Search This Blog

Dec 15, 2011

சிவவாக்கியம் (291-295) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (291-295)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -291 
நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்த மன்று வீடு மன்று பாவகங்கள் அற்றது
கெந்த மன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்ற தோன்றி எங்
னே உரைப்பதே.  
    
அது ஓரிடத்தில் நின்றதில்லை, இருந்தது இல்லை, அதற்கு சமமாக ஒன்றுமில்லை. அதுதான் இதுவென கூறத்தக்கது இல்லை. அதற்கென எந்த பந்தமும் இல்லை எந்த வீடும் இல்லை. புண்ணியப் பொருளாகி எந்த பாவமும் அற்று இருப்பது, எல்லா மணமும் பொருந்தி எந்த மணமும் இல்லாதது. கேள்விகள் ஏதும் இல்லா சந்தேகமில்லாதது. கெடுதல் ஏதும் இல்லா வானாகி மணமாகி ஆதியும் அந்தமும் இல்லாத அனாதியாக நின்ற ஒன்றை எவ்வாறு எடுத்துரைப்பது.

 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -292
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம்
எருதிரண்டு கன்றை ஈன்ற வேகமொன்றை ஒர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே.


நம் உயிரே நீராகப் பொருந்தி உடம்பிற்குள் புகுந்து நின்ற காரணம் நம் தீயாகிய ஈசன், எருதாகிய நந்தி எனும் சுழுமுனையில் இடகலை, பிங்கலை எனும் மூச்சுக் காற்றால் உயிரை வளர்க்கும் வழியை ஓர்ந்து யோக ஞான சாதகம் புரியமாட்டீர்கள். உங்கள் அருகிலேயே இருந்து மாண்டு அழிந்து போகும் யாவையும் பார்த்தும், சுடுகாட்டில் மண்பானையில் நீர் நிரப்பி அதன் அடியில் மூன்று ஓட்டைகள் போட்டு நீரை வீணாக வெளியேற்றி உயிர் போனதை உணர்த்துவதை அறியமாட்டீர்கள். மரணத்தைக் கண்டும் மரணமில்லாப் பெறு வாழ்வடைய நாடி குருவைத் தேட மாட்டீர்கள். குருவாக உங்கள் மெய்யாகிய உடன்பில் மெய்ப் பொருளாக ஈசன் உலாவும் கோலம் என்ன என்பதை உணர்ந்து பிறவா நிலை பெற முயலுங்கள்.


****************************************************
சித்தர் சிவவாக்கியம் -293
அம்பரத்துள் ஆடிகின்ற அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே.

  
தோல் ஆடையினாலான உடம்பு எனும் அம்பரத்துள் ஆடிகின்ற அஞ்செழுத்து எனும் பஞ்சாட்சரப்பொருள் நீயே அல்லவோ. சிம்புள் என்ற சாதகப் பறவை வானிலேயே வாழ்ந்து கொண்டிருப்பது. அது வானிலேயே கருவுற்று இடும் முட்டை கீழே விழும்போதே அதன் குஞ்சு வெளிவந்து இறக்கைகள் முளைத்து பூமியைத் தொடாமலேயே வானில் பரந்து தாயைச் சேரும். அது போலவே பூமியைத் தொடாது, வானமாகிய மனத்தில் பரந்து நின்று இருதயக் கமலத்தில் சிற்றம்பலமான இடத்தில் உள்ள பரம்பொருளும் நீயே அல்லவா. எம்பிரானாகிய ஈசன் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்றாகவும் இன்ப துன்ப அனுபவமாகவும் இருப்பதால் அவனை அறிந்து அவனையே நினைந்து அவனை உள்ளுணர்ந்து தியானியுங்கள். எம்பிரானாகவும் நானாகவும் இருந்த அதுவே சிவாயமாம்.  

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 294
ஈரொ
ளிய திங்களே இயங்கி நின்றது அப்புறம்
ரொளி திங்களே யாவரும் அறிகிலீர்
கா
ரொளிப் படலமும் கடந்து போன தற்பரம்
பேரொளிப் பெரும் பதம் ஏக நாத பாதமே.
      .
இரண்டு ஒளியும் சூரிய சந்திரனாக இயங்கி நின்றதின் அப்புறத்தில் பேரொளியான ஈசன் அறிவாக இருப்பதை யாவரும் அறிய மாட்டார்கள். காணும் ஒளிப்படலத்தை கடந்து தனக்குள்ளேயே பரம் பொருளாய் அருட் பெருஞ் ஜோதியாக ஆண்டவன் இருக்கின்றான். அந்த சிவத்தின் திருவடியே மனிதப் பிறவி அடையும் பெரும் பேறு என்பதனை உணர்ந்து ஏகனாதனாகிய ஈசனின் பாதம் ஒன்றையே பற்றி நில்லுங்கள். 
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 295 

 கொள்ளொணாது மெல்லொணாது கொதறக் குதட்டடா
தொள்
ளொணாது அணு கொணாது அகலான் மனத்துளே
தெள்
ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்
ளொணா பொருளை நான் விளம்பு மாறது எங்ஙகனே        
  . 
கொள்ளவோ, கொடுக்கவோ, மெல்லவோ, குற்றமில்லாதது. குதப்பவோ, தள்ளவோ, அணுகவோ ஒண்ணாத ஒரு பொருளை மனதில் அறிந்து மனதிலேயே நிறுத்தி வைத்து தியானித்து தெள்ளத் தளிவாக தெளிந்த சிற்றம்பலம் மேவிய பரம்பொருளின் பயனை அறிந்து உங்களுக்குள்ளேயே உணர்ந்து கொள்ளுங்கள். அது வாயால் சொல்லக்கூடாத பொருள். ஆதலால் அதனை நான் எவ்வாறு சொல்லி விளக்குவது! அது உணர்த்த உணரும் பொருள். அவரவர் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் உண்மைப் பொருள்.   

         
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!