சிவவாக்கியம் (436-440)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -436 அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
இந்தவூரிலில்லை யென்றெங்கு நாடி யோடுறீர்
அந்த வூரிலீசனும் அமர்ந்து வாழ்வதெங்ஙனே
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை
அந்தமான சீயிலவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.
இந்த ஊரில் ஈசன் இல்லையென்று எண்ணி எங்கெங்கோ அவனை நாடி தேடி ஓடுகின்றீர்களே! இந்த ஊரில் இல்லாத ஈசன் அந்த ஊரில் மட்டுமா அமர்ந்து வாழ்கிறான். உனக்குள்ளேயே மிகவும் இரகசியமான பத்தாம் வாசலில் உள்ள பொந்தில் உயிரை மேவி நின்ற நாதனை அறிந்து இரகசிய ஒரேழுத்தான சிகாரத்தை உணர்ந்து அது அவ்வெனும் அகாரத்தில் இருப்பதால் அதிலேயே தியானத்தில் வைத்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். .
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -437

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை யாக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணியும் கொன்றை சூடி அம்பலத்துளாடுவார்
மிக்க சோதி யன்புடன் விளம்பிடாது பின்னையே.
உங்களுக்குள் புகுந்திருந்து பூவானதும் பூரணமாய் நின்றதுவும், ஆன சிவத்தையே தோத்தரித்து வாசியினால் தொக்கி நின்று சிங்கெனும் ஒரெழுத்தால் மேலேற்றி சூரியனை கிராணன் பிடிப்பது போல் சூரியனையே சூழ்ந்திருங்கள். உருத்திராட்ச மணியும் கொன்றை மாலையும் சூடிய சங்கரன் உங்கள் அம்பலத்துள் ஆடுவார். அருட் பெருஞ்சோதியான ஈசன் அன்பே சிவமாய் அமர்ந்திருந்த உண்மையை உணர்ந்து கொண்டு மௌனத்திலேயே இருந்து அனுபவித்து ஆனந்தம் அடையுங்கள்..

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -438
பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே
பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள் தாம் சூழ்ந்திடும் பினென்றலோ
அன்பராயிருந்து பேர்களாறு நீந்தல் போல் விடே.

பேதைப் பெண்களின் உடம்பில், பின்பு தோன்றி எழுந்த சதையின் மேல் ஆசை கொண்டு, அவர்களின் கண் வலையில் சிக்கி காமமுற்று, தோலால் மூடிய சதையில் விருப்பமுற்று, மாய்கையாகிய சிற்றின்பம் ஒன்றையே பெரிதாகக் கொண்டு போகத்திலேயே வீழ்ந்திருந்தால் அதனால் உங்களைத் துன்புறுத்தும் வினைகளும் பிணிகளும் சூழ்ந்து வாழ நேரிடும். அதனால் அன்பே சிவமாய் இருந்து சிற்றின்ப வேட்கையை விட்டு ஆற்றில் நீந்தி அக்கறை அடைவது போல இப்பிறவிக் கடலை யோக ஞான சாதகத்தால் கடந்து இறைவனடியைச் சேர்ந்திடுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 439
விட்டிருந்ததும் முளே விதன மற்றிருக்கிறீர்
கட்டி வைத்த வாசல் மூன்று காட்சியான வாசலொன்று
கட்டி வைத்த வாசலுங் கதவு தாள் திறந்து போய்த்
திட்டமான வீசனைத் தெளியு மாங்கி சத்துளே.

உனக்குள் உள்ள ஞான வீட்டில்தான் இறைவன் இருக்கின்றான். அவனை அங்கேயே எண்ணாமல் விசாரமற்று இருக்கின்றீர்கள். சந்திர சூரிய அக்னி மண்டலங்களாக கட்டி வைத்த வாசல் மூன்று. அதில் காட்சியாகவும் சாட்சியாகவும் இறைவன் இருக்கும் வாசல் ஒன்று. மூன்று மண்டலங் களையும் கட்டி, பத்தாம் வாசலின் பூட்டை உடைத்து, அடைத்த கதவின் தாள் திறந்தால் அங்கே திடமாக இருந்து உலாவுகின்ற ஈசனை தெளிவாக தரிசிக்கலாம். அவன் சதையால் ஆன இவ்வுடம்பின் உள்ளேயே இருப்பதை அறிந்து தெளிந்து தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 440
ஆகு மாகு மாகுமே அனாதியான அப்பொருள்
ஏகர் பாதம் நாடி நாடி யேத்தி நிற்க வல்லிரேல்
பாகு சேர மொழி யுமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர்
அ, உ, என்ற எட்டிரண்டு அறிந்து அதிலேயே ஆகி நின்ற அனாதியான மெய்ப்பொருளை அறிந்து கொள்ளுங்கள். அதனால்தான் எல்லாம் ஆகும் என்பதை உணருங்கள். அதுவே ஏகமாகிய ஈசர் பாதம் என்று பற்றி அதையே நாடி நாடி எட்டிரண்டால் ஆ ஹூ என வாசியை ஏற்றி அப்பொருளிலேயே மௌனத்தில் நிற்க வல்லவரானால் ஈசன் இடப் பாகத்தில் சேர்ந்திருக்கும் உமையம்பிகையின் அமுதப்பால் கிடைத்து பாலனாகி வாழலாம். யோக ஞான திறமையால் வாகுடனே வன்னியெனும் வலப்பக்க தீயே உண்மையென உணர்ந்து அதிலேயே மருவி நின்று ஊண் உருக, உயிர் உருக தியானித்திருங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!