுழுமுனை நாடியில் வாசியை லயபடுத்தி நாதமாக உடலில் எங்கணும் செலுத்த உங்களால் முடியுமோ. அப்படி வாசி லயமானால் அதனை எல்லாம் அடங்கிய சிற்சபைக்கு நீங்கள் வலித்து வாங்கி ஏற்றி மெய்ப் பொருளில் சேர்த்து தியானித்து இருங்கள். அப்போது ஏற்படும் சுழுத்தியாகிய மயக்க நிலையைக் கடந்து போய் கனவு காணும் இடத்திற்கு அப்புறத்தில் மனதை நிறுத்தி இருந்திடுங்கள். ஒரேழுத்திலேயே தியானத்திலிருந்து அழுந்தியிருங்கள். எல்லாம் அந்த ஒரெழுத்துக் குள்ளேயே அமைத்து அதிலேயே நீ அமர்ந்திருப்பது உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன் ஐயனே!!!
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!