உடம்பும் நீயே!! உயிரும் நீயே!! அம்மா!!!!
தாய் தெய்வ வழிபாட்டில் என்ன மகத்துவம் இருக்கப்போகிறது. ஊர்தோரும் இருக்கும் அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் நெருப்பு மிதித்து சாக்கை ஊற்றுவது தான் அதன் மகத்துவமாக இருக்கலாம் என்று சிலர் கேலி பேசுவதும் உண்டு. அலகு குத்தி, ஆடு, கோழிகளை வெட்டி கொண்டாடும் வழிபாட்டில், தத்துவம் இருப்பது அதிசயம் அல்ல, விநோதம் என்றும் சிலர் பேசலாம். இவைகள் வெறும் கேலி மொழியாகவோ விதண்டாவாதமாகவோ நாம் எடுத்து கொள்ளலாம். அப்படி எடுத்து கொண்டால் அது சரியானதாக கூட தோன்றும். ஆனால் உண்மை நிலையை அது பிரதி பலிப்பதாக இருக்காது.
நமது இந்தியாவில் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்றுவரும் உயிர்பலி சடங்குகளில் பல அன்னை வழிபாட்டின் பெயரிலேயே நடக்கிறது எனலாம். அழகான பாண்டங்களை செய்து வைத்த குயவனின் முன்னாலேயே, அந்த பாண்டங்களை அடித்து உடைப்பது எப்படி மனிதாபிமானம் இல்லாத செயலோ, அப்படியே எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கின்ற அகிலாண்டேஷ்வரி அன்னை முன்னால் உயிர்பலி செய்வதும் ஆகும்.
எனவே தாய் தெய்வ வழிபாட்டில் உயிர்பலிகளும், கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களும் நிறைந்திருப்பதாகவே மேலோட்டமாக பார்க்கும்போது நமக்கு தோன்றும். இது மட்டுமல்ல தனது குழந்தையின் இரத்தத்தை விரும்பி சுவைப்பவள் தாயாக இருக்க முடியுமா? அப்படி பட்டவளை உலக அன்னையாக வழிபடுவது சரிதானா? என்ற எண்ணம் எழும்பினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


ஆதிகால மனிதன் வேட்டையாடி உயிர் கொலை செய்து தான் வாழ்கையை நடத்தினான். அப்படி வாழ்ந்த போது தனக்கு எது பிரியமானதோ, தனக்கு எது சுவையுடையதாக தெரிகிறதோ, அதையே தான் வணங்கும் தெய்வத்திற்கு சமர்பித்தான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே போல தான் ஆரம்பகால பழக்கத்தை கைவிட்டுவிட துணிச்சல் இல்லாமல் இன்று வரை பலியிட்டு வழிபடுவதை கடைபிடித்து வருகிறான். இதை நிறுத்திவிட்டால் தீங்கு ஏதாவது நடைபெற்று விடுமோ என்று அச்சப்படவும் செய்கிறான்
மேலும் பலிகொடுத்து வழிபடுவது என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான நடைமுறை அல்ல, யூத மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் கூட இத்தகைய வழிபாட்டு முறை இருந்து வருகிறது. ஆனால் நமக்கு அம்மன் கோயில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிடுவதுதான் காட்டுமிராண்டித் தனமாக தெரிகிறதே தவிர, மொஹரம் பண்டிகையில் உயிர்பலி கொடுப்பது தவறுதலாக படவில்லை. காரணம் உலகிலேயே இந்து மதத்தார் மட்டும்தான் தன்னைதானே இழிவுபடுத்தி கொள்ளும் ஜாதிகளாக இருக்கிறார்கள். அடுத்தவர்களின் குறை நிறையாக மட்டுமல்ல மேன்மை தங்கியதாகவும் நமக்கு படுகிறது.


அடுத்தாக தீ மிதித்தல், அலகுகுத்துதல் போன்ற முரட்டுதனமான வழிபாட்டு முறையை விமர்சனம் செய்பவர்கள் இதுதான் அம்மன் வழிபாடு தந்த கொடை என்கிறார்கள். அவர்கள் ஒரு விசயத்தை மிக நன்றாக உணர வேண்டும். நெருப்பை வளர்த்து அதை தனியவிட்டு, அதனுள் இறங்கி மற்றவர்களை நடக்க வைத்து நான் மட்டும் அழகுபார்த்தேன் என்றால் அது தவறு மட்டுமல்ல மனிதாபிமானமற்ற செயலாகும்.



No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!