சிவவாக்கியம் (376-380)
சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -376
உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெல்ல வந்து கிட்டி நீர் வினவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம்
கள்ள வாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே.
உயிர் இவ்வுடம்பின் உள்ளே ஒடுங்கி இருக்கின்றதா? அல்லது புறம்பாக வெளியே ஒடுங்கி நிற்கின்றதா? என்பதை மெல்ல அருகில் வந்து சொல்ல வேண்டும் என்கின்றீர்களே! உயிர் உடம்பின் உள்ளே சோதியாகவும், வெளியே வாலையாகவும் இருந்து இரண்டும் ஒன்றாகிய இடத்தில் நாதமாக ஒடுங்கி நிற்கின்றது. இதனை உணர்ந்து மனமாகிய பத்தாம் வாசலை அறிந்து அதனை யோகா ஞான சாதகத்தால் திறந்து காண வேண்டும் மாந்தர்களே!!
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -377

ஒரெழுத்து லிங்கமா யோது மட்சரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற வுண்மையை யறிகிலீர்
மூவெழுத்து மூவரை முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.
ஒரேழுத்தே லிங்கமாகி நிற்கின்றது. ஓதுகின்ற அனைத்து அட்சர மந்திரங்கள் உள்ளேயும் ஓரெழுத்து முதலாகவும், நடுவாகவும் முடிவாகவும் இருந்து இயங்குகின்ற உண்மையை அறியாமல் இருக்கின்றீர்கள். அதுவே அகார, உகார, மகாரமான மூன்றேழுத்தாகி ஓங்காரமாகவும் அரி, அரன், அயன் என்ற மூவராகவும் விளங்கி அங்கே முளைத்து எழுகின்ற சோதியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்கின்ற நான்கு அந்தக் கரணங்களையும் உணர்ந்து நாளும் நாவுள்ளே சிவயநம என்று அஞ்செழுத்தால் ஓதி தியானியுங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -378
மூத்த சித்தி தொந்தமா முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த வப்புலன்களாகு மத்தி மப்புலன்
அத்தர் நித்தர் காளகண்ட ரன்பினால் அனுதினம்
உச்சரித்து ளத்திலே யறிந்துணர்ந்து கொண்டினே.

முத்திக்கும் சித்திக்கும் காரணமான ஈசன் நமக்குள்ளே மன்றில் சோதியாக உதித்து நீராக நின்று ஐம்புலன்களில் நடுவாக அஞ்செழுத்தாகி இருக்கின்றான். காள கண்டராகிய அவனையே பக்தர்களும், ஞானிகளும் அனுதினமும் அன்பினால் அஞ்செழுத்தை ஓதி தியானிப்பார்கள். நித்தியமாய் விளங்கும் அச்சோதீஸ்வரனை அஞ்செழுத்தால் சிவயநம என்று உச்சரித்து உள்ளத்திலே தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 379
மூன்றிரண்டு மைந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டு மைந்தராய் முயன்றதே யுலகெலாம்
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதாமாய்த்
தொன்றுமொ ரெழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே.
.

அகார, உகார, மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமும் நாத விந்து எனும் இரண்டும் சேர்ந்து பஞ்சபூதங்களாகி அதில் முயன்றெழுகின்ற சக்தியே ஈசன். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றினோடு இரு வினைகள் சேர்ந்து ஐம்புலன்களாகவும் அமைந்து மைந்தராகவும் தாயும் தந்தையாகவும் இயங்குகின்ற நாதமாகிய உடம்பே இந்த உலகமெலாம் நிறைந்துள்ளது. ஒரேழுத்தினால்தான் என்பதையன்றி வேறு சொல்ல ஒன்றுமில்லையே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 380
வெளியுருக்கி யஞ்செழுத்தும் விந்து நாத சத்தமுந்
தளியுருக்கி நெய் கலந்து சகல சத்தியானதும்
வெளியிலு மவ்வினையிலு மிருவரை யறிந்த பின்
தெளிகலந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.
ஆகாய வெளியாகிய மனதை உருக்கி சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி தியானிக்க விந்தும், நாதமும் சேர்ந்து ஒளி, ஒலி சத்தம் கேட்கும். தயிரைக் கடைந்து நெய் எடுப்பது போல ஊணினை உருக்கி உயிரினைக் கடைந்து உங்களுக்குள்ளே சகல சக்தியாக உள்ள மெய்ப்பொருளை உணருங்கள். வெளியான மனதையும் நல்வினை தீவினையையும் அறிந்து சக்தியான உடம்பையும், சிவனாகிய உயிரையும் ஒன்றாக்கி தியானியுங்கள். அங்கே தெளிவாக சோதி கலந்திருந்த தன்மையை உணர்ந்து அதுவே சிவம் என தெளிந்து பரம்பொருளைச் சேருங்கள்.

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!