அகத்தியம்:
தமிழ் சங்கம் மருவிய காலகட்டத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தான் அகம் புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடையதாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
அகத்தீஸ்வரர், குறுமுனி என்றழைக்கப்படும் அகத்தியர் இயற்றிய அகத்தியம் தமிழ் இலக்கியத்தில் முதன்மையும், முதலாவதாகவும் கருதப் படுகிறது.தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது! அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது.

தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி "*அகத்தியம்*" என்னும் நூலை இயற்றினார்.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள 'உழவர் கரை'யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி 'அகத்தீஸ்வரம்' என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள்பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக் கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
1. அகத்தியர் வெண்பா, 2. அகத்தியர் வைத்தியக் கொம்மி, 3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம், 4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி, 5. அகத்தியர் வைத்தியம் 1500,
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி, 7. அகத்தியர் கர்ப்பசூத்திரம், 8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம், 9. அகத்தியர் வைத்தியம் 4600, 10. அகத்தியர் செந்தூரம் 300, 11. அகத்தியர் மணி 4000, 12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு, 13. அகத்தியர் பஸ்மம் 200, 14. அகத்தியர் நாடி சாஸ்திரம், 15. அகத்தியர் பக்ஷணி, 16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200, 17. சிவசாலம், 18. சக்தி சாலம், 19. சண்முக சாலம், 20. ஆறெழுத்தந்தாதி, 21. காம வியாபகம், 22. விதி நூண் மூவகை காண்டம், 23. அகத்தியர் பூசாவிதி, 24. அகத்தியர் சூத்திரம் 30, போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும் 25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம், 26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் - தமிழின் ஆதிகவி; - அகத்தியம் எனும் இலக்கண நூலின் ஆசிரியர்; - முதல் தமிழ்ச் சங்கத்தின் புலவர்; - தொல்காப்பியரின் ஆசிரியர். சமணர்களால் போற்றப் படுபவர்களின் பட்டியலிலும் அகத்தியர் இருக்கிறார். ஜாவா, சுமத்திரா தீவுகளுக்குச் சென்று சைவ சமயத்தைப் போதித்த சிவகுருவாகவும் அகத்தியர் இருக்கிறார். சிலப்பதிகாரம், - மணிமேகலை, - பரிபாடல்களிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டியன் புரோகிதர் அகத்தியர் என்று குறிப்புள்ளது. சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஒட்டி அகத்தியர் "பக்த விலாசம்" எனும் நூலை வடமொழியில் அகத்தியர் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமன்றி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாத முனிகளும், அகத்தியர் ஆணை பெற்றே நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இப்போதும் அகத்தியர் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.

பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியர் இருக்கிறார். இவ்வாறு அகத்தியர் - இலக்கியம், - இலக்கணம், - பக்தி, - மருத்துவம், - சமயம் என்று பன்முக ஆற்றல் கொண்டவராக மட்டுமின்றி - தமிழ்-வடமொழி; - சைவம்-வைணவம்; - சமணம்-புத்தம்; - இராமாயணம்-மகாபாரதம்; வடக்கு-தெற்கு; - இமயம்-குமரி, - கங்கை-காவிரி, - வடநாட்டார்-தமிழ்நாட்டார் ஆகியவற்றிற்கிடையே நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் திகழ்கிறார்.
குறிப்பாக தனிப்பட்ட மொழி, இனம், மதம், நாடு கடந்து இந்திய கலாச்சார வரலாற்றின் படிமமாக இந்தியா முழுவதற்குமான ஒட்டுமொத்த ஒரே படிமமாக (Icon) அகத்தியர் மட்டுமே தென்படுவது வியப்பையும் பெருமிதத்தையும் தருகிறது. மேலதிக பார்வைக்கு விஜயம் செய்க: http://keyemdharmalingam.blogspot.com/2011/07/1_12.html அன்புடன் கே எம் தர்மா...

No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!