சிவவாக்கியம் (166-170)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 166
நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பற்றி ஒற்றி நின்று நின்று பற்றறுத்து என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே!
நெற்றியைப் பற்றி உழன்று கொண்டிருக்கின்ற ஒரு நீல நிறம் உடைய விளக்கை குறு தொட்டுக் காட்ட உணர்ந்து கொள்ளுங்கள். பின் அதையே பற்றி அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கி நின்று தியானிக்க உலகப் பற்றுக்கள் யாவும் நீங்கும். அதனால் அநேக பலன்கள் கிடைக்கும். அதுவே இறைவனை அடையும் வழி என்பதை அறிந்து அந்நீல விளக்கையே உற்று நோக்கி தியானிக்க உள்வெளிக்குள் பரம்பொருள் ஒளி பொருந்திய சோதியாக ஒளிறும் . அதுவே ஈசன் அமர்ந்திருக்கும் இடம் என்பதை அறிந்து தவம் புரிபவர்கள் என்றும் அனாதியாக உள்ள ஈசனை அடைவார்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -167
நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.
பிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள். இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே!! இதனால் இறைவனை அடைய முடியுமா? உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து 'சிவயநம' என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் SERALAA
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -168
நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பராமயம் அதானவர்
அத்தளத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே!!!
விளக்கில் எரியும் தீபத்தை உற்றுப் பார்த்தால் அதன் நடுவில் நீல நிறம் பொருந்திய ஒளி வீசுவதை உணரலாம். அதுபோல நமது நெற்றியில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நீல நிறமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள். அதுவே இப்பிறவி உய்யும் வழி என உணர்ந்து அதன் உள்ளேயே அருட்பெருஞ் ஜோதியாகி விளங்கும் ஈசனைத் தியானித்துப் பாருங்கள். அவரே அனைத்திற்கும் நாதன் என்பதை உணர்ந்து, பக்தியால் பாடியும், ஆடியும் கண்ணீர்விட்டு கசிந்து தொடர்ந்து தியானியுங்கள். நீங்களே அப்பறம்போருளாக ஆவீர்கள். அதிலேயே இருந்து தியானமும் தவமும் செய்பவர்கள் எனக்கும் குருநாதன் அவார்கள்.
*****************************************************
சித்தர் சிவவாக்கியம் -169
கருத்தரிக்கும் முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கும் முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்!!!
தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடன் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்த கொண்டு 'சிவயநம' என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 170
கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.
ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு 'சிவயநம' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
ஐயா, சித்தர் சிவவாக்கியர் பற்றி நானும் கொஞ்சம் கேள்வியுற்றுளேன்...
ReplyDeleteஅவர் பற்றிய மின்னூட்கள் இருந்தால் எனக்கு அனுப்புங்கள், என்னிடமும் சில சித்தர்கள் பற்றிய மின்னூட்கள் உள்ளன, பகிர்ந்து கொள்வோம்...
அன்பு நண்பரே!! தமிழ்கிழம் என்னும் பெயரின் பின்னே உறைபவரே! இந்நூலின் தொகுப்பு வேலைதான் நடந்து கொண்டிருக்கின்றது. வெகு விரைவில் இதனை மின்நூலாக்கியபின் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். தங்களின் கருத்து பின்னூட்டத்திற்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅன்புடன் கே எம் தர்மா....
This comment has been removed by the author.
ReplyDeleteமிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பரே !! தமிழ் கிழம் அவர்களே!!! தங்களின் தகவல் மிகவும் உபயோகமுள்ளது. நான் அறிந்து கொள்ள வேண்டிய நினைத்திருந்த ஒரு விடயமிது. மிக்க வந்தனம்!!!
ReplyDelete